வெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்..
ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்..

ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள்..

இந்த காசுக்கு ஊருக்கு வெளியில்
வீட்டுமனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டு மனைகளை சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்..
நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 20+ கிலோமீட்டர் தள்ளி மனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கிடைக்கிறது..
இங்கிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள் பத்து வருடம் கழித்து இருக்கும் மனைகளை ஒன்றாக சேர்த்து விலைக்கு விற்று பங்களா போன்றவை கட்டிக் கொள்ளுங்கள்..
கடனுக்கு வீடு கட்டி விருந்து வைத்து உறவுகளுக்கு எல்லாம் காண்பித்து கண் திருஷ்டி பட்டு இன்னல்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களே..
30 வயதில் சேமிக்க துவங்குங்கள்
45 வயதில் பங்களா கட்டிக் கொள்ளுங்கள் ..
வீட்டுக்கு வெளியில் நின்று பொய்யாக சிரித்து வீட்டுக்கு உள்ளே அமர்ந்து சோகத்தோடு வாழக்கூடாது..