ஆயுத பூஜை - விஜயதசமி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | Best Blogger Tips

 Ayudha Pooja and Vijayadashami 2020 : ஆயுத பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது  தெரியுமா? - Tamil BoldSky

ஆயுத பூஜை:
 
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் பரிட்சியமே. 
 
நாடு இழந்து பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாட்டம்... வீடுகள்,  கடைகளில் கோலாகலம் | Ayudha Puja, Saraswathi Puja festival is celebrated  with enthusiasm in Tamil Nadu ...
பின்னர் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்துப் பூஜை செய்தனர்.
 முழுமஹாபாரதம்: July 2013
அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால்
 
இவ்விழாவுக்கு ஆயுதபூஜை எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
 
விஜயதசமி:
 விஜயதசமி வாழ்த்துக்கள் | Vijayadashami Wishes | Tamil eCard
பிரம்மாவை நோக்கித்தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான்.
 
தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். 
 வீரமுண்டு... வெற்றியுண்டு! - தமிழ்ஹிந்து
அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள்.
 
சூலத்தை வீசிக்கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.
 
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏🏻
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷No photo description available.  🌷 🌷🌷 🌷

நீர் சிகிச்சை.....💧

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 AM | Best Blogger Tips

 நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து'- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க  இவற்றை செய்தால் போதும்! | லைஃப்ஸ்டைல் - News18 தமிழ்


1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மாற்றாக சுத்தமான குடிநீர் 2முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும்.

2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணியால் துடைக்கக்கூடாது. அப்படியே விட வேண்டும்.

3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சூடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம்.

4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும்.

5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம். இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும்.

6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள்.

7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம். குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை. நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.

8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது.

 அச்சமயம்.


1. காலையில் குடிநீர்
2முதல் மூன்று டம்ளர் நீர் குடிக்கலாம்.
2. இரவில் கனி உணவுகள் மட்டும் சாப்பிடலாம். தோலுடன் சாப்பிட்டுப் பழக வேண்டும்.
3. சில உடற்பயிற்சிகள், யோகா செய்யலாம்.
4. இடுப்புக் குளியல், வயிற்றில் மண்பட்டி, வயிற்று ஈரத்துணி பட்டி எடுக்கலாம்.
5. இரவில் 5 கிராம் ( 1 டீஸ்பூன்) அளவில் திரிபலா பொடி, அல்லது கடுக்காய் பொடி, அல்லது நிலவாரைப் பாடி,அல்லது முருங்கைக்கீரைப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட இருவேளையில் மலக்கட்டு விலகும்.
6. இவை ஐந்தும் செய்ய இயலாமல் செய்தும் பலன் இல்லாதவர்கள் மட்டும் அஹிம்சை எனிமா எனப்படும் கருவி மூலம் 200 முதல் 300 மி.லிவரை நல்ல சுத்த நீரை மலவாய், குடல் மூலம் ஏற்றினால் இரு நிமிடங்களில் திரும்ப நீருடன் கெட்டி மலம் இளகி வெளியேறும். தேவைப்படும் சமயம் மட்டும் எனிமாக் கருவியை பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும். விலகி விடும்.

அதுபோல் உண்மைப் பசியை அறிவதற்கும் நீர் நல்ல நண்பனாக வழிகாட்டியாக, டெஸ்டராக உள்ளது. உடலில் பசி ஏற்படும் சமயம், பசி நரம்புகள் சுண்டப்படும் சமயம் 50 முதல் 60 மி.லிட்டர். அரை டம்ளர் நீர் அருந்திடும் சமயம் குறைந்தது 15 நிமிடமாவது உச்சப் பசி ஏற்படவில்லை எனில் அது பொய் பசியே. நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் உச்சப் பசி தோன்றிய அது உண்மைப் பசி எனலாம். உணவிற்கு முன் ஆசமனம் எனப்படும் ஒரு மடக்கு நீரை கையில் ஊற்றி உறிஞ்சிட பசியின் தன்மை, உடலின் காந்தை சமப்பட்டு ஜீரணம் மேம்படும் தன் மயமாதல் சிறப்படையும். உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்கவும். உணவு முடித்து 30 நிமிடம் கழித்தக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.💦💦💦💦💦💦💦💦💦


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