💔💔💔💔💔உடைப்பு ........🌹 🌹 🌹 🌹 🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 1:02 PM | Best Blogger Tips

 Your guide to repairing a broken friendship - India Today

உடைப்பு 

நட்பு உடைந்து ,
முக நூலானது ...
How to Take a Break from Friend on Facebook? (Easy Tutorial)
சுற்றம் உடைந்து ,
வாட்சப் ஆனது ...
What 'Taking A Break' Really Means For Your Relationship | YourTango
வாழ்த்துக்கள் உடைந்து ,
ஸ்டேட்டஸ் ஆனது ...
Relationship Advice: Breaking Up Is Hard To Do - IN Magazine
உணர்வுகள் உடைந்து ,
ஸ்மைலியாய் ஆனது ...

குளக்கரை உடைந்து ,
குளியலறை ஆனது ...

நெற்களம் உடைந்து ,
கட்டடமானது ...

காலநிலை உடைந்து ,
வெப்பமயமானது ...

வள நிலம் உடைந்து ,
தரிசாய் ஆனது ...

துணிப்பை உடைந்து ,
நெகிழியானது ...

அங்காடி உடைந்து 
அமேசான் ஆனது ...

விளை நிலம் உடைந்து ,
மனை நிலம் ஆனது ...

ஒத்தையடி பாதை உடைந்து ,
எட்டு வழியானது ...

கடிதம் உடைந்து ,
இ மெயிலானது ...

விளையாட்டு உடைந்து ,
வீடியோ கேம் ஆனது ...

புத்தகம் உடைந்து  ,
இ-புக் ஆனது ...

சோறு உடைந்து 
'ஓட்ஸ்'சாய்ப் போனது...

இட்லி உடைந்து ,
பர்கர் ஆனது ...

தோசை உடைந்து ,
பிட்சாவானது ...

குடிநீர் உடைந்து 
குப்பியில் ஆனது ...

பசும்பால் உடைந்து ,
பாக்கெட் ஆனது ...

வெற்றிலை உடைந்து ,
பீடாவானது ...

தொலைபேசி உடைந்து ,
கைப்பேசியானது ...

வங்கி உடைந்து ,
பே டி எம் ஆனது ...

நூலகம் உடைந்து ,
கூகுளாய்ப் போனது ...

புகைப்படம் உடைந்து ,
செல்ஃபியாய் ஆனது ...

பொது நலம் உடைந்து ,
சுய நலமானது ...

பொறுமை உடைந்து ,
அவசரமானது ..

"நிரந்தரம் உடைவது 
நிதர்சனம்... 
ஆகையால் ,
உடைவது 
உலகினில் 
நிரந்தரமானது " ..!

எல்லாவற்றையும் இழந்து
 புலம்பிக்
கொண்டு 
இருக்கின்றான், 
இன்றைய கால மனிதன்....

தொலைந்துபோன காலம் 
மீண்டும் தொடருமா...?

படித்தேன்...
கனத்தேன்...
நெகிழ்ந்தேன்...
பகிர்கிறேன். 

 

என்றும் அன்புடன் 

ரமேஷ் ராமலிங்கம்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.🌷 🌷🌷 🌷