வாழை இலை

மணக்கால் அய்யம்பேட்டை | 6:00 PM | Best Blogger Tips
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெறுகின்றோம் என்று நம் எல்லோருக்கும் தெரியும் . நாம் இப்போது வாழை இலையின் மகத்துவம் , அதன் பயன்பாடுகள் என்னென்ன என்று பார்ப்போம் . நிறைய பயன்பாடுகள் உண்டு . நாம் இந்த வாழை இலையில் இருந்து பல தேவைகளை பூர்த்தி செய்கின்றோம் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

"Follow us on Twitter @Tamizh_Payilvom"

https://twitter.com/Tamizh_Payilvom



"Join our blog"

ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 PM | Best Blogger Tips
ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்...

சிலர் என்ன தான் எடையை குறைக்க முயன்றாலும் எடை குறையாமல் இருக்கும். அதிலும் சரியான டயட், உடற்பயிற்சி என்று நிறைய நேரம் உடல் எடையை குறைப்பதற்கே நேரத்தை செலவழிப்பார்கள். ஆனால் சிலர் என்ன செய்தாலும், உடல் எடை அதிகரித்துக் கொண்டு தான் இருக்குமே தவிர குறையாது.

இதற்கு காரணம் தைராய்டு வகைகளில் ஒன்றான ஹைப்போ தைராய்டிசமாக இருக்கலாம். ஏனெனில் ஹைப்போ தைராடிசத்தினால், உடல் எடை அதிகரிக்கும். இதற்கு தைராய்டு சுரப்பியானது, தைராய்டு ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்காமல், அளவுக்கு குறைவாக சுரப்பதே ஆகும்.

மேலும் இந்த ஹைப்போ தைராய்டிசம் வந்தால், செரிமான மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாடுகளைக் குறைத்துவிடும். ஏனென்றால், தைராய்டு ஹார்மோன்கள் தான் இதன் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது.

எனவே இதற்கு தீர்வாக மருத்துவர்கள், அயோடின், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட சொல்வார்கள். இப்போது அந்த மாதியான ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா...

பச்சை இலைக் காய்கறிகள் :

தைராய்டு சுரப்பி குறைவாக ஹார்மோனை சுரப்பதால், அவற்றை சரிசெய்ய காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் டயட்டில் சேர்க்க வேண்டும். அதிலும் நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஏனெனில் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டால், செரிமான மண்டலமானது பாதிக்கப்படும். ஆகவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டை கோஸ், முளைப்பயிர்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

பழங்கள் :
பழங்களில் சாறுள்ள பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததாக இருப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும். எனவே தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாறுள்ள பழங்கள் சிறந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பழங்களில் ப்ளூபெர்ரி, செர்ரி, ப்ளம்ஸ், கிவி, தக்காளி, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை தினமும் உண்ணும் உணவில் சேர்க்க வேண்டும்.

தானியங்கள்:
தானியங்களான ப்ரௌன் அரிசி, ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

மேலும் உடலில் சுரக்கும் தைராய்டு ஹார்மோனின் அளவை சரியாக சுரக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, தானியங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைந்த அளவில் இருப்பதால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. எனவே தான், ஹைப்போ தைராய்டிசமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுகள் மிகவும் அவசியம்.

ஒமேகா-3:
ஃபேட்டி ஆசிட் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. அதிலும் சாலமன், கானாங்கெழுத்தி போன்ற மீன்களில் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் ஹைப்போ தைராய்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் அதிகமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட சொல்வார்கள். ஏனெனில் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியாக இயங்க வைத்து, உடல் வீக்கங்களைக் குறைக்கிறது.

சிக்கன்:
ஹைப்போ தைராய்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், முட்டை, சிக்கன், வான்கோழி போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. சொல்லப்போனால் இரும்புச்சத்து குறைபாடும் ஒரு வகையில் ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறி தான். எனவே, இத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், தைராய்டு ஹார்மோனின் அளவை சரியாக சுரக்க வைக்கலாம்.

