டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூளை சுருக்கம் வருமாம்: ஆய்வில் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:29 PM | Best Blogger Tips
மனிதர்களின் வயோதிக காலத்தில் மூளை எடை குறைந்து விடுகிறது. 80 வயதில் மூளையின் உண்மையான எடை அளவில் 15 சதவீதம் குறைந்து விடுகிறது. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு மூளை சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 வகை நீரிழிவில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக ‘ரிஸ்க்'தான் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஞாபகசக்தி மற்றும் அறிவுத்திறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளையின் மேடுகள்

கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1 மில்லி மோல்கள் இருந்து வந்துள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால் ‘ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின் வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சர்க்கரை இருந்தால் சுருங்கும்

சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று ஆஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின் தெரிவித்திருக்கிறார். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

டென்சன் இருந்தால் மூளை சுருக்கம்

மூளைச் சுருக்க பாதிப்பை வயதானவர்கள் மட்டுமின்றி அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் பாதிப்பிற்குக் காரணம்.

மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும். நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

ஆரோக்கிய உணவுகள்

மூளைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காத வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகள், தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மூளை சுருக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள உணவுமுறையை தொடர்ந்து உட் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மூளை ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை உருவாக்க சில டிப்ஸ்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
குழந்தைகள் நகர்வதற்கு ஆரம்பித்த பிறகு, அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழலை ஓயாமல் ஆராய்ச்சி செய்ய துவங்கி விடுகின்றனர். இப்படி அவர்கள் துறுதுறுவென கண்டதையெல்லாம் எடுக்க ஆரம்பிக்கும் போது, சில விஷயங்கள் அவர்களுக்கு விளையாட்டாகவும், சில விஷயங்கள் ஆபத்தாகவும் முடிய வாய்ப்பிருக்கிறது. ஒரு பெற்றோராக நீங்கள் உஷாராக இருந்தாலும்கூட வீட்ட
ுச்சூழலில் எந்நேரமும் குழந்தையை, உங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது.

குழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான். இதைத்தான் "சைல்ட் ப்ரூஃபிங்" என்கின்றனர். இவற்றை செய்வதால் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் தன்னிச்சையாக சுற்றுப்புறத்தை ஆய்ந்து விளையாட அனுமதிக்கப்படும்போது, அவர்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் போன்றவை வளர்கின்றன. இப்போது அவர்களுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை எப்படி உருவாக்கலாம் என்று பார்ப்போமா!!!

பூட்டுகள்: அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளுக்கு பூட்டுகள் போடுவதால். குழந்தைகள் அவற்றில் உள்ள அபாயகரமான சாமான்களை எடுப்பதை தடுக்கலாம். சமையலறை மற்றும் பாத்ரூம் போன்ற இடங்களில் உயரம் குறைவான கேபினட்டுகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கெமிக்கல் க்ளீனர்கள், மருந்துகள் மற்றும் கூரான உபகரணங்கள் இருக்கக்கூடும்.

மின்சார பிளக் மூடிகள்: எதையுமே தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ள குழந்தைகள் முயற்சிக்கும் என்பதால் மின்சார பிளக் பாயிண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எனவே இவற்றுக்கு உறுதியான பிளாஸ்டிக் மூடிகள் வாங்கி பொருத்துவது அவசியம்.

வாயிற்கதவு: குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது அறையை விட்டு படிகளுக்கோ, பால்கனிக்கோ செல்லாமல் இருப்பதற்கு, ‘சேஃப்டி கேட்' எனப்படும் வாயிற்கதவு மிக அவசியம். இந்த கதவுகளானது சுவரில் நிரந்தரமாக பொருத்தப்படுவதோடு, குழந்தைகள் எளிதில் வெளியே தாண்டி வராத அளவு, அவர்களுக்கான கதவுகள் போன்று இருக்கும். மேலும் அந்த மாதிரியான கதவுகளில் இடைவெளிகள் கூட இருக்கும். ஆகவே அந்த கதவுகளை சரியாக கவனமாக பார்த்து வாங்கி பொருத்த வேண்டும்.

