கணனியின் வேகத்தை அதிகரிக்க!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:29 PM | Best Blogger Tips
கணனியின் வேகத்தை அதிகரிக்க!!!

கம்ப்யூட்டரில் என்னதான் வேகமாக இயங்கும் இன்டெல் சிப் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் வழிகளில் சில எக்ஸ்பி சிஸ்டத்தை மெதுவாக்கும்.என்ன செய்தால் கம்ப்யூட்டர் இயக்கத்தில் நமக்கு அதிக பட்ச வேகம் கிடைக்கும் என்பதனை இங்கு பார்ப்போம்.

1. ஹார்ட் டிஸ்க் சரி செய்க: விண்டோஸ் இயக்கம் தன் வேக நிலைக்குக் குறைவான வேகத்தில் இயங்கக் காரணம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்களைத் தேடுவதில் அதிக நேரம் செலவிடுவதாகும். ஒரு பைலை நாம் இயக்க விரும்பி அதனைக் கம்ப்யூட்டரில் கேட்டு அது நமக்கு இயக்கத்திற்கு வரும் காலத்தை Reponse Time எனக் குறிப்பிடுகிறோம். நாம் உருவாக்கும் மற்றும் அழிக்கும் பைல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது இந்த கால அவகாசம் உயர்கிறது. இதற்குக் காரணம் அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் பைல்களை உருவாக்கி பின் அழித்து மீண்டும் உருவாக்கி எழுதுகையில் பைல்கள் ஒரே இடத்தில் எழுதப்படாமல் பிரித்து பல இடங்களில் எழுதப்படுகின்றன.

இவ்வாறு பிரிக்கப்படுவதனை பிராக்மெண்ட் (Fragment) எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட பைல்களை மீண்டும் ஓரளவிற்கு ஒரே இடத்தில் வரிசையாக விண்டோஸ் இயக்கம் எளிதாகத் தேடிப் படிக்கும்படி அமைக்கலாம். இதனை Defragment எனக் கூறுகிறோம். இவ்வாறு அவ்வப்போது அமைத்துவிட்டால் பைல்களைத் தேடி எடுத்துத் தரும் கால அவகாசம் (Reponse Time) குறைந்துவிடும். இந்த செயல்பாட்டை மாதம் ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற வகையில் சென்று இயக்க வேண்டும். அவ்வாறு இயக்குகையில் எந்த டிரைவில் இந்த செயல்பாட்டை மேற்கொள்ள விரும்புகிறோமோ அந்த டிரைவை மட்டும் தேர்ந்தெடுத்து இயக்கலாம். டிரைவைத் தேர்ந்தெடுத்து பின் Analyze என்பதில் கிளிக் செய்து பின் டிபிராக் செய்திடும்படி கட்டளை கொடுக்கலாம்.

2. டிஸ்க் எர்ரர்ஸ் (Disk Errors) : கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கி காலம் செல்லச் செல்ல ஹார்ட் டிஸ்க்கில் பழுது ஏற்படுகிறது. தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கை சுழற்றி சுழற்றி எழுதுகிறோம். பல முறை ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்து கையில் அதன் இயக்கத்தில் தலையிடுகிறோம். அவ்வாறு செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கின் பரப்பில் பழுது ஏற்படுகிறது. பழுது ஏற்படும் இடத்தை bad sector என அழைக்கிறோம்.

இது போன்ற இடங்கள் ஹார்ட் டிஸ்க்கின் எழுதும் மற்றும் படிக்கும் வேகத்தைத் தாமதப்படுத்துகின்றன. அல்லது தடை செய்கின்றன. குறிப்பாக டிஸ்க்கில் எழுதுவது மிகச் சிரமமாகிறது. அல்லது இயலாமல் போகிறது. இது போன்று பழுது ஏற்பட்டபின் அந்த மோசமான, எழுதுவதற்கு இயலாத இடங்களை எதுவும் எழுத முடியாத வகையில் குறிப்பிட்டு வைக்க வேண்டும்.

இதனையே detecting and repair disk errors எனக் குறிப்பிடுகின்றனர். இந்த செயலை மேற்கொள்ள Error Checking utility என்று ஒரு வசதியை விண்டோஸ் கொண்டுள்ளது. இதனை இயக்கினால் இந்த வசதி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள களைக் கண்டறிந்து சிஸ்டம் வேகமாக இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் படி செல்லவும்.