குழந்தைகள் அழகாக இருக்க, முதல்ல இத படிச்சு பாருங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:07 PM | Best Blogger Tips
குழந்தைகள் அழகாக இருக்க, முதல்ல இத படிச்சு பாருங்க...

குழந்தைகள் ஒரு தேவதை போன்றவர்கள். அதனால் தான் அனைத்த குழந்தைகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றனர். ஆனால் இந்த நவீன உலகத்தில் என்னதான் குழந்தைகளாக இருந்தாலும், சுத்தமாக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.

சில புதிய பெற்றோர்கள் குழந்தைகளை மென்மையாக பட்டுப் போன்று பார்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு எந்த ஒரு வலியும் இருக்கக்கூடாது, ஏன் அவர்களை அழுத்திப் பிடிக்கக் கூட விட மாட்டார்கள். அவ்வாறெல்லாம் இருக்க வேண்டியது தான். ஆனால் அவை குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும். எனவே தான், பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உதாரணமாக, இந்த காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது குழந்தைகளை தூக்கும் போது, குழந்தை அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டால், பின்னர் மறுமுறை அவர்கள் குழந்தையை தூக்கவே யோசிப்பார்கள். எனவே இந்த மாதிரியான எண்ணம் மற்றவர்களுக்கு வராமலிருக்க, குழந்தைகளுக்கு எப்போதும் டயப்பரை அணிவிக்க வேண்டும். இதுப் போன்ற ஒருசில அடிப்படைகளை அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது அந்த அடிப்படைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நகங்களை வெட்டுதல் :
குழந்தைகளின் கால்கள் மற்றும் கைகளில் உள்ள நகங்களை வெட்டுவது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் கடினம் என்று நினைத்துவிட்டு விடாமல், பொறுமையுடன் அவர்களின் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.

பற்களை சுத்தமாக வைத்தல்:
குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போதே, அவர்களுக்கு பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்கும் பழக்கத்தை பழக்கிவிட வேண்டும். வேண்டுமெனில் ஆரம்பத்தில் அவர்களுக்கு 'பேபி மௌத் வாஷ்' கூட பயன்படுத்தலாம்.

ஹேர் ஸ்டைல்:
குழந்தைகளின் முடியானது எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. அவர்கள் செய்யும் சுட்டித்தனத்திற்கு முடி பேய் போன்று வந்துவிடும். ஆகவே அவர்களுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் கூந்தலை வெட்டி விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

குளிக்க வைத்தல் :
குழந்தை தானே என்று வாரத்திற்கு ஒரு முறை குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே குளிர்காலமாக இருந்தால், வாரத்திற்கு மூன்று முறையும், கோடை காலமாக இருந்தால், தினமும் குளிப்பாட்ட வேண்டும்.

நாற்றமின்றி இருக்க...
குழந்தைகளின் உடலில் இருந்து துர்நாற்றம் வராது என்று நினைக்கிறீர்களா? ஆம். ஆனால் அவர்கள் மீது பால் வாடை வரும். எனவே அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி பவுடரை போட்டு விட வேண்டும்.

உடைகள்:
குழந்தைகளின் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் பெரிய உடைகளை அணிவிக்க வேண்டாம். இவை குழந்தைகளின் அழகை கெடுத்துவிடும். எனவே அவர்களுக்கு நல்ல பொருத்தமான, வறட்சியான உடைகளை அணிவிக்க வேண்டும்.

கூந்தல்:
குழந்தைக்கு கூந்தல் குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

துணி :
குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களது கழுத்திற்கு மறக்காமல், துணியை கட்டிவிட்டு, பின் உணவை ஊட்ட வேண்டும். இதனால் அவர்கள் மற்றும் அவர்களது உடை அழுக்காகாமல் தடுக்கலாம்.

