உடற்பருமன் குறைக்க வழி?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips

நான் சிறு வயதிலிருந்தே குண்டாகத்தான் இருந்தேன். என் அம்மா, அவருடைய சொந்தங்கள் எல்லாருமே குண்டாகத்தான் இருப்பார்கள். திருமணத்தின் போதும் எனது உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தது. உடல் எடை குறைப்பதற்காக நானும் என் கணவரும் பலவிதமான முயற்சிகள் எடுத்தோம். தினமும் காலையில் நடைப்பயிற்சி, யோகா, கட்டுப்பாடான உணவு என்று பல முயற்சிகள் எடுத்தோம். ஆங்கில மருத்துவத்திலும் பல மருந்துகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் எதுவுமே பலன் தரவில்லை. அப்போது ஆங்கில மருத்துவத்தில், அறுவை சிகிச்சை மூலம் இரைப்பையை வெட்டி சிறிதாக்கிக் கொண்டால் உணவு அதிகம் உட்கொள்ள முடியாது, பிறகு உடல் தானாகவே இளைத்து விடும் என்று கூறினார்கள்.
அறுவை சிகிச்சை மூலம் இரைப்பையை வெட்டி சிறிதாக்கிக் கொண்டால் உணவு அதிகம் உட்கொள்ள முடியாது, பிறகு உடல் தானாகவே இளைத்து விடும் என்று கூறினார்கள்.

ஆனால் அறுவை சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தியதால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எங்களுக்குத் தெரிந்த ஒருவர், கோவை ஈஷா யோகா மையம் பற்றியும் அங்குள்ள ஈஷா புத்துணர்வு மையத்தில் நடக்கும் “யோக மார்கா” என்னும் புத்துணர்வு மற்றும் சிகிச்சை நிகழ்ச்சி பற்றியும் கூறினார். அவர் அப்போதுதான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் நோயிலிருந்து குணமாகியிருந்தார். யோக மார்கா நிகழ்ச்சி பற்றி அவர் மிகவும் சிறப்பித்துக் கூறவே, மார்ச் 2010ல் நடந்த யோக மார்கா நிகழ்ச்சியில் நானும் சேர்ந்து கொண்டேன். அது 21 நாள் நிகழ்ச்சி. இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் உடல் மற்றும் மன நிலை அறிந்து சிகிச்சை அளிக்கிறார்கள். எனக்கு சில நாட்கள் தண்ணீர், சில நாட்கள் ஜுஸ், சில நாட்கள் ஜுஸ் மற்றும் சேலட் என்றெல்லாம் மாற்றி மாற்றி கொடுத்தார்கள். சிகிச்சை ஆரம்பித்த சில நாட்களிலேயே உடல் மிகவும் லேசாக இருப்பதுபோல் உணர்ந்தேன். பயிற்சிகள் செய்வதற்கும் சுலபமாக இருந்தது. இதைத் தவிர சித்த மருந்துகளும் ஆயுர்வேத தெரபிகளும் எடுத்துக்கொண்டேன்.
யோக மார்கா நிகழ்ச்சியில் சேர்வதற்கு முன்பு எனது எடை 123 கிலோ இருந்தது. யோக மார்கா 21 நாட்கள் முடிந்தபோது எனது எடை 9 கிலோ குறைந்திருந்தது. மேலும் கூடுதலாக 20 நாட்கள் தங்கினேன். அதில் மேலும் 8 கிலோ குறைந்தேன். 41 நாட்களில் மொத்தம் 17 கிலோ குறைந்தது.
மீண்டும் 15 நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு அடுத்து நடந்த யோக மார்கா நிகழ்ச்சியிலும் சேர்ந்தேன். இதேபோல் 1 மாதம் வீட்டில், 1 மாதம் ஈஷாவில் என தொடர்ந்து இருந்தேன். இவ்வாறு தொடர்ந்து 6 முறை பங்கேற்றேன். மொத்தமாக 51 கிலோ எடை குறைந்தது. இப்போது நான் 72 கிலோ தான் இருக்கிறேன். இந்த சிகிச்சை எடுத்தபோது எனக்கு உடலளவிலும், மனதளவிலும் மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும்போது சப்பாத்தி, கம்பு, ராகி, சேலட் இந்த மாதிரி உணவு மட்டும் எடுத்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் மிகவும் சோம்பேறியாக இருப்பேன். ஒரு வேலை செய்வதென்றால் மிகவும் யோசிப்பேன். இப்போது எந்த வேலை செய்வதென்றாலும் சுறுசுறுப்பாக செய்கிறேன். மனதளவிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இந்த புத்துணர்வு மையம் (Rejuvenation Center) ஒரு மருத்துவமனை மாதிரி இல்லாமல் யோகப் பயிற்சி மையம் போல் இருப்பதாலும் அங்கிருப்பவர்கள் எப்போதும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாலும், எப்போது யோக மார்கா நிகழ்ச்சி வருகிறது என்று காத்திருந்து சந்தோஷமாக வருவேன். புத்துணர்வு மையத்திற்கு பொறுப்பேற்று இருக்கும் பிரம்மச்சாரிணி அவர்கள், “இனிமேல் நீ யோக மார்கா நிகழ்ச்சிக்கு வரக்கூடாது,” என்று அன்புக் கட்டளை இட்டுவிட்டதால் தற்போது கலந்து கொள்வதில்லை. ஆனால் இன்னும் ஒரு 5 கிலோ மட்டும் விரைவில் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். சீக்கிரமாகக் குறைத்து விடுவேன்.

