சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேனைக்கிழங்கு #வறுவல் செய்வது எப்படி ?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips

 No photo description available.


 
தேவையான பொருட்கள்
 
 
▢1/2 கிலோ சேனைக்கிழங்கு ▢1/4 கப் தேங்காய் ▢2 வர மிளகாய் ▢1 டீஸ்பூன் சீரகம் ▢1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ▢3 டேபிள் ஸ்பூன் தேங்காய் ▢1/2 டீஸ்பூன் கடுகு, உளுந்த ஸ்பூன் தேவையானஅளவு ▢கறிவேப்பிலை சிறிதளவு 
 
செய்முறை.....
 
முதலில் சேனை கிழங்கை அதின் தோலை நீக்கி பிறகு நன்கு கழுகி சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 
 
பின்னர் மிக்ஸியில் தேங்காய், மிளகாய், சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
 
அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, 
 
உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து அத்துடன் சேனை கிழங்கு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும். 
 
நன்கு வெந்ததும் அத்துடன் அரைத்தa தேங்காய் மசாலா சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். 
 
பின்னர் அடுப்பில்l இருந்து இறக்கி மேலாக ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி விடவும். 
 
அருமையானn சுவையுடன் கூடிய சேனை கிழங்கு தோரன் தயார். சாம்பார் சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

 

உடல் உழைப்புக்கு பின்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips

 May be an image of congee and baked beans

 

உடல் உழைப்புக்கு பின் உணவு என்பதுதான் 
 
இயற்கையின் இயக்கத்தோடு சேர்ந்திருப்பதன் அடையாளம் 
 
அந்த வகையில் தினமும் காலையில் சாப்பிடும் திட உணவுகள் 
 
தோசை, புரோட்டா,பூரி ,பொங்கல் ,உப்புமா , குழம்பு சாப்பாடு ,சப்பாத்தி 
 
இவை எல்லாமே உடலுக்கு கெடுதல்
 
 
காலையில் திட உணவு நோய்களை வரவைக்கும்
 
 
காலையில் நீரும் நீராகாரம் மட்டுமே
நல்லது ... 
 
கம்பங்கூழ் , பழைய சோறு, தயிர் மோர் சோறு இவைகள் நல்லது
 
காலையில் எழுந்தவுடன் போதுமான அளவு நீர் குடிப்பதையும் உறுதி செய்யவும்...
 
காலையில் திட உணவு சாப்பிடுபவர்கள் 
 
நோயாளிகளாகதான் இருப்பார்கள்
காலையில் நீர் உணவு குடலை கழுவி சுத்தமாக்குகிறது,.
 
உழைப்புக்கு பின திடஉணவு உடலை பலமாக்குகிறது...
 
காலை 7 மணியிலிருந்து 11 மணிக்குள் நீங்கள் சாப்பிடும் உணவும் நீரும்தான் தான் உங்கள் நோயை தீர்க்கப் போகிறது
 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷


ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்வது எப்படி ......

மணக்கால் அய்யம்பேட்டை | 4:23 PM | Best Blogger Tips

 தயிர் சாதம் இப்படி மிகச்சுவையா ...

அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் சாதம், 1/2 கப் பால் மற்றும் 2 கப் தயிர், தேவையான அளவு உப்பு இவை அனைத்தினையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
Curd rice recipe| dahi chawal|thayir sadam|curd recipe |curd rice|rice  recipe - YouTube


 
தயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
 
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
கடுகு- 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
பச்சை மிளகாய்- 1
இஞ்சி- சிறிய துண்டு
மாங்காய்- சிறிய துண்டு
கேரட்- 1/2
பால்- 1/2 கப்
தயிர்- 2 கப்
மாதுளை பழம்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
சாதம்- 3 கப்
 
ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்வது எப்படி.?
 