மென்மையான சருமம்:
குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால் மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

ஷூ :
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு ஷூக்களை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

பிறந்தநாள் உடை:
குழந்தைகளை ஆடையில்லாமல் இருக்க விட வேண்டாம். பின் இது அவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கமாகிவிடும்.

டயப்பர் :
குழந்தைகள் தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி யாரேனும் வீட்டிற்கு வந்தாலும், குழந்தைகளுக்கு அணிவித்திருப்பது நல்லது.

தமிழன் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) ஒரு அதிசிய விஞ்ஞானி !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:47 AM | Best Blogger Tips
தமிழன் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) ஒரு அதிசிய விஞ்ஞானி !!!!

தமிழகத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தாலும் தன் பேரறிவாலும், உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகள் புரிந்து பிற்காலத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) (1893-1974). இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் வாகனத்தைத் தயாரித்த பெருமை உடையவர் இவர். உலகத் தர
ம் வாய்ந்த முதல் மின் சவரக் கத்தி, ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ,மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் பிழியும் கருவி, திரைப்படக் காமிராக்களில் தூரங்களுக்கேற்ப சரி செய்து கொள்ளும் கருவி, பெட்ரோலால் இயக்கப்படும் இரு இருக்கை மோட்டார் கார், சில விவசாய புதுக்கண்டுபிடிப்புகள் என்று ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த மேதை அவர். கல்வித் துறையிலும், தொழில் துறையிலும் பல மைல் கல்களை உருவாக்கிய பெருமை அவருக்குண்டு.

நாயுடு உருவாக்கிய பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன. நீரிழிவு, ஆஸ்துமா, வெள்ளைப்போக்கு போன்ற நோய்களுக்கு நாயுடு கண்டுபிடித்த மருந்துகளை அமெரிக்க மருந்து கம்பெனி "ஸ்பைசர்" வாங்கிக் கொண்டது.

ரூ.2 ஆயிரத்து 500க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும் என்றார் நாயுடு. அதற்கான புளு பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், நானோ காருக்கு முன்னோடியாக நாயுடு கார் இருந்திருக்கும்.

குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு தயாரித்தார். அதன்படி 7.11.1967 காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்தநாள் 3.45 மணிக்கு கிரகப்பிரவேஷம் நடத்தப்பட்டது. அவ்வளவு வேகமான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் ஷேவிங் மெஷின், மின்சார மோட்டார், சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் சமையலறை சாமான்கள், 640 பூட்டுகளை ஒரே சாவியில் திறக்கும் மாஸ்டர் கீ என்று பல்துறை வித்தகராக இருந்தார். தொழில் நுட்பம் என்பதை எட்டாத உயரத்தில் இருந்து இறங்கி, எளிமைப்படுத்தியதுதான் நாயுடுவின் வாழ்நாள் சாதனை


பல வெற்றியாளர்கள் தங்கள் வெற்றியோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். அவர்கள் முன்னேற்றம் அவர்களுடனேயே முடிந்து விடுகிறது. தாங்கள் கண்ட வெற்றியை பிற்கால சமூகமும் பெற வேண்டும் என்று எண்ணி அதற்காக முயற்சிகள் மேற்கொள்பவர்கள் வெகு சிலரே. ஜி.டி.நாயுடு அந்த வெகு சிலரில் ஒருவர்.

அறிவு தாகம் மிக்க அவருக்கு இளைஞர் சமுதாயத்தின் மீது அதீத அக்கறை இருந்தது. கோயமுத்தூரில் சில கல்வி நிறுவனங்கள் துவங்கக் காரணமாக இருந்த அவர் ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொருத்தே அமைகின்றது என்று நம்பினார். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி வாழப்படுகிறது என்பதை அறிய அக்காலத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு புள்ளி விவரத்தைப் பெற்ற அவர் கூறுகிறார்: “இளம் உள்ளங்கள் நன்மை தீமைகளை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எப்படி உண்பது? எப்போது உண்பது? எப்போது உறங்குவது, எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது எப்படி பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இதையெல்லாம் நாள் தோறும் செய்கிறார்கள். ஆனால் ஒழுங்கற்ற முறையில்! அவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து விளையாட்டிலும், திரைப்படத்திலும், விழாக்களிலும், நாவல்களிலும் நேரத்தை வீணாக்குகின்றனர்.