எஸ். காயத்ரி தேவி, திண்டுக்கல்

மேலும் விபரங்களுக்கு
ஈஷா புத்துணர்வு மையம்
தொலைபேசி : +91-422-2515464
மின்னஞ்சல் : isharejuvenation@ishafoundation.org

ஆவாரம் பூவின் இய‌ற்கை வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:18 PM | Best Blogger Tips
ஆவாரம் பூவின் இய‌ற்கை வைத்தியம்:-

நீரிழிவு நோய் கட்டுப்படும்
ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும்.
ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.
ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும். 

ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை சம அளவு எடுத்து, அரைத்து சருமத்தில் முழங்காலுக்குக் கீழே பூசி வந்தால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால் பகுதி உணர்ச்சிபெறும்.

மூலம் குணமடையும்
ஆவரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்

நன்றி இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

திருக்கோவிலூர் !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:51 PM | Best Blogger Tips
1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது?

2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டியமெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது?

3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான்! அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, "திருக்கோவிலூர்" மலையமானுக்கு மணம் முடித்தார்.
பின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார்! இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது?

4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது?

5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது?

6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது?

7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது?

8.அரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை! ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு இருக்கும் ஊரு எது?தெரியுமா ??இன்றைய "புர்ர்"சியாளர்களுக்கு!??

"டொலர்" குரு பிறந்த ஊரு எது ? :)

அத்தனைக்கும் ஒரே பதில் தான்!
திருக்கோவிலூர்! - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்

மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips

நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் டாக்டர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி- நிர்ணயிக்கும் நேரத்தில்- சரியான அளவில்- டாக்டர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் ஆபத்தாகிவிடும்.

பொதுவாக வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், தூக்கமின்மை போன்றவைகளுக்கு டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகடைகளில் மருந்துகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். அத்தகைய மருந்துகளால் அவர்களுக்கு நோய் குறைந்ததுபோல் தோன்றினாலும், அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடல் மெல்ல மெல்ல ஆரோக்கிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும்.

டாக்டரின் பரிந்துரை இல்லாத மருந்துகளை சுயமாக வாங்கி தொடர்ந்து உட்கொண்டால், உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். டாக்டர்கள் நோயின் தன்மை, உடல்நிலை, வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்ற பலவற்றையும் ஆராய்ந்து சரியான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அதுவே முழு பலனைத்தரும்.

உலக நாடுகள் சிலவற்றில் டாக்டரின் பரிந்துரையின்றி சிலவகை மருந்துகளை மட்டும் சுயமாகவே மெடிக்கல் ஷாப் நடத்துபவர்கள் விற்பனை செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது. நம் நாட்டில் ஏராளமான வகை மருந்துகளை அவ்வாறு வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதில் அரசு கவனம் செலுத்தி, என்னென்ன வகை எமர்ஜென்சி மருந்துகளை டாக்டர் பரிந்துரையின்றி பெறலாம் என்று வழி காட்டவேண்டும். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நோயாளி மட்டுமே பொறுப்பாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காய்ச்சலோ, ஜலதோஷமோ ஏற்பட்டால் உடனே பயந்து விடவேண்டாம். முதல் நாள் ஓய்வெடுங்கள். மறுநாளும் காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தியுங்கள். உங்கள் மெடிக்கல் ஹிஸ்டரி தெரிந்த ‘பேம்லி டாக்டரிடம்’ சிகிச்சை பெறுவது நல்லது. மருந்து சாப்பிட்ட உடன் நோய் குணமாகவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

உடனே நோய் குணமாகாத போது, கொடுக்கும் மருந்தின் அளவை கூட்டலாமா என்றும் சிலர் யோசிக்கிறார்கள். டாக்டர் குறிப்பிடும் அளவைவிட அதிகமாக மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகாது என்பதை விட, பக்கவிளைவுகளை தோற்றுவிக்கும். பாதுகாப்பான மருந்தாக கருதப்படும் பாராசிட்டமாலை கூட அதிகமாக உட்கொண்டுவிட்டால் சிலநேரங்களில், சிலருக்கு பாதிப்புகள் உருவாகும்.

