அறிவை கொண்டு அன்பை எடை போட வேண்டாம் *அன்புக்கு ஒரு நாளும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:49 | Best Blogger Tips

 


டி என்--சேஷன்,இவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது, உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். வழியில், நிறைய குருவிக் கூடுகள் நிறைந்த ஒரு பெரிய மாந்தோப்பை

அவர்கள் பார்க்க நேர்ந்தது . அதைப் பார்த்ததும், அங்கு சென்றனர். இருவரும் எல்லா குருவி கூடுகளும் பார்க்க மிக அழகாக இருந்தன. அந்த அழகில் லயித்து மயங்கிய சேஷனின் மனைவி இரண்டு கூடுகளை வீட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்பினார். அந்த மாந்தோப்பில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்த ஒரு சிறுவனை,

உடன் வந்த பாதுகாவலர்கள் மூலம்அழைத்து வர செய்து , கூடுகளை எடுத்து தரக் கோரி, அச்சிறுவனுக்கு ₹10/- கொடுப்பதற்கு முன் வந்தார் சேஷனின் மனைவி .

ஆனால் சிறுவனோ தான் கூடுகளை தரமுடியாது நீங்கள் தரும் காசும் வேண்டாம் என மறுத்துவிட்டான்.

உடனே, சேஷன் அவனிடம் பேரம் பேசி ₹50/- தருவதாக கூறி தொகையை உயர்த்தி பார்த்தார் .

சேஷன் ஒரு பெரிய அதிகாரி என்பதால், அவர் சொன்னதைச் செய்யும்படி உடன் வந்த காவலர்கள் கூடுகளை எடுத்து தரும்படி சிறுவனை வற்புறுத்தினர்.



சிறுவன் சேஷனையும் அவரது மனைவியையும் பார்த்து அழுது கொண்டே "சாப்ஜி! நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்" என்று சொன்னான். சேஷனும் அவர் மனைவியும் சிறுவனையே பார்க்க அவன் அழுது கொண்டே மீண்டும் பேச துவங்கினான். "தாய்க் குருவி, தன் குஞ்சுகளுக்கான உணவுகளை தேட வெளியே சென்றுள்ளது திரும்பி வந்து அவற்றை அங்கே காணவில்லை என்றால் அந்த தாய் குருவி அழுவாள்.


அதைப் பார்க்க எனக்கு மனம் இல்லை."என்று கூறி கொண்டே விம்மி அழுதான். அவன் கூறியதை கேட்ட சேஷனும் அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர்.

சேஷன் சொன்னார்! "அந்தச் சிறுவனின் முன்னால் நான் பெரிய ஐ.ஏ.எஸ் என்பதெல்லாம் போய் அவன் சொன்னதைக் கேட்டு என் மனம் உருகியது.


ஒரு சாதாரண கடுகு விதை போல நான் அவனுக்கு முன்னால் இருந்தேன். அவர்கள் தங்கள் விருப்பத்தை

கை விட்டனர். திரும்பி வந்த பின்னரும், இந்தச் சம்பவம் அவரைக் குற்ற உணர்ச்சியுடன் பல நாட்கள் தொடர்ந்தது என்கிறார் சேஷன். அன்புக்கு அன்பையே கொடுப்போம் சின்ன சின்ன ஜீவனுக்குள்ளும் அன்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நடப்போம்.


அறிவை கொண்டு அன்பை எடை போட வேண்டாம் *அன்புக்கு ஒரு நாளும் அறிவு நிகர் ஆகவே ஆகாது.*

 

நன்றி இணையம்