எது மகிழ்ச்சி??

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips
எது மகிழ்ச்சி க்கான பட முடிவு


கண் பார்வை இல்லாத பொியவர் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே *" நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம்* எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
*அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.* அந்த வழியை கடந்த பெண்  ஒருவள், பொியவருக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து *அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.*
அவன் சென்ற *சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியதுபொியவருக்கு  ஆச்சரியம் தாங்க முடியவில்லை.*
வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.
பொியவருக்கு அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
*அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன?* எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.
இரண்டாம் வாசகத்தில் " *இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை"* என்று இருந்தது.
இரண்டு வாசகங்களுமே பொியவர் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் பொியவர் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.
எது மகிழ்ச்சி க்கான பட முடிவு
*உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.*

*எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்...*.
Image may contain: one or more people, sunglasses and closeup

நன்றி இணையம்


பப்பாளி பழம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:44 AM | Best Blogger Tips


No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.
No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.


நன்றி Tamil Health24

முயற்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips
முயற்சி க்கான பட முடிவு

முயற்சியின்றி வாழ்க்கையை தொடங்குகிறவன் ஓட்டைப் படகில் பயணத்தை தொடங்குகின்றான். 'என் விதி அப்படி' என்று சொல்கிறவன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான விதிகளை அறியாதவன். என்னால் முடியாது என திண்ணையில் படுத்துத் துாங்குகிறவனுக்கு வாழ்க்கை என்பதே துக்கமாகத்தான் முடியும். மனித ஆற்றலை செயல்படுத்த போடப்படும் 'சுவிட்ச்' தான் 'முயற்சி'. ஆற்றல் மனிதனுக்கு வெளியில் இல்லை. அவனுக்கு உள்ளே தான் உள்ளது. தனக்குள் இருக்கும் அந்த ஆற்றலை அவனே தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சோம்பேறிகள் எப்போதும் சுகபோகமாய் பேசுவார்கள். எதற்கும் சுலபத்தில் விளக்கம் சொல்லுவார்கள். எல்லாமே அவர்களுக்குத் தெரியும், ஒன்றைத் தவிர; அது தான் முயற்சி. பட்டுக்கோட்டை அழகாக பாடியுள்ளார், இரண்டு வரிகளில்.'சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்வார்''
திருவள்ளுவர் கூட, தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'' - என்று பாடியுள்ளார்.
சிலர் அதிர்ஷ்டமில்லை என்று சர்வசாதாரணமாகச் சொல்லுவார்கள். சந்தர்ப்பங்களின் சேர்க்கை தான் அதிர்ஷ்டம். சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டியவர்கள் மெத்தனமாக இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்றால் என்ன அர்த்தம்?
Image may contain: 1 person, closeup
இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி பெ.சுகுமார்*