மருந்து மற்றும் விஷப்பொருட்கள்: எதையுமே எடுத்தவுடன் வாயில் வைக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இயற்கை என்பதால், இந்த விஷயத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே மருந்து பாட்டில்கள், கெமிக்கல் பெட்டிகள் போன்றவற்றை சாதாரணமாக திறந்த மாதிரி வைத்திருக்காமல், உறுதியான மூடியுடன் கூடிய பெட்டியில் வைத்திருப்பது நல்லது.

ஃபர்னிச்சர்: குழந்தை எழுந்து நடக்க ஆரப்பித்தப் பிறகு, அறையில் உள்ள இருக்கை போன்ற கனமான சாமான்கள் நகராமல் இருக்க, சுவருடன் இணைந்த பிராக்கெட்டுகள் (mounting brackets) மற்றும் ஸ்ட்ராப்புகள் (wall straps) போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. இப்படி செய்யாவிட்டால், புத்தக அலமாரிகள் மற்றும் டிரஸ்ஸிங் மேஜைகளை குழந்தைகள் இழுத்து ஏற முயற்சித்து, மேலே தள்ளிக் கொள்ளக்கூடும். மேலும், கூரான முனைகள் உள்ள டீப்பாய் போன்றவற்றின் நான்கு முனைகளில் பம்பர் பேடுகளை (padded bumpers) பொருத்துவதும் அவசியம்.

ஜன்னல்: ப்ளைண்டுகள் (blinds) மற்றும் தொங்கு திரைகள் (drapes) போன்றவற்றிலுள்ள கயிறுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகள் விஷயத்தில் அபாயமான ஒரு அம்சமாகும். ஆகவே இந்த கயிறுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. மேலும் ஜன்னல்கள் திறந்திருக்கும் போது, அதன் வழியாக குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க, ஜன்னலில் வலை போன்ற அமைப்பை பொருத்த வேண்டும்.

சமையலறை: சமையலறை என்பது குழந்தைகளுக்கு பல அபாய அம்சங்களுடன் காத்திருக்கிறது. ஏனெனில் அங்கு கூரான கருவிகள், ஆல்கஹால், மருந்துகள், தீக்குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், நச்சுக் கலந்த கெமிக்கல் பொருட்கள் போன்றவை இருப்பதால், எப்போதுமே அலமாரிகளில் வைத்து சேஃப்டி பூட்டுகள் மூலம் பத்திரப்படுத்த வேண்டும். குழந்தையை வைத்துக் கொண்டு சமைக்கும் போது பாத்திரங்களின் கைப்பிடிகள், ஸ்டவ்வின் பின்புறம் திரும்பியிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மைக்ரோவேவ் சாதனத்தை தொடக்கூடாது என்று குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும்.

நெருப்பு: ‘ஸ்மோக் அலாரம்' எனப்படும் தீப்பாதுகாப்பு அலாரம் மிக முக்கியமாக வீட்டின் எல்லா இடங்களிலும் பொருத்தப்படவேண்டிய ஒரு கருவியாகும். பேட்டரிகள் சரியாக இருப்பதையும், அலாரம் வேலை செய்கிறதா என்பதையும் மாதமொருமுறை உறுதிசெய்வது நல்லது. லைட்டர்கள் மற்றும் தீக்குச்சிகள் போன்றவற்றை எப்போதுமே எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். மெழுகுவர்த்திகள் ஏற்றும் போது, அவை சாயாத படியும், குழந்தைகளுக்கு எட்டாத படியும் வைக்க வேண்டும்.

மேற்கூறியவாறெல்லாம் பின்பற்றி வந்தால், குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். வேறு என்னவெல்லம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:27 PM | Best Blogger Tips
இந்த உலகில் உடலில் வரும் நோய்களுக்கு பெரும் காரணம் கிருமிகள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் உடலில் நோய் வருவதற்கு நாம் தான் காரணம். ஆம், என்ன நம்பமுடியவில்லையா? உண்மை தான். எப்படியெனில், நாம் எந்த செயலை சரியாக முறையாக செய்கிறோம். யாருக்கும் எந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவ்வாறு தெரியாததாலேயே, பல நோய்கள் உடலில் வந்து தங்கி, விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அது என்ன செயல்கள் என்று கேட்கலாம். உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் தான் மாற்றங்கள் என்று நினைத்தால், தற்போது உண்ட பின்பு கூட செய்யும் செயல்களில் வரவர மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலர் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று சாப்பிடப் பிறகு நடப்பது, சிகரெட் பிடிப்பது என்றெல்லாம் செய்வார்கள். இது மட்டுமின்றி, இதுபோன்று இன்னும் பல செயல்கள் இருக்கின்றன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அந்த செயல்களை இனிமேல் உண்ட பின்பு செய்யாமல், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகளை பின்பற்றி வாழுங்கள்.

