வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னு பேசுற சக்தி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

🤔🤔🤔
*நம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?*

😍😍😍😍😍😍😍😍😍
*1. சேர் :*
வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனக்குற பாரு..
*2. ஃபேன் :*
நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்ன இப்டி சுத்தவிடுற!
*3. டிவி :*
ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க!
*4. தலையணை :*
நாளக்காவது குளிடா...!! நாத்தம் கொடல புடுங்குது...!!!
*5. ஃப்ரிட்ஜ் :*
சாம்பார், புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி...இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா...??
*6. ட்யூப் லைட் :*
நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்ன போடுறியா..??
*7. கண்ணாடி :*

இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத... பயமா இருக்குல்ல..
*8. கிரைண்டர் :*

ம்ம்ம்... அப்படிதான், thalaya சொரிஞ்சுட்டு வந்து கைய உள்ள விடு...!!!
*9. மெத்தை:*

டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா..
*10. மிக்ஸி :*

மூடிய மூடாமத்தான் ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்...!!!
*11. வால்க்ளாக் :*

இப்ப என்ன பாத்துட்டு, என்னத்த கிழிக்க போற...???
*12. வாசிங்மெஷின் :*

பாக்கெட்ல காசு பணம் இருக்கான்னு செக் பண்ண மாட்ட!
*13. மிதியடி :*

என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?,

மரியாதையா என்ன தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!!
*14. சேவிங் ட்ரிம்மர் :*

இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு போட்டு சொரண்டி எடுக்குற...??
*15. மொபைல் சார்ஜர்:*

வாய தொற...!! அப்டியே அதுல கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!!
*16. பாத்ரூம் விளக்கமாறு :*

தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!!
*17. அயன்பாக்ஸ் :* அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!!
*18. சர்ட் ஆங்கர் :*

அடேய் மகனே...!, உன் சட்ட காலர கொஞ்ச பாரு...!!

உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!!
*###வாய்_விட்டு_சிரித்தது###⚫⚫😀😀😀😀⚫

நன்றி இணையம்

அர்ச்சனை செய்வதன் சூட்சுமம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:57 PM | Best Blogger Tipsஒருவரின் ஜென்ம நட்சத்திர வடிவத்தை, தன் கையில் கொண்டிருக்கும் தெய்வ சிலைக்கு அல்லது அந்த ஜென்ம நட்சத்திரத்தில் அவதரித்த கடவுளுக்கு ஜென்ம நட்சத்திர அன்று அர்ச்சனை செய்வது சால சிறந்தது.

உதாரணமாக, ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரம், அன்று அர்ச்சனை செய்வது நல்லது.

01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02.
பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03.
கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04.
ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05.
மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06.
திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்
07.
புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08.
பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09.
ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10.
மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11.
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12.
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13.
அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14.
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15.
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16.
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17.
அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18.
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்
19.
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20.
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21.
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22.
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23.
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24.
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25.
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26.
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27.
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.
 

நன்றி 👤இணையம்✍ **

நம் முன்னொர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:56 PM | Best Blogger Tips


Image result for நம் முன்னொர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்

நன்றி 👤இணையம்✍ **