இளைஞர்களின் எண்ணங்கள் களியாட்டங்களையும், வீண் பொழுது போக்குகளையும் சுற்றியே வட்டமிடுமானால் அவர்கள் சக்தி சிதறுவதுடன் உடலும், உள்ளமும் கெடுகின்றன என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். 1953 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றிய போது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். “நீங்கள் எந்தத் தீய பழக்கத்திற்கும் அடிமையாகி விடாதீர்கள். தவறி அடிமைப்பட்டு விட்டால் அதனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் பாழாவதோடு மனித சமுதாயமும் நஞ்சூட்டப்படுகிறது. சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதுக்குள் தான் தீய பழக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றை இளம் வயதிலேயே மாற்றா விட்டால் பிறகு எப்போதுமே மாற்ற முடியாது. மாணவப் பிராயத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும் தைரியமும் தீய பழக்கத்தை எளிதாக ஒழித்து விடக் கூடியவை. இளைஞர்கள் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் ஏற்பட வேண்டும். பரந்த நோக்கு ஏற்பட வேண்டும். நீங்கள் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பிலோ தேறா விட்டாலும் அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தீய பழக்கங்களை விட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்மைக்காக போராடும் உள்ளத்தோடும், ஆழ்ந்து நோக்கும் பிரச்னைகளை ஆராயும் தன்மையோடும் நீங்கள் இங்கிருந்து வெளியேறுவீர்களேயானால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்”

“நீங்கள் நிறைய கற்பதற்கும், உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும், வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இது தான் தக்க பருவம். உலகின் மிகப் பெரிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் பார்ப்பீர்களேயானால் அவர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றிருந்தாலும், பெறா விட்டாலும் நிறைய உழைத்தவர்களாக, அறிவைத் தேடி ஓடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக அமைகிறார்கள்”

ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை அவர் ஒரு போதும் எள்ளளவும் வீணாக்கியதில்லை. இயந்திரங்கள், தொழில் நுட்பம் சம்பந்தமாக உலகில் எங்கு கண்காட்சி நடந்தாலும் கண்டிப்பாக அங்கு சென்று முழு நேரமும் அங்கு இருந்து தன் அறிவு தாகத்தைத் தீர்த்துக் கொள்வார். 1939 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் உலகக் கண்காட்சி நடைபெற்றதைக் காணச் சென்றார். அதுபற்றி பின்னர் குறிப்பிட்ட போது அவர் கூறுகிறார்: “நான் கண்காட்சிக்கு தினமும் தவறாமல் சென்று வந்தேன். தினமும் நான் தான் காட்சி சாலைக்குள் நுழைவதில் முதல் மனிதனாகவும், வெளி வருவதில் கடைசி மனிதனாகவும் இருந்தேன். காலை உணவை முடித்துக் கொண்டு காட்சி சாலைக்குப் போவேன். மாலை வரையில் ஒன்றுமே உண்ணாமல் இயந்திரங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்புவேன்”

வாழ்க்கையின் ஆரம்பத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைந்த பிறகும் அவர் இப்படியொரு ஆர்வத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது அவருடைய உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால் தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் ஜி டி நாயுடுவைக் குறித்து சொல்கையில் “இலட்சத்தில் ஒருவர் என்று சொல்வது கூட அவரைக் குறைத்துச் சொல்வது போலத் தான்” என்றார்.

இளைஞர்களே அவர் கூறியதைப் போல உங்கள் இளமைக் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கவனமாக இருங்கள். உங்கள் சக்தியையும், காலத்தையும் வீணக்காமல் முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தீர்களானால் அவரைப் போல் நீங்களும் கால மணலில் காலடித் தடங்களை விட்டுப் போகலாம்!

உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க இதோ சில டிப்ஸ் .....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:18 AM | Best Blogger Tips
உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க இதோ சில டிப்ஸ் .....

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன்

மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான்

கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில்

மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது

அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்

உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே

அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி

திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல

மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட

நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை

கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள

மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது.

அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு

தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம்

கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும்

சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால்

மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது மல்லிப்பூ

அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள்.

நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம்.

இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ

சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும்

தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள். மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல்

உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை

சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால்,

மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம். எனவே வீட்டில்

இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும்

பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதன கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும்

சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்...

கூந்தலை நேராக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips
கூந்தலை நேராக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க...

பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் தான், இந்த மாதிரியான கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் சுருட்டை முடி இருப்பவர்களுக்கு கூந்தலை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டுமெனில், தலை சீவுவதற்காகவே ஒரு மணிநேரத்தை செலவிட வேண்டும். இதற்காகத் தான் அவர்கள் கூந்தலை நேராக்க முயல்கின்றனர். ஆனால் கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும்.

எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும். இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர் பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.

ஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த செயலை மாதத்தில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.

ஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.

ஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.

மற்றொரு வழியென்றால், கடைகளில் விற்கும் கண்டிசனர் தான். இந்த கண்டிசனர் கூட கூந்தலை நேராக்கும். ஆகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்பு, கூந்தலுக்கு கண்டிசனரை தடவி சிறிது நேரம் கூந்தலுக்கு மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.

நம்ம ஊரு வயாகரா தர்பூசணி !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips
நம்ம ஊரு வயாகரா தர்பூசணி !!!

இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று அனைவரும் எண்ணுவோம். நம் ஊரின் முக்கிய வீதிகளில் இப்பொழுதே தர்பூசணி கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டது. தர்பூசணி வெய்யில் காலத்தில் அதிகம் உண்ணக்கூடிய உணவாகும். இதில் பல பயன்கள் உள்ளன.

நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில்... உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...

இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.

தர்பூசணியின் பயன்கள்:

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள்.

மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:07 AM | Best Blogger Tips
மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!

தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?
...
## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?

## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.

* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?

## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?

## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நன்றி
டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!

தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?
... 
## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?

## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.

* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?

## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?

## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. 

நன்றி 
டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:03 AM | Best Blogger Tips
கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...

உடல் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்போம். ஆனால் அவ்வாறு இருப்பதற்கு, உடலைப் பராமரிப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஏனெனில் பெண்கள் தான் எப்போதும் ஷாட் ஸ்கர்ட், ட்ரௌசர் போன்ற மார்டன் உடைகளை அணிகின்றனர். எனவே அப்போது கால்கள் காணப்படும் போது, நன்கு அழகாக பொலிவோடு காணப்பட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சொல்லப்போனால், மற்ற உறுப்புகளைப் பராமரிப்பதை விட, கால்களை அதிகம் பராமரிக்கமாட்டார்கள்.

நமது உடலின் பாரத்தை சுமப்பதே கால்கள் தான். அத்தகைய கால்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். எனவே எப்போது கால்களில் அதிகமான உடற்பயிற்சி செய்யும் போது, தசைகளில் லாக்டிக் ஆசிட் உருவாகி, கால்களானது பார்ப்பதற்கு பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். எனவே இத்தகைய கால்களை எப்போதும் பொலிவோடு வைத்துக் கொள்ள ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தினமும் செய்து வந்தால், கால்கள் அழகாக பொலிவோடு மின்னும்.

கால்களை அழகாக்க சில டிப்ஸ்....