முதலில் எடுத்து வைத்துள்ள 1/2 கப் பாலினை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளுங்கள். அதுபோல 3 கப் அளவிற்கு சாதம் நன்றாக குழைவாக வேக வைத்து கொள்ளுங்கள்.
 குழைவான சுவையான ஹோட்டல் தயிர் சாதம் ரகசியம் இதுதான்|curd rice with English  subtitle |Lunchbox recipe - YouTube
அதன் பின்பு எடுத்து வைத்துள்ள இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மாங்காய், பச்சை மிளகாய், மாதுளை பழம் மற்றும் கேரட் இவை அனைத்தினையும் தண்ணீரில் சுத்தமாக அலசி கொண்டு சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
 How to make Perfect Curd Rice | Thayir Sadam | தயிர் சாதம் | Desert Food  Feed - YouTube
அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் சாதம், 1/2 கப் பால் மற்றும் 2 கப் தயிர், தேவையான அளவு உப்பு இவை அனைத்தினையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஐயர் வீட்டு தயிர் சாதம் | Hotel Style Curd R Recipe
ஒரு 2 நிமிடம் கழித்து பவுலில் இருக்கும் சாதத்துடன் நறுக்கி வைத்துள்ள மாங்காய், இஞ்சி மற்றும் கேரட்டை சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள்.
 
கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் இவை அனைத்தினையும் சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை கிண்டி விடுங்கள்.
 
அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் பொருட்களை பவுலில் இருக்கும் சாதத்தில் சேர்த்து நன்றாக கிண்டி கொள்ளுங்கள்.
 
இப்போது அந்த சாதத்தின் மீது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி விடுங்கள். 
 
அவ்வளவு தான் சுவையான ஐயர் வீட்டு தயிர் சாதம் ரெடி.....
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷



மிளகு பொங்கலுக்கு....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips

 May be an image of congee and text that says "がーかン மிளகு மி பொங்கல்"

மிளகு பொங்கலுக்கு சிறந்த தொடு உணவு, தேங்காய் சட்னியா... இல்லை சாம்பாரா...
 
இப்படி ஒரு கேள்வியோட ஒரு பட்டி மன்றம் நடத்தினா உங்க ஆதரவு எந்த பக்கம்... இது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்விதான்... ஆனா என்னை கேட்டா ரெண்டுமே அசத்தலான தொடு உணவுதான்...
 
பெரும்பாலான மக்களுக்கு காலையில இந்த மிளகு பொங்கல் சாப்பிட கொடுத்தா சாப்பிடவே மாட்டாங்க. அதுக்கு முக்கியமான காரணம் இந்த பொங்கல் சாப்பிட்டதுமே பலருக்கு தூக்கம் வந்திடும். அதுக்கு காரணம் பொங்கல்ல நெய் அதிகமா சேர்த்து செய்யறதால இதுல கலோரிகள் அதிகமா இருக்கு.
 
பொங்கல் சாப்பிட்டதும் செரிமானம் ஆக அதிக ஆக்சிஜன் தேவைப்படும். இதனால மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைஞ்சு, டேக் டைவர்சன் எடுத்து வயிற்று பக்கம் போகுது. மூளையோட செயல் திறன் குறையறதால தூக்கம் வர்ற மாதிரி ஒரு உணர்வு நமக்கு ஏற்படுது. இந்த பொங்கல் மட்டுமில்ல கலோரிகள் அதிக அளவுல உள்ள எந்த உணவு சாப்பிட்டாலும் நமக்கு இதே போலதான் தூக்கம் வரும். யார் எது வேணா சொல்லட்டும். எனக்கு இந்த மிளகு பொங்கல் ரொம்ப பிடிக்கும்பா 😋...
 
எனக்கு மிளகு பொங்கல்,வடை உடன் தேங்காய் சட்னி - யும் பில்டர் காபி  சுவையோ சுவை அந்த சுவைக்கு .இந்த சோழ நாட்டின் சாதாரண பிரஜை ...ரமேஷ் அடிமை.


