உடல் எடையை குறைக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips
உடல் எடையை குறைக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்!!!

இன்றைய நவீன உலகில் உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு நமது உணவுப்பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை தான் காரணம். ஆனால் "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப, உடல் எடையையும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களாலேயே குறைக்கலாம். என்ன அது எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம், முதலில் உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தால், இந்த உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் நிச்சயம் குறைத்து, உடலைச் சிக்கென்று வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க முடியும்.

இதை சிலர் நம்பமாட்டீர்கள். நம்பாதவர்களுக்கு கிரீன் டீ, நடைப்பயிற்சி என்று ஏதாவது ஒரு செயலைக் குறிப்பிட்டு செய்தால் குறையும் என்று சொன்னால் மட்டும் தான் நம்புவீர்கள் என்றால், உடல் எடையை குறைத்துவிட்டு, அந்த எடை குறைப்பதற்கான செயலை நிறுத்திவிட்டால், மறுபடியும் உடல் எடை தான் அதிகரிக்கும். எனவே அந்த மாதிரியான செயல்களை நம்புவதை விட, எப்போதும் நாம் செய்யும் செயல்களில் ஒரு சிலவற்றை தொடர்ச்சியாக செய்தால், நிச்சயம் உடல் எடை குறைந்துவிடும். சொல்லப்போனால், அந்த செயல்களால் நாம் சிலவற்றை சாப்பிட முடியவில்லையே என வருந்தப்படாமல் இருக்குமாறு இருக்கும்.

இப்போது அந்த மாதிரியான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை மெதுவாக குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்க நினைக்கும் போது, செய்ய வேண்டியது என்னவென்றால் பி.எம்.ஐ, உயரம், எடை போன்றவற்றை அளந்து பார்த்து, நமது உடலுக்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று உணவுமுறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, பின் அதற்கேற்றாற் போல் எடை குறைப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

சிலர் உடல் எடையைக் குறைக்கின்றோம் என்று சாதாரணமாக உண்ணும் உணவிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகின்றனர். அதாவது கம்போர்ட் உணவுகளை திடீரென தவிர்ப்பது, சில நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கின்றனர். இவ்வாறு திடீரென எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. எதுவானாலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் விட வேண்டும். அதற்காக சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. சாப்பிடாமல் இருந்தால், உடல் எடை குறையாது. அதிகரிக்கத்தான் செய்யும். எனவே சாப்பிட வேண்டும். ஆனால் அவற்றில் கவனமும், அளவும் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சியை காலையில் செய்தால் தான் உடல் எடை குறையும் என்பதில்லை. எந்த நேரம் சரியானதாக உள்ளதோ, அந்த நேரத்தில் தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தாலே, உடல் எடையானது குறையும். எனவே உடற்பயிற்சிக்கு எந்த ஒரு நேரமும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை 30-45 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது.

உணவு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வேறு எந்த ஒரு ஜங்க் உணவுகள், பர்க்கர், வறுத்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடாமல், அப்போது பிடித்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதிலும் அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து எந்த மாதிரியான ரெசிபி செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொண்டு, பசிக்கும் நேரம் அவ்வாறு செய்து சாப்பிடலாம். சொல்லப்போனால், அப்போது அவற்றை வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.
எப்போதுமே ஆரோக்கியமான, உடல் எடையை குறைக்கும் உணவுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இருக்க வேண்டாம். இரண்டு அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை வேண்டுமெனில் ஐஸ் க்ரீம், பர்க்கர் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் அவற்றிலும் ஒருசில சத்துக்கள் இருக்கலாம். எனவே ஒரு முறை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால், நல்லது தான்.

மன அழுத்தம் கூட உடல் எடையை அதிகரித்துவிடும். எனவே அவற்றை போக்க தினமும் ஒரு 30 நிமிடம் இசை கேட்பது அல்லது புத்தகம் படிப்பது அல்லது யோகா போன்றவற்றை செய்தால், அந்த மனஅழுத்தத்தை குறைத்துவிடலாம், உடல் எடையையும் அதிகரிக்காமல் செய்யலாம்.

வாரத்திற்கு ஒரு முறை பிடித்த விளையாட்டுக்களான டென்னிஸ், கால் பந்து, கைப்பந்து, ஜாக்கிங் போன்றவற்றை நண்பர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ விளையாடலாம். இதனால் குழந்தைகள் அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழித்தது போல் இருக்கும், உடல் எடையையும் குறையும் வாய்ப்பும் உள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, நாம் செய்யும் அனைத்து செயல்களும் உடலில் தங்கி உடல் எடை குறையும். இல்லையெனில் அந்த அழுக்குகள் நாம் எடை குறைக்க சாப்பிடும் அனைத்து உணவுகளையும், அப்படியே வெளியேற்றிவிடும். ஆகவே உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, தண்ணீர் மிகவும் அவசியமானது.