முயற்சியின்றி வாழ்க்கையை தொடங்குகிறவன் ஓட்டைப் படகில் பயணத்தை தொடங்குகின்றான். 'என் விதி அப்படி' என்று சொல்கிறவன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான விதிகளை அறியாதவன். என்னால் முடியாது என திண்ணையில் படுத்துத் துாங்குகிறவனுக்கு வாழ்க்கை என்பதே துக்கமாகத்தான் முடியும். மனித ஆற்றலை செயல்படுத்த போடப்படும் 'சுவிட்ச்' தான் 'முயற்சி'. ஆற்றல் மனிதனுக்கு வெளியில் இல்லை. அவனுக்கு உள்ளே தான் உள்ளது. தனக்குள் இருக்கும் அந்த ஆற்றலை அவனே தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சோம்பேறிகள் எப்போதும் சுகபோகமாய் பேசுவார்கள். எதற்கும் சுலபத்தில் விளக்கம் சொல்லுவார்கள். எல்லாமே அவர்களுக்குத் தெரியும், ஒன்றைத் தவிர; அது தான் முயற்சி. பட்டுக்கோட்டை அழகாக பாடியுள்ளார், இரண்டு வரிகளில்.'சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்வார்''
திருவள்ளுவர் கூட, தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'' - என்று பாடியுள்ளார்.
திருவள்ளுவர் கூட, தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'' - என்று பாடியுள்ளார்.
சிலர் அதிர்ஷ்டமில்லை என்று சர்வசாதாரணமாகச் சொல்லுவார்கள். சந்தர்ப்பங்களின் சேர்க்கை தான் அதிர்ஷ்டம். சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டியவர்கள் மெத்தனமாக இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்றால் என்ன அர்த்தம்?
இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*