மார்கழி மாசம் நம்மூர் கோவில்கள்ல பிரசாதமா இந்த மிளகு பொங்கல் கொடுப்பாங்க. சின்ன வயசுல அந்த குளிர்லயும் குளிச்சிட்டு (சில சமயம் குளிக்காம) கோவிலுக்கு போய் சுடச்சுட தர்ற அந்த பொங்கல தொண்ணை இலையில வாங்கி சாப்பிடும் போது, அந்த குளிருக்கு இதமா தொண்டைக்குள்ள இறங்கும். ஒரே ஒரு குறை என்னன்னா, தொட்டுக்க ஒரு சட்டினியோ சாம்பாரோ குடுத்திருக்கலாம் 🤭.
 
சில ஹோட்டல்ல பொங்கல்ங்கற பேர்ல மஞ்சள் பொடியும் மிளகும் மட்டும் போட்டு கொண்டாந்து ஒரு வஸ்துவை இலையில வைப்பாங்க... இலையில வச்சுட்டா நீ கொடுக்கறதெல்லாம் நாங்க பொங்கல்னு சொல்லி சாப்பிடணும்மான்னு நம்ம வாய் நம்மளை பார்த்து கேவலமா கேட்கும். சாப்பிட்டு முடிச்சதும் வயிறும் கூட சேர்ந்து கழுவி ஊத்தும். இந்த மாதிரி பொங்கல் செய்யற அவங்களையெல்லாம் பிடிச்சி அண்ணனோட 50 வது படத்தை 5 தடவை பார்க்க வைக்கணும் 🤗.
 
ஒரு நல்ல மிளகு பொங்கலுக்கு உதாரணமே வறுத்து சேர்த்த முந்திரியும் அந்த நெய் மணமும்தான். அப்படியொரு பொங்கல் சாப்பிடணும்னா கண்டிப்பா நீங்க பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும். சில 'என்னமோபவன்' ஹோட்டல்கள்ல இன்னும் மோசம் பண்ணுவாங்க. பொங்கல்ங்கற பேர்ல ஒரு சதுரமான பாத்திரத்துல கொண்டாந்து கொடுப்பாங்க. அதை கவுத்தோம்னா தட்டுல செங்கல்ல தூக்கி வச்சது மாதிரியே இருக்கும். இவனுங்களை என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.
 
இவ்வளவு பேசறியே நீயே ஒரு நல்ல பொங்கல் ரெசிபி சொல்லேன்னு நீங்க சொல்றது கேட்குது. அதுக்காகத்தான் இந்த ரெசிபி. படிச்சிட்டு கட கடன்னு கிட்சனுக்கு ஓடிப்போய், பொங்கல் செஞ்சி தட்டுல போட்டு கொண்டாங்க பார்ப்போம்...
 
தேவையான பொருட்கள் :
 
அரிசி : 1 கப்
பாசிப்பருப்பு : 1/2 கப்
முந்திரி : 10
மிளகு : 1 1/2 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
நெய் : 2 லிருந்து 4 ஸ்பூன்
இஞ்சி : சிறு துண்டு
கருவேப்பிலை : 1 கொத்து
உப்பு : தேவையான அளவு 
 
செய்முறை :
 
ஒரு சட்டியில நெய் சேர்த்து அதுல மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நல்லா தாளிச்சு வச்சுடுங்க.
 
ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊத்தி (3 கப் தண்ணீர் ) அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, அது கூட தேவையான அளவு உப்பு சேர்த்து , 5 விசில் வர்ற வரைக்கும் வேக வச்சிட்டு ஆறினதும் அதுல, தாளிச்சது சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. அவ்வளவுதான் மக்களே...
 
எவ்வளவு எளிமையான ஒரு செய்முறைன்னு பார்த்தீங்களா 🤗... இதை அப்படியே செஞ்சி ஒரு சட்னியோ, சாம்பாரோ வச்சி சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க 🤗.
 