சிலர் டாக்டரிடம் செல்வார்கள். டாக்டர் அவரது நோய்த்தன்மைக்கு ஏற்ப ஒருவாரத்திற்கு மருந்துகள் எழுதிக்கொடுத்து, ‘சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’ என்பார். அவரோ அதே மருந்தை தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு டாக்டரிடம் வருவார். இது ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கும் செயல்முறையாகும்.

டாக்டர் குறிப்பிடும் காலம்வரை மட்டுமே குறிப்பிட்ட மருந்தை சாப்பிட்டுவிட்டு மீண்டும் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதே சரியான வழிமுறையாகும். சிலர் முதலில் இரண்டு நாட்கள் ஒரு டாக்டரிடம் காட்டி, அவர் வழங்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். மூன்றாம் நாள் இன்னொரு டாக்டரிடம் செல்வார்கள்.

முதலில் வாங்கிய மருந்து சீட்டை காட்டாமலே ஆலோசனை பெற்று, அவர் வழங்கும் மருந்துகளையும் சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்ற, சரியான அணுகு சிகிச்சை பெறவேண்டும். நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, நோயாளிகளுக்கு உணவு சாப்பிட மனம் இருக்காது. ஆனால் அவர்களுக்கு கட்டாயம் உணவு தேவை.

அதில் அன்றாடம் உடலுக்கு தேவையான கலோரியும்,சத்தும் இருக்கவேண்டும். சாப்பிடாவிட்டால், உடல் மேலும் தளர்ந்து போகும். காய்ச்சல் இருக்கும்போது எளிதாக ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ளவேண்டும். குளிர்ந்த, பழகிய உணவுகளை தவிர்க்கவேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு சேர்த்த கஞ்சி, ஓ.ஆர்.எஸ்.திரவம் போன்றவைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை கடையில் வாங்கும்போது சீட்டை வைத்து மருந்துகளை சரிபாருங்கள். மருந்தின் காலாவதி மாதத்தை கவனியுங்கள். ஒருமுறை வாங்கி பயன்படுத்திய பாட்டில் மருந்துகளை, சிலர் ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் நோய் வரும்போதும் கொடுக்கிறார்கள்.

அது தவறு. ‘சிரப்’ வடிவில் உள்ள ஆன்டிபயாடிக் மருந்து பாட்டில்களை திறந்த சில நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதன் பின்பு அதன் சக்தி குறைந்துவிடும். அதனால் திறந்த பாட்டில் மருந்துகளை நோய் தீர்ந்த பின்பு சேமித்து வைக்கவேண்டாம். பாரசிட்டமால், இருமல் சிரப் போன்றவைகளை காலாவதி தேதிவரை பயன்படுத்தலாம்.

சில மாணவர்கள் அன்றாடம் பாடங்களை படிக்காமல், பாடங்களை சேர்த்துவைத்துக்கொண்டு பரீட்சை காலத்தில் அதிக சிரத்தை எடுத்து படிக்கிறார்கள். அப்போது தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தூக்கத்தை கலைக்கும் ‘ஆம்பிட்டமின்’ வகை மாத்திரைகளை, மருந்துகடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இது அவர்கள் உடலுக்கு அவர்களே செய்துகொள்ளும் தீங்காகும். ஒருசில விளையாட்டு வீரர்கள் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை ‘ஊக்கமருந்தாக’ பயன்படுத்துகிறார்கள். அது சட்ட விரோதமானது. உடலுக்கும் ஆபத்து. நீங்கள் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சைக்காக செல்லும் டாக்டர் முறையாக கற்றவரா? போலி டாக்டரா என்பதை கண்டறியும் பொறுப்பு உங்களை சார்ந்ததுதான்.

போலி டாக்டர்கள் தங்களுக்கு தெரிந்த விதத்தில், கேள்வி ஞானம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை அளிப்பார்கள். அதனால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படும். முறையாக கற்ற டாக்டர்கள் வழங்கும் மருந்துகளும் ஒருசில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

அப்படி ஏற்பட்டால் உடனே, அதே டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறவேண்டும். வெளிநாடுகளில் டாக்டர்கள் மருந்துகளை எழுதும் போது கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. டாக்டர்கள் எழுதுவது புரியாத போது மருந்து மாறி விடக் கூடும். அதனால் வாங்கிய மருந்தை டாக்டரிடமோ, நர்சிடமோ காட்டிவிட்டு பயன்படுத்ததுவது நல்லது.

வீடுகளில் மருந்துகளை எப்போதுமே குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர் ஒருவருக்கும், குழந்தை ஒன்றுக்கும் காய்ச்சல் ஏற்பட்டால் பெரியவர் டாக்டரைப் பார்த்து வாங்கிய மாத்திரையில் அரை அல்லது கால் பகுதியை குழந்தைக்கு கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு.