தண்ணீர் உடலுக்கு நீரானது மிகவும் முக்கியம். ஏனெனில் நீர்ச்சத்து உடலில் இருந்தால் தான், உடல் நன்கு அழகாக ஆரோக்கியமாக காணப்படும். ஆகவே கால்கள் நன்கு அழகாக இருக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கால்களில் எந்த ஒரு தசைப்பிடிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

உணவுகள்

கால்களில் இரத்த ஓட்டப் பிரச்சனைகள் எளிதில் ஏற்படும். ஆகவே எந்த ஒரு இரத்த ஓட்டப்பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமலிருக்க ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த சாலமன், வால்நட் மற்றும் வெண்ணெய் பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. மேலும் சிட்ரஸ் உணவுகளான ஆரஞ்சு, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகளையும் சாப்பிட்டால், கால்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.

வறுத்த மற்றும் ஜங்க் உணவுகள்

கால்கள் நன்கு அழகாக இருக்க வேண்டுமெனில் எண்ணெயில் பொரித்த மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அதிகமான சாச்சுரேட்டட் கொழுப்புகள், கால்களில் இரத்த ஓட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, கால்களில் வீக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

கால்கள் நீண்ட நேரம் நடப்பதால், அவை சோர்ந்து இருக்கும். எனவே தினமும் படுக்கும் போது கால்களை சிறிது நேரம் தரையில் படுத்துக் கொண்டு, சுவற்றின் மேல் நீட்டிக் கொண்டு படுப்பதால், கால்கள் நன்கு புத்துணர்ச்சியோடு காணப்படும்.

அழுக்குகளை நீக்குவது

கால்களின் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே கால்களுக்கு பொலிவைத் தருவதற்கு கால்களுக்கான மாஸ்க் க்ரீம் போட்டு தேய்த்து, ஊற வைத்து பின் உரித்து எடுக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, நன்கு சுத்தமாக பொலிவோடு இருக்கும்.

வைட்டமின் ஈ லோசன்

உடலுக்கு அழகைக் கொடுக்கும் ஒரு சத்து என்னவென்றால் அது வைட்டமின் ஈ தான். தற்போது கடைகளில் விற்கும் லோசன்கள் அனைத்திலும் வைட்டமின் ஈ சத்து இருக்கும். ஆகவே அத்தகைய சத்துக்கள் நிறைந்த லோசனை கால்களுக்குத் தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதுவே வெளியே வெயிலில் செல்லும் போது, மறக்காமல் சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.

காலணி

எப்போது காலணி அணிவதாக இருந்தாலும், அவை நடப்பதற்கு எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும். மேலும் ஸ்டைல் என்று ஹீல்ஸ் போட்டு நடந்தால், கால் மற்றும் குதிகால்களில் வலி ஏற்படுவதோடு, இடுப்பு வலியும் ஏற்படும். பின் அந்த மாதிரியான காலணிகள் கால்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே இந்த மாதிரியான காலணிகளை தவிர்ப்பது நல்லது.

மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கால்கள் வலுவோடு வறட்சியின்றி ஆரோக்கியமாக இருக்கும். வேறு ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

உடல் எடையை குறைக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips
உடல் எடையை குறைக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்!!!

இன்றைய நவீன உலகில் உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு நமது உணவுப்பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை தான் காரணம். ஆனால் "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப, உடல் எடையையும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களாலேயே குறைக்கலாம். என்ன அது எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம், முதலில் உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தால், இந்த உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் நிச்சயம் குறைத்து, உடலைச் சிக்கென்று வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க முடியும்.

இதை சிலர் நம்பமாட்டீர்கள். நம்பாதவர்களுக்கு கிரீன் டீ, நடைப்பயிற்சி என்று ஏதாவது ஒரு செயலைக் குறிப்பிட்டு செய்தால் குறையும் என்று சொன்னால் மட்டும் தான் நம்புவீர்கள் என்றால், உடல் எடையை குறைத்துவிட்டு, அந்த எடை குறைப்பதற்கான செயலை நிறுத்திவிட்டால், மறுபடியும் உடல் எடை தான் அதிகரிக்கும். எனவே அந்த மாதிரியான செயல்களை நம்புவதை விட, எப்போதும் நாம் செய்யும் செயல்களில் ஒரு சிலவற்றை தொடர்ச்சியாக செய்தால், நிச்சயம் உடல் எடை குறைந்துவிடும். சொல்லப்போனால், அந்த செயல்களால் நாம் சிலவற்றை சாப்பிட முடியவில்லையே என வருந்தப்படாமல் இருக்குமாறு இருக்கும்.

