கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:13 | Best Blogger Tips

 


*கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.*

*⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.*

கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.


இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்

*கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும்.*


 கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி.

 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்.

 நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்.

 ஞானம் பெற - சுவாமிமலை.

 கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்.

 எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க - பட்டீஸ்வரம்.

 உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.

 செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்.

 கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்.

 இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.

 பெண்கள் ருது ஆவதற்கும்,

ருது பிரச்சினைகள் தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).

 திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி.

 நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.

 மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம் குழந்தைபாக்கியத்திற்கு.இரட்டை லிங்கேஸ்வரர்.சென்னியமங்கலம்.திப்பிராஜபுரம்

 பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி.

 கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்.

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.

எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்.

நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.

 

 நன்றி இணையம்

உண்மையான தாய் பாசத்தால் தனயன் புனித தளம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:56 | Best Blogger Tips

 



ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவசெய்யுங்கள்.

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு

அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது!


உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

"பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.


தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான்

கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது,

தாஜ் மஹாலை குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?

வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார்,

தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர்.

தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல,

உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் ..

 


 நன்றி இணையம்

சினிமா நம் சமூகத்தை சீரழித்து விடும்..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:35 | Best Blogger Tips

 



அலைகள் ஓய்வதில்லை என்ற பாரதிராஜவின் ஒரு காதல் படம்

அது வெறும் காதல் படம் அல்ல

இந்த சமூகத்தில படிக்கும் மாணவ மாணவிகளிடம் காம காதலின் ஈன புத்தியை விதைத்த படம்

ஒரு மாணவனும் மாணவியும் படிப்பதை விட காதலிப்பதை மிக முக்கியமான விசயம் என்பதை கற்று தந்த படம் அது...

அன்று தொடங்கிய கலாச்சார சீரழிவு பல மாணவ மாணவிகள் படிக்க போகும் இடங்களில் காதலிப்பது கட்டாயம் போலவும், அது மற்ற மாணவ மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய கவுரம் போலவும் நினைத்து தங்கள் படிப்பை இழந்தவர்கள் ஏராளமானவர்கள்

ஒரு சமயம் படிக்கும் வயதில் காதலிக்கவில்லை என்றால் நான் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போய் இருப்பேன் என்று இன்று கவலைப்படுவர்கள் ஏராளம்

பள்ளி கல்லூரி காம காதலால் வாழ்வை இழந்தவர்களுக்கு எல்லாம் காரணமாக இருந்தது சினிமாத்துறை தான்....

இன்று பல மாணவிகள் கற்ப்பிழக்க காரணம் சினிமாவில காட்டும் மோகம் ஊட்டும் காதல் காட்சிகள் தான்...

சினிமாவை சீர்படுத்த சட்டம் வரவில்லை என்றால் சினிமா நம் சமூகத்தை சீரழித்து விடும்..


நன்றி இணையம்

சிவ பரமசிவம்

மாவட்ட தலைவர்

கல்வியாளர் பிரிவு

நாகை மாவட்டம்

 


மலையாள இயக்குனர் அலி அக்பர்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:13 | Best Blogger Tips

 


மலையாள இயக்குனர் அலி அக்பர்...

#ஆர்எஸ்எஸ் #சேவாபாரதி குறித்து...

அவர்களுக்கு மதம் இல்லை ...

அரசியல் இல்லை ...

பெரும்பாலான சேனல்கள் அவர்களுக்காக பேசத் தயாராக இல்லை ..


அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தில் குதிக்கத் தயங்குவதில்லை

சேற்றில் இறங்கவோ துர்நாற்றம் வீசும் உடல்களைத் தோண்டவோ அவர்கள் தயங்குவதில்லை ...

அவர்களால் அதை ஜீரணிக்க முடியாவிட்டாலும்,

கோவிட் மற்றும் நிப்பா அவர்களுக்கு ஒன்றுமில்லை ...

எத்தனை குடும்பங்களுக்கு அவர்கள் ஒரு நிழலைக் கொடுத்திருக்கிறார்கள் ... சாதி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் ...

பஞ்சத்தின் போது, ​​அவர்கள் வீடு மற்றும் வீட்டிற்கு மருந்து மற்றும் உணவுடன் செல்வதைக் காண முடிந்தது ..

சிலர் சேவை வழியில் தங்கள் உயிரைக் கொடுத்தனர் ..

அமைச்சர்கள் அவர்களிடம் வரவில்லை, நினைவுச்சின்னம் அமைக்கப்படவில்லை ....

அவர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை ...

ஒவ்வொரு பேரழிவிலும், அவர்கள் அழைக்கப்படாமல் ஓடுகிறார்கள் ... சேவைக்குப் பிறகு அமைதியாகத் திரும்புகிறார்கள் ...

நான் அவர்களுடன் நடந்திருக்கிறேன் ..

அவர்களின் செயல்களில் ஆச்சரியப்படுகிறேன் ...

அவர்கள் ...


இந்தியாவின் குழந்தைகள்

எண்ணெயிடப்பட்ட இயந்திரம் போல ...

அமைதியாக ...

நன்றி என்ற இரண்டு எழுத்துக்களை எதிர்பார்க்காமல் வேலை செய்பவர்கள் ...

அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்த்திருக்கிறேன் ...

பலர் அவர்களைப் பற்றி பேச தயங்கினாலும், அவர்கள் அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

நீங்கள் ஒரு எதிரி அல்லது நட்பு என்பதைப் பொருட்படுத்தாமல் ...

ஆன்மா எல்லாவற்றிலும் ஒரு பகுதி என்று அவர்கள் ஒரு தர்மத்தை நம்புகிறார்கள் ...

அது

எல்லாவற்றையும் ஒரே நிலையில் இருந்து உள்வாங்கும் தர்மம் ...