My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Explore தேர்ந்தெடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களும் கிடைக்கும். இதில் எர்ரர் செக் செய்திடத் தேவையான டிரைவினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். இந்த Properties விண்டோவில் Tools என்னும் டேபில் என்டர் அழுத்த அதில் மூன்று பிரிவுகள் கிடைக்கும்.

அவை: Error Checking, Defragmentation மற்றும் Backup ஆகும். இதில் Error Checking பிரிவில் Check Now என்பதில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட டிரைவ் செக் செய்யப்பட்டு பழுதாகி சரி செய்ய முடியாத இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எழுத இயலாத இடங்களாகக் குறியிடப்பட்டு ஒதுக்கப்படும்.

3. இன்டெக்ஸ் வசதி முடக்கம்: கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை பல வகைகளில் அடுக்கலாம். பெயர் வகையில், அதன் அளவு, வகை என இவை உண்டு. இந்த செயல்பாட்டினை Indexing Service எனக் கூறுகின்றனர். இந்த செயல்பாடு கம்ப்யூட்டரின் மைய இயக்கத்தில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

இவ்வாறு வகை பிரிக்கப்படுவதனால் நாம் பைல்களைத் தேடி எடுப்பது எளிதாகிறது. ஆனால் விண்டோஸ் செயல்பாட்டின் வேகம் குறைகிறது.

உங்களால் பைல்கள் எங்கிருக்கிறது என்றும் அவற்றை தேடி எடுப்பது உங்களால் மேற்கொள்ளக் கூடிய எளிய செயல் என்றும் நீங்கள் எண்ணினால் இந்த Indexing Service – ஐ முடக்கி வைக்கலாம். இதனால் கம்ப்யூட்டருக்கு எந்த பாதகமும் ஏற்படாது. இதனை முடக்க Start கிளிக் செய்து Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs ஐ இருமுறை கிளிக் செய்திடவும். பின் Add/Remove Window Components என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பட்டியலில் Indexing services என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இது ஓரளவிற்கு விண்டோஸ் இயக்க செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.

4. விண்டோஸ் டிஸ்பிளே செட்டிங்ஸ்:விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் டெஸ்க்டாப்பில் காண்பதனை அழகாக மெருகூட்டி வைத்திடும் வகையில் பல நகாசு சாதனங்கள் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக நமக்குக் காட்டப்படும் மெனு பட்டியலில் பின்புறத்தில் அழகான நிழல் பட்டுத் தெரியும்படி அமைக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய அளவிலான அனிமேஷன் வரும்படி அமைக்கலாம்.

மவுஸ் பாய்ண்ட்டரையே வாழப்பழம் உரிப்பது போலவும் குதிரை ஒன்று ஓடுவது போலவும் மாற்றலாம். ஆனால் இந்த மாற்றங்கள் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை நிறைய எடுத்துக் கொள்கின்றன. இதனால் சிஸ்டத்தின் முக்கிய செயல்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த மாற்றங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமலும் உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் சிறப்பாகவே தோற்றமளிக்கும்.

5. போல்டர் பிரவுசிங்: ஒவ்வொரு முறை மை கம்ப்யூட்டர் வழியாக போல்டர்களை பிரவுஸ் செய்திட முயற்சிக்கையில் அவை கிடைக்க சிறிது தாமதமாவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இதற்குக் காரணம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்புளோரரை நீங்கள் திறக்கையில் ஒவ்வொருமுறையும் தானாகவே நெட்வொர்க் பைல்கள் மற்றும் பிரிண்டர்களைத் தேடி அறிகிறது. இதனால் போல்டர்கள் கிடைக்க தாமதமாகிறது. இதனைச் சரி செய்து பிரவுஸ் செய்திடும் வேகத்தை அதிகப்படுத்த “Automatically search for network folders and printers” என்ற ஆப்ஷனை இயங்காமல் தடுத்து அமைத்திடலாம்.

6. எழுத்து வகைகளை எடுத்துவிடுதல்: எழுத்து வகைகள் (Fonts) நம் டாகுமெண்ட்களை அழகாக எழுத நமக்கு உதவுகின்றன. ஆனால் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை இவை நிறைய எடுத்துக் கொள்கின்றன. குறிப்பாக TrueType fonts அதிகமாகவே எடுத்துக் கொள்கின்றன. எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்து வகைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை இன்னொரு போல்டரில் வேறு பெயரில் (Addl Fonts) வைத்துக் கொள்ளலாம். Control Panel சென்று Fonts போல்டரில் உள்ள இந்த தேவையற்ற Fonts பைல்களை மேலே சொன்னபடி இன்னொரு போல்டரில் காப்பி செய்து வைத்துவிடவும். தேவைப்படும்போது இவற்றை மீண்டும் Fonts போல்டருக்குக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். எந்த அளவிற்கு குறைக்கிறீர்களோ அந்த அளவிற்கு சிஸ்டத்தின் இயக்க வேகம் அதிகரிக்கும்.