இப்போது அந்த மாதிரியான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை மெதுவாக குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்க நினைக்கும் போது, செய்ய வேண்டியது என்னவென்றால் பி.எம்.ஐ, உயரம், எடை போன்றவற்றை அளந்து பார்த்து, நமது உடலுக்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று உணவுமுறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, பின் அதற்கேற்றாற் போல் எடை குறைப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

சிலர் உடல் எடையைக் குறைக்கின்றோம் என்று சாதாரணமாக உண்ணும் உணவிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகின்றனர். அதாவது கம்போர்ட் உணவுகளை திடீரென தவிர்ப்பது, சில நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கின்றனர். இவ்வாறு திடீரென எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. எதுவானாலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் விட வேண்டும். அதற்காக சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. சாப்பிடாமல் இருந்தால், உடல் எடை குறையாது. அதிகரிக்கத்தான் செய்யும். எனவே சாப்பிட வேண்டும். ஆனால் அவற்றில் கவனமும், அளவும் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சியை காலையில் செய்தால் தான் உடல் எடை குறையும் என்பதில்லை. எந்த நேரம் சரியானதாக உள்ளதோ, அந்த நேரத்தில் தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தாலே, உடல் எடையானது குறையும். எனவே உடற்பயிற்சிக்கு எந்த ஒரு நேரமும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை 30-45 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது.

உணவு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வேறு எந்த ஒரு ஜங்க் உணவுகள், பர்க்கர், வறுத்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடாமல், அப்போது பிடித்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதிலும் அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து எந்த மாதிரியான ரெசிபி செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொண்டு, பசிக்கும் நேரம் அவ்வாறு செய்து சாப்பிடலாம். சொல்லப்போனால், அப்போது அவற்றை வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.
எப்போதுமே ஆரோக்கியமான, உடல் எடையை குறைக்கும் உணவுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இருக்க வேண்டாம். இரண்டு அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை வேண்டுமெனில் ஐஸ் க்ரீம், பர்க்கர் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் அவற்றிலும் ஒருசில சத்துக்கள் இருக்கலாம். எனவே ஒரு முறை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால், நல்லது தான்.

மன அழுத்தம் கூட உடல் எடையை அதிகரித்துவிடும். எனவே அவற்றை போக்க தினமும் ஒரு 30 நிமிடம் இசை கேட்பது அல்லது புத்தகம் படிப்பது அல்லது யோகா போன்றவற்றை செய்தால், அந்த மனஅழுத்தத்தை குறைத்துவிடலாம், உடல் எடையையும் அதிகரிக்காமல் செய்யலாம்.

வாரத்திற்கு ஒரு முறை பிடித்த விளையாட்டுக்களான டென்னிஸ், கால் பந்து, கைப்பந்து, ஜாக்கிங் போன்றவற்றை நண்பர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ விளையாடலாம். இதனால் குழந்தைகள் அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழித்தது போல் இருக்கும், உடல் எடையையும் குறையும் வாய்ப்பும் உள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, நாம் செய்யும் அனைத்து செயல்களும் உடலில் தங்கி உடல் எடை குறையும். இல்லையெனில் அந்த அழுக்குகள் நாம் எடை குறைக்க சாப்பிடும் அனைத்து உணவுகளையும், அப்படியே வெளியேற்றிவிடும். ஆகவே உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, தண்ணீர் மிகவும் அவசியமானது.

