முயற்சி இருக்கின்ற ஒருவரால்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:11 | Best Blogger Tips
Related image

முயற்சி இருக்கின்ற ஒருவரால் தெய்வத்தால் கைவிடப்பட்ட காரியத்தையும் செய்ய முடியும். உயரமுடியும். இன்றைய இளைஞர்கள் திருக்குறளை ஆழ்ந்து படித்தார்களேயானால் இந்தியாவை வல்லரசு ஆக மாற்ற என்ன செய்யவேண்டும் எனத் தெரிந்து கொள்வர்

வெற்றிக்கு ஏழு படிகள் தேவை

அந்த ஏழு படிகளை
திருக்குறள் மிக அழகாக தெளிவுபடுத்துகிறது

*ஒழுக்கமுடைமை
நல்லகல்வி
மறதியின்மை
ஊக்கமுடைமை
விடாமுயற்சி
இடுக்கண் அழியாமை
சோம்பலின்மை.*

மீன்பிடி நகரமாக இருந்த சிங்கப்பூர் இன்று 550 விமானங்கள் வந்து போகும் சர்வதேச விமான நிலையமாக, வியாபார ஸ்தலமாக மாறியதற்கான காரணம் வெற்றிப் படிகளை தெரிந்து வைத்ததால்தான்

சிங்கப்பூரில் சாக்கடையைச் சுத்தம் செய்து படகு சவாரி செய்யும் ஆறாக மாற்றியுள்ளனர். நாமோ நதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாக மாற்றி வருகின்றோம். இந்த நிலை மாறவேண்டும். சாக்கடையில் இறங்குகின்ற மனிதனும் சந்திரனில் இறங்குகின்ற மனிதனும் சமமான நிலை பெறும் போதுதான் வல்லரசு என்கிற ஒன்று நிச்சயமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய வெற்றி உன்னை நீயே ஜெயிப்பதுதான் என்றார் மாவீரன் நெப்போலியன்

நம்மை நாம் ஜெயிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். உயர வேண்டும். எந்தச் செயலையும் ஆத்மார்த்தமாகச் செய்தால் அது வெற்றி அடையும்

வள்ளலாரும். பாரதியாரும். ..சியும், அன்னை தெரசாவும் தங்களின் செயல்பாடுகளில் ஆத்மார்த்தமாக இறங்கியதால் வென்றார்கள்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்ற வள்ளுவரின் வாக்கினைக் கடைப்பிடிப்போம்; வெற்றி அடைவோம்; வல்லரசு காண்போம்!
Image may contain: 1 person, tree, outdoor, nature and water
இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி பெ.சுகுமார் 


தாழ்வுமனப்பான்மை வேண்டாம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:57 | Best Blogger Tips
Image result for தாழ்வுமனப்பான்மை வேண்டாம்

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள்.

உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள்

இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.

வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.

நம்முடைய வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள்

நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.
Image may contain: 1 person

👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி 👤✍ *பெ.சுகுமார்*

பாசிடிவ் எண்ணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:53 | Best Blogger Tips
Image result for பாசிடிவ் எண்ணங்கள்Image result for பாசிடிவ் எண்ணங்கள்

உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
நம்மைவிட உடலில் பலசாலி யானை
நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.
Image may contain: 1 person
👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
Top of Form

 நன்றி  👤✍ *பெ.சுகுமார்*