முயற்சி இருக்கின்ற ஒருவரால் தெய்வத்தால் கைவிடப்பட்ட காரியத்தையும் செய்ய முடியும். உயரமுடியும். இன்றைய இளைஞர்கள் திருக்குறளை ஆழ்ந்து படித்தார்களேயானால் இந்தியாவை வல்லரசு ஆக மாற்ற என்ன செய்யவேண்டும் எனத் தெரிந்து கொள்வர். 
வெற்றிக்கு ஏழு படிகள் தேவை. 
அந்த ஏழு படிகளை, 
திருக்குறள் மிக அழகாக தெளிவுபடுத்துகிறது. 
*ஒழுக்கமுடைமை; 
நல்லகல்வி; 
மறதியின்மை; 
ஊக்கமுடைமை; 
விடாமுயற்சி; 
இடுக்கண் அழியாமை; 
சோம்பலின்மை.*
மீன்பிடி நகரமாக இருந்த சிங்கப்பூர் இன்று 550 விமானங்கள் வந்து போகும் சர்வதேச விமான நிலையமாக, வியாபார ஸ்தலமாக மாறியதற்கான காரணம் வெற்றிப் படிகளை தெரிந்து வைத்ததால்தான். 
சிங்கப்பூரில் சாக்கடையைச் சுத்தம் செய்து படகு சவாரி செய்யும் ஆறாக மாற்றியுள்ளனர். நாமோ நதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாக மாற்றி வருகின்றோம். இந்த நிலை மாறவேண்டும். சாக்கடையில் இறங்குகின்ற மனிதனும் சந்திரனில் இறங்குகின்ற மனிதனும் சமமான நிலை பெறும் போதுதான் வல்லரசு என்கிற ஒன்று நிச்சயமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய வெற்றி உன்னை நீயே ஜெயிப்பதுதான் என்றார் மாவீரன் நெப்போலியன். 
நம்மை நாம் ஜெயிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். உயர வேண்டும். எந்தச் செயலையும் ஆத்மார்த்தமாகச் செய்தால் அது வெற்றி அடையும். 
வள்ளலாரும். பாரதியாரும். வ.உ.சியும், அன்னை தெரசாவும் தங்களின் செயல்பாடுகளில் ஆத்மார்த்தமாக இறங்கியதால் வென்றார்கள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக…
நிற்க அதற்குத் தக…
என்ற வள்ளுவரின் வாக்கினைக் கடைப்பிடிப்போம்; வெற்றி அடைவோம்; வல்லரசு காண்போம்!

இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
நன்றி பெ.சுகுமார் 

 