புகைப்பிடிப்பது பெரும்பாலான ஆண்கள் சாப்பிட்டதும், ரிலாக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சிகரெட் பிடிப்பார்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட் பிடித்தால், அது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலானது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

பழங்களை சாப்பிடுவது உணவை குறைவாக சாப்பிட வேண்டும் என்று சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவோம். ஆனால் உணவு உண்ட பின்பு உடனே பழங்களை சாப்பிட்டால், வயிற்றில் காற்றானது நிறைந்து, மிகுந்த உப்புசத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே பழங்களை சாப்பிட வேண்டுமெனில், உண்ட பிறகு 1-2 மணிநேரத்திற்கு பின்னர் சாப்பிட வேண்டும். அதுவே உணவுக்கு முன் என்றால், 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

டீ குடிப்பது சிலர் உணவுக்குப் பின் டீ குடிப்பார்கள். ஆனால் அவ்வாறு குடிப்பது தவறு. ஏனெனில் டீயில் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே அப்போது உணவில் உள்ள புரோட்டீனானது, அளவிக்கு அதிகமாகி, பின் செரிமானமடையாமல் வயிற்றில் சிரமத்தை ஏற்படுத்தும்.

பெல்ட்டை கழற்றி வைப்பது உணவு உண்ட பின்பு, வயிறு இறுக்குவது போல் உள்ளது என்று சிலர் பெல்ட்டை கழற்றுதல் அல்லது தளர்த்துதல் என்று செய்வார்கள். இவ்வாறு உடனே கழற்றி வைத்தால், குடலானது சில நேரங்களில் திசை திரும்பி, அடைப்பு கூட ஏற்படு

உண்டவுடன் குளிப்பது என்பது ஒரு தவறான பழக்கம். ஏனெனில் இந்த செயலால் இரத்த ஓட்டமானது சீராக கைகள், கால்கள் மற்றும் இதர உறுப்புகளுக்குச் செல்லுமே தவிர, வயிற்றில் இரத்தமானது இல்லாமல் பலவீனமடைந்து செரிமானத்தின் இயக்கமானது பாதிக்கப்பட்டு, உணவு செரிமானமடையாமல் இருக்கும்.

பொதுவாக மக்கள் உணவை உண்டப் பின் சிறிது தூரம் நடந்தால், 99 வயது வரை வாழலாம் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான கருத்து. அவ்வாறு நடக்கும் போது ஏற்படும் செரிமானமானது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சாமல் முற்றிலும் வெளியேற்றிவிடும்.

சாப்பிட்டதும் தூங்கினால், உணவானது சரியாக செரிமானமடையாமல் இருக்கும். மேலும் இந்த செயலால், வாயுத் தொல்லை மற்றும் குடலில் ஏதேனும் தொற்றுநோய் வந்து, பின் வயிற்றில் பிரச்சனை ஏற்படும்.

பல நோய்களுக்கு நோய் நிவாரணியாக பயன்படும் அதிமதுரம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips
மருத்துவ குணங்கள்..!

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்க ள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

வழுக்கை நீங்கி முடி வளர ....

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

நன்றி
பரமக்குடி சுமதி
 
வெற்றி மந்திரம்: உங்களைப் புறக்கணிப்பவர்களை வெற்றியால் வெல்லுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

ஆசை இல்லாத மனிதர்கள் உலகில் இல்லவே இல்லை. புத்தர்கூட “ஆசையை ஒழிக்க வேண்டும்” என்று ஆசைப்பட்டார். ஆசைப்படுவதே தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் ஆசையை வெளிப்படுத்தத் தயங்கியே, பலர் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள்.

ஆம்Ð மிகச்சாதாரண ஒரு விஷயத்திலே உங்கள் மனஉறுதியை கணித்துவிட முடியும். “நான் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்லப்போகிறேன்” என்று கிளம்பிப் பாருங்கள்.