உங்களுக்கு மிளகு பொங்கலுக்கு தொட்டுக்க பிடிச்சது சாம்பாரா இல்லை சட்னியான்னு சொல்லுங்க...
 
 

சமையல் டிப்ஸ்:!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:54 PM | Best Blogger Tips
Image result for சமையல் டிப்ஸ்
1. பருப்பு அவிக்கும்போது, சிறிது நல்லெண்ணெய் விட்டால், எளிதாக வெந்துவிடும்.
*****************
2. நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தால், எளிதில் கெடாது..
3. இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் .. இட்லி பூப்போன்று வரும்.
4. சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, லேசாக சூடான பாலை சேர்த்துக்கொண்டு பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
5. குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
6.சர்க்கரைப் பாகில் எலுமிச்சைசாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது. பூத்துப்போகாது
7. ரோஜாப்பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்தப் பூவை முகர்ந்து பார்த்தாலே தலைவலி, தலை பாரம் போன்ற சின்னச் சின்ன பிரச்சினைகள் நீங்கும். இதழ்களை மென்று தின்றால், வாய்ப்புண், துர்வாடை அகலும். ரோஜாப்பூவை சாறாக அல்லது கசாயமாக குடித்துவந்தால், பெண்களின் கருப்பை வலுவடையும்.அத்துடன் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலி, அதீத ரத்தப்போக்கு நீங்கும்.
* கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
* பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டீர்களா? கவலையே வேண்டாம். பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
* கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும்.
* வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும்.
* புதிதாக அரைத்த மிள்காய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.
* வெண்டைக்காய்ப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து , பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகுகேக் வெந்திருக்கிறதாஎன்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குமுன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின் வடிவமும் சுவையும் மாறிவிடும்.
* மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்யப் போகிறீர்களா? தாளிக்கும்போது இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் போட்டு , அப்பளம் நன்றாகப் பொறியும்வரை வறுத்து, பிற்கு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புதுச் சுவையோடு குழம்பு மணக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
* மீந்துபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், ஊறி மாவு போல கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீ ஸ்பூன் மோர் கலந்துவிட்டால், மறுநாளும் சாதம் மல்லிகைப்பூப் போல உதிர் உதிராக வரும்.
* நமத்துப்போன பிஸ்கட்டுகளை அப்படியே ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு, ஒரு மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பாருங்களேன். பிஸ்கட் கரகர, மொறுமொறுவென இருக்கும்.
* காபித்தூள் பாக்கெட்டை பிரிக்காமல் அப்படியே ஃப்ரிஜ்ஜில் வைத்து விடவும். எப்போது எடுத்தாலும், அதே மணம்! அதே குணம்!
* முருங்கை இலையைக் கிள்ளுவது கஷ்டம்தான். ஒரு ஈரத்துணிக்குள் முருங்கை கொத்தை இறுக்கமாகக் கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் பிரித்தால், இலைகள் நன்றாக உதிர்ந்திருக்கும்.