பொதுஅறிவு ! 1

மணக்கால் அய்யம்பேட்டை | 10:58 AM | Best Blogger Tips


* இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை உத்திரப்பிரதேசத்தில் இருந்து தமிழ் நாடு வரை N.H.72369 கி.மீ

* ஒரு மயிலிறகில் 9 வண்ணங்கள் உண்டு.

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம்.

* சிப்பாய் கலகம் தொடங்கிய இடம் மீரட்

* இந்தியாவில் செய்தித்தாளே வெளியிடாத மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்

* மிதக்கும் நகரம் என அழைக்கப்படுவது வெணீஸ். இங்கு வீதிகளில் எல்லாம் கால்வாய்காணப்படுகிறது

* உலகத்திலேயே அதிக அளவில் தபால் தலையில் இடம் பிடித்த பெண் எலிசபெத் ராணி. ஆண்மகாத்மாகாந்தி.

* கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் கி.மு.399-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

* தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் குருவின் பெயர் பிளாட்டோ

* அகில ரயில் பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே உள்ள அகலம்1.67 மீட்டர் ஆகும்.

* அலெக்ஸாண்டரின் தளபதி செலுக்கஸ் நிக்கோடரை தோற்கடித்த இந்திய மன்னர் சந்திர குப்தமெளரியர்.

* அர்சுனா விருது விளையாட்டுத்துறைக்கு வழங்கபடுகிறது.

* எவரெஸ்ட்சிகரம் நேபாள நாட்டில் உள்ளது.
பொதுஅறிவு :-

* இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை உத்திரப்பிரதேசத்தில் இருந்து தமிழ் நாடு வரை N.H.72369 கி.மீ

* ஒரு மயிலிறகில் 9 வண்ணங்கள் உண்டு.

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம்.

* சிப்பாய் கலகம் தொடங்கிய இடம் மீரட்

* இந்தியாவில் செய்தித்தாளே வெளியிடாத மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்

* மிதக்கும் நகரம் என அழைக்கப்படுவது வெணீஸ். இங்கு வீதிகளில் எல்லாம் கால்வாய்காணப்படுகிறது

* உலகத்திலேயே அதிக அளவில் தபால் தலையில் இடம் பிடித்த பெண் எலிசபெத் ராணி. ஆண்மகாத்மாகாந்தி.

* கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் கி.மு.399-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

* தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் குருவின் பெயர் பிளாட்டோ

* அகில ரயில் பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே உள்ள அகலம்1.67 மீட்டர் ஆகும்.

* அலெக்ஸாண்டரின் தளபதி செலுக்கஸ் நிக்கோடரை தோற்கடித்த இந்திய மன்னர் சந்திர குப்தமெளரியர்.

* அர்சுனா விருது விளையாட்டுத்துறைக்கு வழங்கபடுகிறது.

* எவரெஸ்ட்சிகரம் நேபாள நாட்டில் உள்ளது.

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள் !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:58 AM | Best Blogger Tips
கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள் !!!!

கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.

கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
மணிச்சத்துக்களும், வைட்டமின்களும்
கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நிவர்த்தியாகும். கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள விட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கஷாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையைக் கஷாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல குணம் தெரியும்
கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள் !!!!

கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.

கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
மணிச்சத்துக்களும், வைட்டமின்களும்
கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நிவர்த்தியாகும். கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள விட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கஷாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையைக் கஷாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல குணம் தெரியும்

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 AM | Best Blogger Tips
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)
=============================

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.


7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.


8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.


9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.


10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.


இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

கருவளையத்தை நீக்க சூப்பர் டிப்ஸ் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 AM | Best Blogger Tips
கருவளையத்தை நீக்க சூப்பர் டிப்ஸ் !!

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.

* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

* மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* இல்லையெனில் தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.

To Read in English, Follow Food is the Best Medicine
கருவளையத்தை நீக்க சூப்பர் டிப்ஸ் !!

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.

* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

* மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* இல்லையெனில் தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.

To Read in English, Follow @[431943046865465:274:Food is the Best Medicine]