வீட்டில் இருப்பவர்கள் தொடங்கி, அறிந்த தெரிந்த அத்தனை பேரும் முதலில் கேலியாக சிரிப்பார்கள். “தினமும் காலையில் எட்டு மணி வரை தூங்கும் பழக்கம் இருக்கும் உங்களால் எப்படி நடைபயிற்சி செய்ய முடியும்” என்று சீண்டுவார்கள்.

அவர்களுக்காக ஒரு வாரம் நடைபயிற்சி செய்து காட்டினாலும், “இதெல்லாம் கொஞ்சநாள் வரைக்கும் தான், அதற்கப்புறம் கும்பகர்ணன் மாதிரி தூங்கத்தான் போறீங்க” என்று கிண்டல் செய்வார்கள்.

அதற்குப் பின்னரும் நீங்கள் நடந்து கொண்டிருந்தாலும் “நீங்க என்ன வேகமாவா நடக்கறீங்க, சும்மா ஜாலியா நடக்கறீங்க. இப்படி மெதுவா நடக்கறதெல்லாம் வேஸ்ட் தெரியுமா?” என்று விமர்சிப்பார்கள்.

ஒரு சாதாரண நடைபயிற்சிக்கே இத்தனை கிண்டல், கேலி என்றால் ஏதாவது புதுமையான முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கிளம்பினால் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தியுங்கள்.

“இவனெல்லாம் புதுசா பிசினஸ் செஞ்சா நாடு உருப்பட்ட மாதிரி தான். புதுசா செய்றதெல்லாம் ரிஸ்க், எப்பவும் போல பழைய பாணியிலேயே செய்” என்று ஆர்வத்துக்கு தடை போடத்தான் செய்வார்கள்.

இப்படிப்பட்ட கேலிகளுக்கும், விமர்சனங்களுக்கும் பயந்தே ஏராளமான நபர்கள் தன்னுடைய திறமைகளை ஒளித்து வைத்துவிடுவார்கள்.

“தம்மை விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை” என்ற உறுதியுடன், தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவர்கள் மட்டுமே வெற்றிக் கோட்டைத் தொட முடியும்.

இதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் தான் மைக்கேல் பெல்ப்ஸ்.

பெல்ப்ஸ்க்கு சின்ன வயதிலேயே ஏ.டி.எச்.டி. எனப்படும் அட்டன்ஷன் டிபிசிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர்” என்ற பிரச்சனை இருந்தது.

இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எந்த இடத்திலும் கொஞ்சநேரம் கூட அமைதியாக இருக்க முடியாது. எந்தப் பாடத்திலும் முழுமையாக மனம் செல்லாது.

ஆசிரியர் சொல்லித் தருவதை கவனிக்கப் பிடிக்காது அல்லது முடியாது. அதிக துடிதுடிப்புடன் ஏதாவது பிடித்த வேலையை மட்டும் தொடர்ந்து செய்வது, திடீரென கையில் இருக்கும் பொருட்களைத் தூக்கி எறிவது என்று ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.

இந்தக் காரணங்களால் பெல்ப்ஸ், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் முதல் உடன் படிக்கும் மாணவர்கள் வரை அனைவரது கேலிக்கும் ஆளானான். அதுமட்டுமின்றி இவனுக்கு முன்னதாகப் பிறந்த சகோதரிகள் நல்ல புத்திசாலியாக இருந்ததால் அவர்களும் பெல்ப்ஸை ஒரு புழுவைப் போன்று பார்த்தார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் அன்புக்குப் பதிலாக புறக்கணிப்பை மட்டுமே பெற்றவர் பெல்ப்ஸ்.

அதனால் பெல்ப்ஸை மட்டும் தனியே அக்கரை எடுத்து கவனிக்க முடிவெடுத்தார் அவரது தாயார். இதுவும் வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்கள்.

தனி மரமாக இருந்த அவரது அம்மா தெபோரா, உதவாக்கரை என்று சொல்லப்படும் மகனை உருப்படியான மனிதனாக்க முடிவெடுத்தார். அவனது விருப்பம் எதுவென அறிந்து நீச்சல் பயிற்சியில் இறக்கினார். முழு நேரமும் நீச்சலில் ஆர்வமாகவும், முழுக் கவனத்துடனும் செயல்பட்டார் பெல்ப்ஸ்.