மருத்துவ சாஸ்திரம் குழந்தைகளை ‘சில்ரன் ஆர் நாட் ஸ்மால் அடல்ட்ஸ்’ என்று குறிப்பிடுகிறது. ‘குழந்தைகள் வயதுக்கு வந்தவர்களின் சிறிய உருவம் அல்ல’ என்பது இதன் அர்த்தமாகும். சிறுவர்களின் ஈரல், கிட்னி போன்றவைகளின் செயல்பாடுகளிலும், இரைப்பையில் சுரக்கும் அமிலங்களிலும் வித்தியாசம் இருக்கிறது.

அதனால் பெரியவர்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை, அளவு குறைத்து ஒருபோதும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. கவனிக்காமல் இன்னொரு மருந்தை மாற்றி சாப்பிட்டுவிட்டால், உடனே கவனிக்கவேண்டும். மிகக் குறைந்த அளவே சாப்பிட்டிருந்தால் பெரிய பாதிப்பு எதுவும் நேராது. அளவு அதிகம் என்றால் தொந்தரவுதான்.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது வாந்தி வரச் செய்வதுதான் சிறந்த வழி. உப்பு கலக்கிய நீரை குடித்தோ, சிறிய துணியால் தொண்டையின் உள்பகுதியை தொட்டோ வாந்தி வரச்செய்யவேண்டும். வாந்தி வரச் செய்யும்போது அவர் முழு நினைவுடன் இருக்கவேண்டும். மண்ணெண்ணெய், ஆசிட் போன்றவைகளை குடித்தால் வாந்தி எடுக்கவைக்கக்கூடாது.

உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிடவேண்டும். இருமல் சிரப் மற்றும் காய்ச்சலுக்கான சில மருந்துகளை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி ஹிஸ்டமின் தூக்கத்தை வரவழைக்கும். சோர்வு, உற்சாகக்குறைவு போன்றவைகளும் தோன்றும். அதனால் அத்தகைய மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் நாளில் ஓய்வெடுப்பதே நல்லது.
நன்றி உலக தமிழ் மக்கள் இயக்கம்
 
CHICKEN WINGS- It’s Dangerous...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:40 PM | Best Blogger Tips

Avoid eating chicken wings frequently - ladies, especially;
a true story...!

CHICKEN WINGS- It’s Dangerous...

Avoid eating chicken wings frequently - ladies, especially; 
a true story...!

A friend of mine recently had a growth in her womb and she underwent an operation to remove the cyst.

The cyst removed was filled with a dark colored blood. She thought that she would be recovered after the surgery but! 
she was terribly wrong. A relapse occurred just a few months later. Distressed , she rushed down to her gynecologist for a 
consultation.

During her consultation, her doctor asked her a question that puzzled her.

He ask if she was a frequent consumer of chicken wings and she replied yes wondering as to how, he knew of her eating habits. 
You see, the truth is in this modern day and age; chickens are injected with steroids to accelerate their growth so that the needs 
of this society can be met. This need is none other than the need for food. Chickens that are injected with steroids are usually 
given the shot at the neck or the wings.

Therefore, it is in these places that the highest concentration of steroids exists.

These steroids have terrifying effects on the body as it accelerates growth..

It has an even more dangerous effect in the presence of female hormones, this leads to women being more prone to the 
growth of a cyst in the womb. Therefore, I advise the people out there to watch their diets and to lower their frequency of 
consuming chicken wings! A friend of mine recently had a growth in her womb and she underwent an operation to remove the cyst.

The cyst removed was filled with a dark colored blood. She thought that she would be recovered after the surgery but!
she was terribly wrong. A relapse occurred just a few months later. Distressed , she rushed down to her gynecologist for a
consultation.

During her consultation, her doctor asked her a question that puzzled her.

He ask if she was a frequent consumer of chicken wings and she replied yes wondering as to how, he knew of her eating habits.
You see, the truth is in this modern day and age; chickens are injected with steroids to accelerate their growth so that the needs
of this society can be met. This need is none other than the need for food. Chickens that are injected with steroids are usually
given the shot at the neck or the wings.

Therefore, it is in these places that the highest concentration of steroids exists.

These steroids have terrifying effects on the body as it accelerates growth..

It has an even more dangerous effect in the presence of female hormones, this leads to women being more prone to the
growth of a cyst in the womb. Therefore, I advise the people out there to watch their diets and to lower their frequency of
consuming chicken wings!
Thanks to FB I Am Proud To Be An Indian

கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:39 PM | Best Blogger Tips
கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...
 * முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.

சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும். நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...
* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.

சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும். நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.
 
நன்றி உலக தமிழ் மக்கள் இயக்கம்