பெண்களும் பழமொழிகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:47 PM | Best Blogger Tips


தாயை‌ச் ‌சிற‌ந்த கோ‌யிலு‌ம் இ‌ல்லை.

ஒ‌வ்வொரு ஆ‌ணி‌ன் வெ‌ற்‌றி‌க்கு‌ம் ‌பி‌ன்னா‌ல் ஒரு பெ‌ண் இரு‌ப்பா‌ர்.

ஆ‌ண் பு‌த்‌தி மு‌ன் பு‌த்‌தி, பெ‌ண் பு‌த்‌தி ‌பி‌ன் பு‌த்‌தி. (‌பி‌ன்னா‌ல் நட‌க்க‌ப்போவதையு‌ம் ‌சி‌ந்‌தி‌த்து‌ச் செய‌ல்படுவா‌‌ள்.)

அ‌ரிது அ‌ரிது பெ‌ண்ணா‌‌ய் ‌பிற‌ப்பது அ‌ரிது - ஒ‌ளவையா‌ர்

ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்கு சமம் - ஹெர்பட்

பெண்ணும், ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள் - பெஞ்சமின் பிராங்ளின்

பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனித சமுதாய‌ம் அறிவும் வளர்ச்சியு‌ம் பெறுகிறது - ஹெரிடன்

அழகான பெண் கண்களுக்கு விருந்து அளிக்கிறாள். குணமுள்ள பெண் இதயத்துக்கு இதம் அளிக்கிறாள் - நெப்போலியன்

வாஞ்சையின் சரித்திரம்தான் பெண்ணின் வாழ்க்கை - இர்விங்

விண்ணுல‌கில் கவிதை மலர்கள் விண்மீன்கள். மண்ணுலகில் கவிதை மலர்கள் பெண்கள் - ஹார்கிரேவ்

ஆண்களின் வாதம் சாதிக்காததை பெண்களின் பார்வை சாதித்துவிடும் - ஹெவில்.

அன்னையை எவரோடும் ஒப்பிடக் கூடாது, அவள் ஈடற்றவள்.

தந்தையின் அன்பு கல்லறை வரை, தாயின் அன்பு உலகுள்ள வரை.

பெ‌ண்‌ணி‌ன் அழகற்ற மனதைவிட அழகற்ற முகமே சிறந்தது!!!