“இந்த உலகமே உன்னை புறக்கணிக்கிறது பெல்ப்ஸ், நீ சாதனைகள் செய்து வெற்றி பெறுவதன் மூலமே அனைவரையும் வெல்ல வேண்டும்” என்பதை தன் மகனுக்கு மந்திரம் போன்று ஓதினார் தெபோரா.

அவன் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கிய தொடக்கத்தில், “பாதி போட்டியிலேயே திரும்பி விடுவான், மந்தப்புத்திக்காரன்” என்று நிறைய பேர் கிண்டல் செய்தார்கள்.

ஆனால் எவரிடமும் பதில் பேசுவது அல்லது சண்டை போடுவது தன்னுடைய வேலை இல்லை என்பதை உணர்ந்திருந்தார் பெல்ப்ஸ். அதனால் தான் பேசுவதை விட, தன்னைப்பற்றி இந்த உலகமே பேசும் படி செய்ய வேண்டும் என்று முடிவுகட்டி முழுமையாக நீச்சலில் கவனம் செலுத்தினார்.

எந்த நேரமும் தண்ணீரிலேயே சாதனைக்காக தவம் கிடந்தார். அதற்குப் பலன் கிடைத்தது. சீனாவில் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் கோட்டியில் ஒட்டுமொத்தமாக 8 தங்க மெடல்கள் வாங்கி உலக சாதனை படைத்தார்.

அதுவரை ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் ஒருவர் 7 மடல் வாங்கியது தான் உலக சாதனையாக இருந்தது. அதனை முறியடித்தது மட்டுமின்றி, வெற்றி பெற்ற 8 போட்டிகளில் 7ல் உலக சாதனை படைத்து புதிய அத்தியாயம் படைத்தார் பெல்ப்ஸ்.

மந்தப்புத்திக்காரன், உதவாக்கரை, மூளை சரியில்லாதவன் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பெல்ப்ஸ் பெயரை உச்சரிக்காதவர்கள் இன்று எவரும் இல்லை. அவரது புகைப்படத்தை வெளியிடாத பத்திரிக்கைகள் இல்லை.

மாபெரும் குறையினால் பாதிக்கப்பட்ட பெல்ப்ஸ், அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பெல்ப்ஸ் உலக சாதனை புரிய முடியும் என்றால் நம்மால் முடியாதா? பிறர் புறக்கணிப்புக்கு என்று இடம் கொடுக்காதீர்கள். அவர்களது விமர்சனத்திற்கு பயந்து ஆர்வத்தை மூட்டைகட்டி வைக்காமல் போராடக் களத்தில் குதியுங்கள். வெற்றிகளைத் தட்டிப்பறியுங்கள்.

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை யூஸ் பண்ணுங்க…

மணக்கால் அய்யம்பேட்டை | 12:40 PM | Best Blogger Tips

தற்போது இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை. இவ்வாற
ெல்லாம் இருந்தால், கூந்தல் கொட்டாமலா இருக்கும். ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து செய்து பாருங்களேன்…

* நெல்லிக்காய் எண்ணெய் (amla oil)- கூந்தல் உதிர்தல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் எண்ணெய் சரியானதாக இருக்கும். ஏனெனில் இந்த எண்ணெயில் கூந்தல் நன்கு உறுதியாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த எண்ணெயில் நெல்லிக்காய் தான் முக்கியமான பொருள். இந்த பொருள் கூந்தலை எண்ணெய் பசையுடனும், கூந்தலை நன்கு வளர்ச்சியடையவும் செய்யும். ஆகவே இந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து பின்னர் தூங்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

