பொறுமை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:46 | Best Blogger Tips
Image result for பொறுமைImage result for பொறுமை

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது !

இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.
Image result for பொறுமை

ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை. விடியும் எனும் நம்பிக்கையே இரவில் நம்மை நிம்மதியாய் தூங்க வைக்கிறது. முடியும் எனும் நம்பிக்கையே, பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய பொறுமை நம்பிக்கை இழக்கும் போது “பொன் முட்டையிடும் வாத்தை வெட்டிக் கொன்ற முட்டாளாய்” செயல்படத் துவங்குவோம்.

பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி நம்மை நோக்கி நடைபோடத் துவங்கும்.

பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.



👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*


நன்றி 👤✍ *பெ.சுகுமார்*

*வாழ்ந்து காட்ட வேண்டும்* ❗

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:08 | Best Blogger Tips
Image result for வாழ்ந்து காட்ட வேண்டும்

● பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது.

● ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது.


● பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.

● மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன.

● ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன.

● சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.

● தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன.

● ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.

இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதோ

*எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.*

*அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ வேண்டும்?*

*அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ வேண்டும்?*

Image result for வாழ்ந்து காட்ட வேண்டும்

*அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்?*

*அதை ஏன் அழுதுகொண்டு வாழ வேண்டும்?*

*மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.!*

இது உன் வாழ்க்கை என்றபோது மிச்சம் இருப்பது ஆனந்தத்தை தவிர வேற என்ன இருக்கிறது.

ஆகவே,
*ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒருசான்றாக.*
👍👍👍



நன்றி இணையம்

மகள்களைப் பெற்ற அப்பாவிற்கு.....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:04 | Best Blogger Tips



கணவர்வீட்டிலிருந்து அப்பாவுக்கு எழுதும் மகளின் முதல் கவிதை கடிதம்....

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை:


நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ..
எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா..

அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினேயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்...
இல்லையேல்...கொடி கூட அவிழாத நிலையில் உன் கையில் ஏந்தி உச்சிநுகர்ந்து முத்தம் பதித்தாயே!! அப்பொழுது நிகழ்ந்து இருக்கக்கூடும்...

ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா??!!

கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும்
அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..??
உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்..

நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு
உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்..

சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா...

உலையில் கொதித்திட அரிசி இல்லை என்ற பொழுதிலும் நான் கேட்டேன் என்பதற்காக
இனிப்புகளை வாங்கி தந்து தாயாரின் வெறுப்பை சம்பரித்துக் கொள்வாயே!!
அது ஏன் அப்பா??

மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை யான் அறியாமல் யார் அறிவார்??

தாவணியின் நுனியினை பிசைந்தார் வண்ணம் உன் முன் நானி நான் நிற்க..
உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்!!
கண்களில் துளிர்த்த நீரை யவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டாய்..

பலவாறாக தம்மிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா..

நான் சமைத்த உணவை நா கூசாமல் புகழ்ந்து தள்ளுவாயே...!! உன் பொய்யிற்க்கும் ஒரு காதல் உண்டு அப்பா...

என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்...
பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்..
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா??

மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ..
என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ??

நான் விரும்பாததை நீ என்னிடம் புகுத்தியதும் இல்லை..
என் விருப்பத்தை நீ வெறுத்ததும் இல்லை...

என் ஒரே ஒரு கவலை என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கண்ணீர் விடும் உன்னை தேற்ற என்னை அன்றி எவருக்கு தெரியும் என்பதே??!!

என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்..
எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று...

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை..
ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா....

💚அப்பா


படித்ததில் பிடித்தது.

நன்றி இணையம்