=================================
இந்தியாவிற்கு அலெக்சாண்டர் புறப்படும் போது தத்துவமேதை அரிஸ்டாடில் அவருக்குக் கூறியிருந்தார் இந்தியாவிலிருந்து வரும்போது ஒரு துறவியைக் கூட்டி வாருங்கள்.
அத்துறவியிடம் சந்நியாசம் என்றால் என்ன? 'ஆன்மா', மரணம், 'மரணத்தின் பின், கர்மா இவைகளைப் பற்றிய இந்திய கோட்பாட்டையும் அறிய வேண்டும் என்றார் .
அலெக்சாண்டர் இந்தியாவில் விசாரித்து அறிந்து ஒரு துறவியைச் சந்தித்தார் அவர் (Dantemus). இந்தியப் பெயர் தந்தமெஸ் பெயரை கிரேக்க நாட்டினர் பிழையாகவும் உச்சரிக்கலாம்.
அதனால் இந்தப் பெயர் சரியா தவறா என்பதும் தெரியவில்லை
அலெக்சாண்டர் இந்தியத் துறவியினது அருகாமயில் சென்றார் அவர் ஆடை எதுவுமின்றியிருந்தார்.
அலெக்சாண்டர் : நான் அரசன்
அலெக்சாண்டர்,என்னுடன் கிரேக்க நாட்டுக்கு வந்துவிடுங்கள். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்து தருகிறேன்.எனது விருந்தினராக
எனது அரண்மனையில் தங்கியிருக்கலாம.
என்னுடன் வாருங்கள்.
தந்த மெஸ்:
வருவது, போவது எல்லாமும் கழித்து விட்டவன் நான். இனி உலகுக்கு வருவதும் இல்லை.
உலகத்திலிருந்து போவதும் இல்லை. வருவதையும் போவதையும் கடந்து விட்டவன் நான்.
அதாவது கருவறையையும் கல்லறையையும் கடந்துவிட்டேன் என்ற பொருள்படக் கூறினார்
அலெக்சாண்டர் : இது மன்னனின் ஆணை, வந்துவிடுங்கள்
தந்தமெஸ்:
கடகடவெனச் சிரித்தார். யாரும் எனக்கு ஆணையிட முடியாது. மரணம் கூட எனக்கு ஆணையிட முடியாது
அலெக்சாண்டர் : வாளை எடுத்தான். வாளுக்கு வேலை கொடுக்காமல் வந்துவிடுங்கள்
தந்தமெஸ்:
நீ என்னதான் செய்வேன் என்று கூறு கிறாயோ அதை நான் எனக்கு ஏற்கெனவே செய்துவிட்டேன்.
என் தலை உருண்டு விழும்போது உன்னோடு சேர்ந்து நானும் வேடிக்கை பார்ப்பேன்
அலெக்சாண்டர் : எப்படிப் பார்க்க முடியும் நீங்கள்தான் இறத்துவிடுவீர்களே!
தந்தமேஸ் - இனிமேல் இறக்க முடியாது என்னுடைய மரணத்தை நீ வேடிக்கை பார்ப்பது போல, நானும் வேடிக்கை பார்ப்பேன்.
நீயும் பார்ப்பாய், நானும் பார்ப்பேன். இந்த உடலின் பயனும் நிறைவேறிவிடும். உன் ஆசைகளும் முடிந்து விடும். நான் ஏற்கெனவே இறந்துவிட்டேன்.
அலெக்சாண்டர் : திகைப்புற்றார்! வாளை உறையினுள் போட்டார்
தந்தமெஸ்: அலெக்சாண்டரது கண்களை உற்று நோக்கினார், கண்களை இமைக்காமல் உற்று நோக்கியபடியே இருந்தார்.
கண்கள் அகன்று விரிந்து கொண்டே போனது அவரது கண்களை தேருக்கு நேர் சந்திக்கத் தயங்கினார் அலெக்சாண்டர்
அலெக்சாண்டர் : அவரை வணங்கி மரியாதை செலுத்திவிட்டு
பின் நகர்ந்து சென்றார். (ஞானி தந்தமெஸ் தனது கண்ஒளியின் ஊடாக அலெக்சாண்டருக்குள் 'உள் மாற்றம் ஏற்படுத்திவிட்டார்.)
ஒரு சிறு பிரதேசத்தை கைப்பற்றிய அலெக்சான்டர் முழு இந்தியாவையும் தன் ஆசையின்படி கைப்பற்ற முடியாமல் தோல்வியுற்ற நிலையில் கிரேக்கம் திரும்பும் பொழுது தந்தமெஸ்ஸை நினைவுகூர்ந்தார். பாதி வழியில் கடும் நோயுற்றார்.
தந்தமெஸ்ஸிடம், மரணத்தைத் தாண்டிய ஒன்று இருந்தது.
அவர்கள் மரணத்துக்கு அப்பால் இருப்பதைக் கண்டுகொண்டனர். அவர்களிடமிருப்பது என்னிடம் இல்லை. என்னிடம் ஒன்றுமே இல்லை. அழுதார். தனது சேவகர்களை அழைத்து,
தான் இறந்தபின்பு என்னுடைய உடலைக் கல்லறைக்குக் கொண்டு செல்லும் போது தன் கைகளை வெளியே தொங்கப்போட்டு விடுங்கள் என்று ஆணையிட்டார் அலெக்சாண்டர்.
சேவகர்கள் ஏன் என்று கேட்டனர். வெறுங்கையோடு வந்தான் வெறுங்கையோடு போகின்றான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
என் வாழ்க்கை முழுக்க வீணாகிவிட்டது என் கைகள் எல்லோரும் பார்க்கக்கூடியதாக வெளியே தொங்கட்டும்.
மாவீரன் அலெக்சாண்டர் எதையும் எடுத்துச் செல்லவில்லை. வெறுங்கையோடுதான் போகிறான் என்பதை உலகு அறியட்டும் என்றார். அவரது உத்தரவு நிறைவேற்றப் பட்டது.
அலெக்சாண்டருக்கு மரணத்தை நோக்கிய விழிப்பை ஏற்படுத்தியவர் தந்தமெஸ். இவரின் கூற்று ஊடாகவே தன்னை மீளாய்வு செய்துகொண்டார் அலெக்சாண்டர்
கிரேக்க நாட்டை அடையுமுன் அலெக்சாண்டர் பாதியில் இறந்துவிட்டார்.
உலகில் எல்லா அலெக்சாண்டர்களும் இறந்தே போகிறார்கள்.
இதையேதான் புத்தர் கூறுகிறார்
"உன்னையே நீ வெல், வேறு எந்த வெற்றியும் உன்னுடையது ஆகாது.
எதை உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாதோ அதுதான் உன்னுடையது,
உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளக்கூடியது எதுவும் உன்னுடையதாகாது."🌹
நன்றி இணையம்