* தேங்காய் எண்ணெய் – அனைவருக்கும் நன்கு தெரிந்த எண்ணெய் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் தான் கூந்தல் உறுதிக்கும், முடியின் வேர்கள் வலுவடைவதற்கும் சிறந்தது என்று நம் முன்னோர்கள் எல்லாம் சொல்வார்கள். அதேப்போன்றும் இந்த எண்ணெயும் உண்மையில் சிறந்தது தான். ஆகவே தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தடவி, மசாஜ் செய்து குளித்து வர வேண்டும். வேண்டுமென்றால், தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால், பொடுகு போய்விடும்.
* கடுகு எண்ணெய் – கூந்தல் உதிர்தலுக்கு கடுகு எண்ணெயுடன், மருதாணியை சேர்த்து, தேய்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படாமல் தடுக்கலாம். அது எப்படியென்றால், முதலில் கடுகு எண்ணெயுடன், சிறிது மருதாணி இலைகளை போட்டு, காய வைத்து, பின் அதில் உள்ள இலைகளை நீக்கி, ஸ்கால்ப் மற்றும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கடுகு எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3, கூந்தல் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
* ஆமணக்கெண்ணெய் – கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கெண்ணெய் தான். இந்த எண்ணெயை ஸ்கால்பிற்கு மட்டும் தடவ வேண்டும். கூந்தல் முழுவதும் தடவினால், பின் அந்த எண்ணெய் பசையை நீக்குவது என்பது கடினமாகிவிடும். ஆகவே இந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது தலைக்கு தடவி, தலைக்கு துணியைச் சுற்றி, பின் காலையில் எழுந்து குளித்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், இதன் பலனை சில வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.
* மீன் எண்ணெய் – உண்மையில் மீன் எண்ணெய் கூந்தல் உதிர்வதை நிறுத்தி, முடி வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகிறது. என்ன மீன் எண்ணெய் என்று சொன்னதும் எப்படி அதைப் போய் தேய்ப்பது என்று யோசிப்பீர்களே! மீன் எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் நாற்றத்தை தாங்க முடியாது தான். ஆகவே அதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாம். இதனால் கூந்தல் உதிராமல், ஆரோக்கியமாக வளரும்.
ஆகவே மேற்கூறியவற்றில், ஏதேனும் ஒன்றை செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, அடர்த்தியாக வளரும்.

கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால் :-

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கூந்தலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்கின்றனர். தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் போல தேங்காய் பால் கூந்தலை பாதுகாக்க உதவுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு உதிராமல் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், பொட்டாசியம், போலேட் போன்றவை காணப்படுகின்றன.

தேங்காய் பால் ஊட்டச்சத்து
தலைமுடிக்கு ஏற்றவாறு தேங்காயை எடுத்து (ஒரு மூடி) சிறிது வெந்நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும்.
தலையை சுத்தமாக அலசி காயவைத்து பின்னர் தேங்காய் பாலை மெதுவாக வேர்கால்களில் படுமாறு அப்ளை செய்யவேண்டும். தண்ணீர் போல இருப்பதால் பூசிய உடன் நன்கு கவர் போட்டு கூந்தலை கட்டிவிட வேண்டும்.
இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் தலையில் தங்கிவிடும். இரண்டு நாள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
கூந்தலை பாதுகாக்கிறது
தேங்காய் பால் தேய்த்து குளிப்பதால் தலையில் இருந்து அதிக அளவில் முடி கொட்டுவது கட்டுப்படும். தலையில் புதிய முடிகள் உருவாகும். நீளமான கூந்தல் கிடைக்கும். மென்மையாகவும், பளபளப்பாகவும் கூந்தல் மாறும்.
வாரம் ஒருமுறை தேங்காய்பாலில் தலை குளிப்பதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதனால் அழகான, ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே தேங்காய் பால் கூந்தல் அழகை மட்டுமல்லாது உடல் அழகையும் சீராக பராமரிக்கிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips
துளசி:-

1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.

2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:-

1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.

2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

அருகம்புல்:-

1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.

சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.

3. உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக்.

4. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான்.

வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும்.

join nagapattinamnews@gmail.com

6. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.

அரச இலை:-

1. ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.

2. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது.

3. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.

பூவரசு:-

1. நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம்.

2. சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.

கல்யாண முருங்கை (முள் முருங்கை):-

1. அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும்.

2. நீர் பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும்.

3. நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:-

1. சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது.

2. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.

3. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).

தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி:-

1. இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும்.

2. காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கறிவேப்பிலை:-

நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எ¡¢ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.

புதினா:-

நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.

கற்பூர வல்லி (ஓமவல்லி):- 1

1. மிகச் சிறந்த இருமல் மருந்து.

2. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.

3. புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்

வல்லாரை:-

1. நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.

2. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

கண்டங்கத்தி¡¢:-

காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

தூது வேளை:-

1. நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது.

2. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

3. காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.

மஞ்சள் கா¢சாலங்கண்ணி:-

காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.

செம்பருத்தி:-

1. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது.

2. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது.

3. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது.பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.

மணத்தக்காளி கீரை:-

1. இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது.

2. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகா¢க்கிறது.

3.காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.

தும்பை:-

1. பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது.

2. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும்.

3. தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.

வெங்காயமும் பூண்டும்:-

1. கிறுமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும்.

2. கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.

*குப்பைமேனி:-

1. ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது.

2. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும்.

3. எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பஊச்சலாம்.

4. சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும்.

5. வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/18117_124109441084043_750459396_n.jpg
 
வாய்ப் புண் பற்றிய தகவல் மற்றும் வீட்டு வைத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips
வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.

பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும்

ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

join nagapattinamnews@gmail.com

பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

தடுக்க வழியுண்டா?

அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:

- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது

இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

மன அழுத்தத்தை போக்கும் ஏலக்காய்…

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

1. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

2. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

3. மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும் போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

4. நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

join nagapattinamnews@gmail.com

5. வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

6. விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

7. வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வா

சளியை விரட்டும் கருந்துளசி…!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 PM | Best Blogger Tips
‘சனி பிரச்னையிலிருந்து கூட தப்பிச்சுடலாம்… இந்த சளி பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது…’ என்று சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ‘டர்…புர்’னு மூக்கை சிந்தியவாறு வாடிக்கையாக நாம் பார்க்கும் மனிதர்கள் ஏராளம். இந்த சளித்தொல்லையை நீக்கும் அரிய மருந்துச்செடியாக கருந்துளசியை குறிப்பிடலாம்.

நம் உடலில் ஏற்படக்கூடிய எந்த நோயையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘சிறுதுளி பெருவெள்ளம் போல’ சிறுசளி பெரிய பிரச்னையை உருவாக்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் சீராக இருந்தால், எந்த நோயையும் ஈசியாக விரட்டி விடலாம். குறைவாக இருக்கும் பட்சத்தில் சளி போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது. இது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து நமது மூச்சுப்பாதையை பாதித்து நச்சாகி விடுகிறது.

நுரையீரல் பகுதியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக நம் உடலில் இயற்கையாகவே உருவாக்கப்பட்டதுதான் சளி. இது பல்கி பெருகும்போது, அதிகளவு சளியை வெளியேற்றி, மீண்டும் இதனால் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக மருந்துகளை நாம் உட்கொண்டு வருகிறோம். அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சில மாறுதல்களை செய்தால், இந்த பிரச்னையை ஓரளவு சரி செய்யலாம். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சின்ன வெங்காயம் போன்றவைகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.

கருந்துளசியை சளித் தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின், இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன. சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இது பாலின் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளியை நீக்குகிறது. நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும்.

அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அந்த காலத்தில் வீட்டில் துளசி செடிக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி வளர்ப்பார்கள். இப்போ, ‘அந்த இடத்திலேயும் ஒரு பிளாட் கட்ட முடியுமா… பாருப்பா’ என்று கேட்கும் காலம் வந்து விட்டது. பின்னே ஏன் நோய் அதிகரிக்காது?
சளியை விரட்டும் கருந்துளசி…!
=======================

ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...

ஆண் என்பவன் யார்..?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...!
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]

ஆப்ரிகாட் பழம் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips
பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின்

நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

தோல்நோய்களை நீக்கும்

இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

நரம்புகளை வலுப்படுத்தும்

பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள்
எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி

மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கண்பார்வை தெளிவாகும்

வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.
ஆப்ரிகாட் பழம் உடல்நல நன்மைகள்:-

பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:00 PM | Best Blogger Tips
பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே , தட்சிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் , காத்திருந்தார் . அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி " தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை , அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் , " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார் .

" துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ? தர்மம் தெரிந்த பீஷ்மர் , அந்தச் சபையில் அமர்ந்து , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது ? " என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள் .

அப்பொழுது பீஷ்மர் பேசினார் . " பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை . அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் . அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும் .

துரியோதனன் , அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான் . ஆனால் , அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு , அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான் . உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க , வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு சல்லியன் ஓர் உதாரணம் .

" ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் , மற்றவர்களுக்கு அன்னமிட்டால் , அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும் . நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."

" ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது . அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது . எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .

அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள் , பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள் .
பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?
==================