எல்லா வழிகளும் ஒரே கடவுளுக்கு சொந்தமானது என்று நம்பும் தர்மம் ...

அதாவது சனாதன தர்மம்...


அதுவே அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றமாகும் ...

காக்கி நிக்கர்களும், நெற்றியில் குங்குமப்பொட்டும் வித்தியாசமாகவும், விளையாட்டுத்தனமாகவும் தோற்றமளித்தால், அவர்கள் அதை பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பின்னர் தயங்காமல் அவர்களை கேலி செய்தவர்களுக்கு ஒரு ஆபத்தென்றால், முதல் ஆளாக அவர்களைக் காப்பாற்றச் செல்கிறார்கள் ...

அவர்கள் யஜ்ஞத்தின் மூலம் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் ....

முடிவுகளை விரும்பாமல் செயல்களைச் செய்பவர்கள் ...

நீங்கள் அவர்களை மாட்டு சாணம் கும்பல் என்று அழைக்கும்போது, ​​நான் அவர்களை ஊழியர்கள் மற்றும் சேவா பாரதி என்று அழைப்பேன் ...

நான் பெருமையுடன் ஒரு வணக்கம் தருவேன் ...

எங்கே சோகத்தைப் பார்த்தாலும்,,

அவர்கள் அங்கே இருப்பார்கள் ...

அன்புள்ள ஊழியர்களே, நீங்கள் எனக்குப் பிரியமானவர்கள் ...

யார் உங்களைப் பார்க்கவில்லை என்று பாசாங்கு செய்தாலும் அல்லது உங்கள் செயல்பாடுகளை மறைத்தாலும்,,

நீங்கள் செய்யும் செயல்பாடுகள் உன்னதமானது என்று நான் இதயத்திலிருந்து உங்களுக்குச் சொல்வேன் ...

உண்மை ...

உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக நீங்கள் மாறிவிட்டது என்பது சத்தியமான உண்மை ...

தண்ணீர் மட்டம் உயரத் தொடங்கிய அந்த நொடியே,

நீங்கள் காக்கி நிக்கர்களை அணிந்து களத்திற்கு வந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

பாரத் மாதா கி ஜெய் ..

கேரள மீடியாக்களே,

மனசாட்சியை விற்று விட்டீர்களா...

அர்ப்பணிப்பான சேவையை அவமதிக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா.

லால் சலாம்.

 

நன்றி இணையம்

கோவாக்சினுக்கு தாமதத்திற்கு காரணம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:13 | Best Blogger Tips

 


கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

உலக சுகாதார அமைப்பு எங்களது கோவாக்ஸினுக்கு அனுமதி கொடுக்க தயங்கியதற்கு முக்கிய காரணம் இந்திய ஊடகங்கள் கோவாக்ஸின் பற்றி எதிர்மறை விமரிசனங்கள் செய்ததே என கோவாக்ஸின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா நேற்று ஒரு நிகழ்ச்சியில் சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

கோவாக்ஸினுக்கு எதிராக புரளிகிளப்பியதில் முக்கியமானவர்கள் பல ஊடங்களுக்கும் பங்குண்டு. மேலும் பல அரசியல்வாதிகளும் இந்திய தடுப்பூசிக்கு எதிராக விமர்சனங்கள் வைத்தார்கள். பிரதமர் மோடி ஏன் தடுப்பூசி போடவில்லை, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா என்றார் திருமாவளவன்! முதல்வர் எடப்பாடிபழனிசாமி பிரதமர் மோடியும் சேர்ந்து கொரனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் ஸ்டாலின்!

பிரதமர் மோடி போடாமல் மக்கள் மீது மருந்து வியாபாரம் செய்ய தனியார் துறையை வளர்க்க மக்களை பலிகடா ஆக்குகிறார்கள் என்றனர் கம்யூனிஸ்ட்கள்! எதுக்கு தடுப்பூசி அனுமதிக்கு இவ்ளோ அவசரம்ணு நக்கல் செய்தார் ராகுல்காந்தி! கொரனா தடுப்பூசியின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல் மக்கள் மீது திணிக்க முயற்ச்சி நடக்கிறது என்றார் கனிமொழி! தமிழ்நாட்டின் கோபாலபுர ஊடகங்கள் பலவும் கோவாக்ஸினுக்கு எதிராக புரளி கிளப்பின.

கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது 6 மாதம் கழித்து தான் அனுமதி கிடைத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தில், மற்ற தடுப்பூசிகளை விட கோவாக்சின் அதிக சோதனைகளை எதிர்கொண்டது. இறுதியில் நாம் வென்றது நல்ல விஷயம். இது செயல்முறையைப் பற்றியது அல்ல. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி பற்றி நாட்டில் உள்ள எதிர்மறைவாதிகளால் கூறப்பட்ட பல்வேறு விஷயங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே அவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் இருமடங்கு உறுதியாக இருக்க விரும்பினர். தீவிரமாக மதிப்பாய்வு செய்யவும் அவர்கள் விரும்பினர். ஒவ்வொரு சிறிய பிரச்சனையும் அவர்களுக்குப் பெரிய விஷயமாக மாறியது.என பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

ஃபைசர், மாடர்னா, சீனோவக்ஸ் உள்ளிட்டவற்றிற்கு வெறும் இரண்டு வாரங்களில் அனுமதி கொடுத்த உலக சுகாதார அமைப்பு, கோவாக்ஸினுக்கு 6 மாதங்கள் எடுத்துக் கொண்டது. கோவாக்ஸினின் தரவுகளை பார்க்காமல் ஊடக புரளிகளை ஏன் உலக சுகாதார அமைப்பு கணக்கில் எடுத்துக் கொண்டது என்பது புரியாத புதிர்.

 


நன்றி இணையம்