மேற்கண்ட வழிகளுடன் சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அவற்றை இயக்குவதன் மூலமும் விண்டோஸின் இயக்க வேகத்தை அதிகப்படுத்தலாம். ஆனால் இந்த புரோகிராம்களைச் சரியாக இயக்காவிட்டால் அல்லது இவற்றுடன் வைரஸ் போன்ற புரோகிராம்களும் இணைந்து வருவதால் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை. எனவே மேலே குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி விண்டோஸ் சிஸ்டம் இயங்குவதனை துரிதப்படுத்துங்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள்...

இன்றைய காலத்தில் உடலில் ஏற்படும் நோய்களில் முதலில் இருப்பது நீரிழிவு தான். இந்த நீரிழிவு வந்தால், உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே ஆகும். இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான். இந்த நீரிழவு பிரச்சனை வந்தால், பின் எந்த ஒரு உணவையும் நிம்மதியாக சாப்பிட முடியாது. ஏனெனில் உண்ணும் உணவுகள் சிலவற்றில், சர்க்கரையானது அதிகம் நிறைந்திருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும்

உணவுப் பொருட்கள் அனைத்தையுமே சாப்பிடக் கூடாது என்பதில்லை. சொல்லப்போனால் பழங்கள் கூடத் தான் இனிப்பாக இருக்கும். நிறைய மருத்துவர்கள் தினமும் குறைந்தது 4-5 பழங்களையாவது சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதற்காக நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன?

நிச்சயம் சாப்பிடலாம். ஏனெனில் பழங்கள் கூட இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தினமும் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

முக்கியமாக அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிடக் கூடாது. பின் அதுவே நஞ்சாக மாறிவிடும். மேலும் சில பழங்களை சாப்பிட்டால், இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். எனவே இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா


கிவி:
கிவி பழங்களை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் என்று ஆய்வுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ளன.

நாவல் பழம்:
நாவல் பழத்தின் நிறத்தை பார்க்கும் போதே நாஊறும். அத்தகைய நாவல் பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பழம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். அதிலும் இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், நீரிழிவை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.

நட்சத்திரப் பழம்:
இந்த நட்சத்திரப் பழம் நெல்லிக்காய் போன்ற சுவையுடையது. இந்த பழத்தை நறுக்கினால், நட்சத்திரம் போன்று காணப்படும். இத்தகைய பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

கொய்யா பழம் :
நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கொய்யா பழம் நல்ல தீர்வைத் தரும். அதிலும் கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

செர்ரி:
செர்ரிப் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 20 ஆக இருப்பதால், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.

பீச்:
இந்த பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதோடு, மிகுந்த ஆரோக்கியத்தை தருவதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சூப்பரான பழம்.

பெர்ரி :
பெர்ரிப் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் இந்த வகைப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆகவே இந்த பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள் :
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை சாப்பிடும் போது கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிலும் இந்த பழத்தில அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.

அன்னாசி:
பழம் அன்னாசியில் ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருப்பதால், சாதாரணமாகவே உடலுக்கு சிறந்த பழம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

பேரிக்காய் :
இந்த சுவையான பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லாம். அந்த பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

பப்பாளி :
பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பழம்.

அத்திப்பழம்:
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை இன்சுலின் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைப் புரிகின்றன.

ஆரஞ்சு :
இந்த சிட்ரஸ் பழத்தை தினமும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவானது குறையும். அதிலும் இவற்றில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.

திராட்சை:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை ஒரு சிறப்பான பழம். எப்படியெனில் இந்த பழத்தை சாப்பிட்டால், இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.

மாதுளை :
மாதுளையில் உள்ள சின்ன சின்ன சுவைமிக்க கனிகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிசமமாக்கும்.

நெல்லிக்காய் :
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த, ஆரோக்கியத்தை தரும் பழங்களுள் ஒன்று.