* சுரைக்காய், பரங்கிக்காய், பூசணிக்காயைக் குழந்தைகள் சாப்பிடுவதில்லையா? அவற்றை அப்படியே மிக்ஸியில் அரைத்து அடை மாவில் கலந்து அடையாக வார்த்துக் கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.
* அப்பம் செய்யும்போது வட்டமாக வராவிட்டாலோ, கடினமாக இருந்தாலோ, மாவின் அளவுக்கேற்ப சூடான பால் விட்டுக் கலந்துகொள்ளவும். அப்பம் மெத்தென வட்டமாக வரும்.
* பிரியாணி செய்யும்போது , குக்கர் மூடியைத் திறந்ததுமே, எலுமிச்சைச் சாறை சிறிதளவு விட்டுக் கிளறி விடவும். பிரியாணி பொலபொலவென இருக்கும்.
* வெண்டைக்காய்ப் பொரியலுக்கு நறுக்கும்போது, அப்படியே வைத்து வட்டவட்டமாக நறுக்கக்கூடாது, நீளவாக்கில், பிளந்துவிட்டு பிறகு நறுக்கினால், உள்ளே புழு, பூச்சி இருந்தால், தூக்கி எறிந்து விடலாம்.
* பொடி வகைகளில் உப்பு அதிகமகிவிட்டால், குறிப்பிட்ட பொடி வகையில் உள்ள பருப்பு எதுவோ அதை தேவைக்கேற்ப கொஞ்சம் எடுத்துக்கொள்ளவும். அதை கடாயில் வறுத்து, பொடியாக்கி, பொடி வகையுடன் கலந்தால் சரியாகிவிடும்.
*தக்காளி சூப் செய்யும்போது, ஒரு சிறிய துண்டு பீட்ரூட்டை வேகவைத்து சேர்த்தால், சூப் நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.
* ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, அதை மசால்வடை மாவில் கலந்து வடை சுட்டால், சுப்பர் சுவை. சுடச்சுட சாப்பிட்டுவிடவேண்டும்.ஆறவிட்டால், ஜவ்வரிசிவடை ஜவ்வு வடையாகிவிடும்.
* சூப் நீர்த்துப் போய்விட்டால், வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சூப்பில் கலக்கவும். சூப் கெட்டியாகிவிடும். சுவையும் கூடும்.
* மசால்வடை மாவு நீர்த்துப்போய்விட்டதா?இரண்டு ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில் பொடியாக அரைத்து, வடை மாவுடன் சேர்க்கவும். பிறகு வடை தட்டினால், பிரமாதமாக வரும்.
* பூசணிக்காய் அல்வா செய்வதற்குமுன், காயின் மேல்தோலை சீவி, ஃரிஜ்ஜில் அரைமணிநேரம் வைக்கவும். பிறகு அதைத் துருவினால், ஒரே சீராக வரும். அல்வாவும் சுவையாக , கெட்டியாக இருக்கும்.
* திரட்டுப்பால் செய்யும்போது, சிறிய மெல்லிய எவர்சிவர் தட்டை அதனுள் போட்டுவிட்டால், பால் பொங்காமலும், அடிப் பிடிக்காமலும் கிளறவரும்.
* கேஸ் சிலிண்டரை ஒரு தெர்மாகோல் ஷீட்டின் மீது வைத்துவிட்டால், தரையில் கீரல், கரை ஏற்படாது. நகர்த்துவதும் எளிது.
* கூட்டு , பருப்பு, சாம்பார், லேசாக அடிப் பிடித்துவிட்டதா? அதைவேறு பாத்திரத்துக்கு மாற்றி, அரைமூடி எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளறவும். தீய்ந்த வாசனை வராது.
* பாகற்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ இவற்றை முதலில் களைந்த அரிசித் த்ண்ணீரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும்.பிறகு வேறு தண்ணீரில் அலசிவிட்டு சமைத்தால், கசப்பு குறையும். நிறம் மாறாது.
* கடலை மாவு, அரிசி மாவு கலந்து பஜ்ஜி செய்வதற்கு பதிலாக, கடலைப் பருப்பையும் பச்சரியையும் ஊறவைத்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துச் செய்தால், தனி ருசி.
* கைகளில் 3 சொட்டு எண்ணெய் தடவிக்கொண்டு, ப்லாக் கொட்டைகளை நன்றாகக் கைகளில் வைத்து தேய்த்து, வைத்துவிடவும். மறுநாள் பலாக் கொட்டைகளின் தோலைஉரிப்பது எளிதாக இருக்கும்.
* மரவள்ளிக் கிழங்கில் வறுவல் செய்யும்போது, பச்சையாக சீவி வறுக்காமல், 5 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்தபின் வறுத்தால், மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
* ஜவவ்ரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுக்கவும். அதில் வெந்நீரை ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும். கேஸ் செலவும் மிச்சமாகும்.
Related image

 நன்றி இணையம்