சினிமா நம் சமூகத்தை சீரழித்து விடும்..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:35 PM | Best Blogger Tips

 



அலைகள் ஓய்வதில்லை என்ற பாரதிராஜவின் ஒரு காதல் படம்

அது வெறும் காதல் படம் அல்ல

இந்த சமூகத்தில படிக்கும் மாணவ மாணவிகளிடம் காம காதலின் ஈன புத்தியை விதைத்த படம்

ஒரு மாணவனும் மாணவியும் படிப்பதை விட காதலிப்பதை மிக முக்கியமான விசயம் என்பதை கற்று தந்த படம் அது...

அன்று தொடங்கிய கலாச்சார சீரழிவு பல மாணவ மாணவிகள் படிக்க போகும் இடங்களில் காதலிப்பது கட்டாயம் போலவும், அது மற்ற மாணவ மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய கவுரம் போலவும் நினைத்து தங்கள் படிப்பை இழந்தவர்கள் ஏராளமானவர்கள்

ஒரு சமயம் படிக்கும் வயதில் காதலிக்கவில்லை என்றால் நான் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போய் இருப்பேன் என்று இன்று கவலைப்படுவர்கள் ஏராளம்

பள்ளி கல்லூரி காம காதலால் வாழ்வை இழந்தவர்களுக்கு எல்லாம் காரணமாக இருந்தது சினிமாத்துறை தான்....

இன்று பல மாணவிகள் கற்ப்பிழக்க காரணம் சினிமாவில காட்டும் மோகம் ஊட்டும் காதல் காட்சிகள் தான்...

சினிமாவை சீர்படுத்த சட்டம் வரவில்லை என்றால் சினிமா நம் சமூகத்தை சீரழித்து விடும்..


நன்றி இணையம்

சிவ பரமசிவம்

மாவட்ட தலைவர்

கல்வியாளர் பிரிவு

நாகை மாவட்டம்