கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:39 | Best Blogger Tips
கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது? 

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது. Inferior Vena Cava பாதங்களிலிருந்து இரத்தத்தை மேல எடுத்து செல்லும். இப்போது அழுத்தினால் அது சரியாக இரத்தத்தை மேலே கொண்டு செல்ல முடியாது. எனவே இரத்தம் காலில் தேங்க ஆரம்பிக்கும் பொழுது வீக்கம் ஏற்படுகிறது.

இந்த கால் வீக்கம் காலை நேரங்களில் குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். வெயில் காலங்களில் வீக்கம் அதிகரிக்கும். சிலருக்கு கை வீக்கம் கூட ஏற்படும்.
 
எப்படி சமாளிப்பது :
வீக்கம் அதிகமாக இருப்பின் சற்று பெரிதாக செருப்புகள் வாங்கி உபயோகியுங்கள்.
முடிந்தவரை வலதுபக்கம் படுக்கவும். இது மீதான அழுத்தத்தை சற்று குறைக்கும்.
கால்களை உயர்த்தி வைக்கவும்.
நிறைய தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 2 – 2 1/2 லிட்டர் குடியுங்கள்.
உப்பின் அளவை உணவில் குறைத்து கொள்ளுங்கள்.
நடைபயிற்சி அல்லது நீச்சல் தொடர்ந்து செய்வது நல்லது.
கால்களை கீழிருந்து மேலாக நீவி விடலாம்.
பார்லி கஞ்சி, வெந்தய கஞ்சி பருகலாம்.
வீக்கத்தில் பச்சை முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டி கொண்டாலும் வீக்கம் குறையும்.
ஹோமியோபதியில் இதற்கு மருந்துகள் உண்டு. உரிய சிகிச்சை பெறலாம். 

எப்பொழுது வீக்கம் கவலைப்பட வைக்கும்?
 
திடீர் என கை, கால், முகம் வீங்கினாலோ அல்லது இந்த பாகங்களில் வீக்கம் அதிகமாக இருந்தாலோ அது Pre-eclamsiaவாக இருக்க வாய்ப்பு உள்ளது. Pre-eclampsia என்பது (கொடி) சரியாக வேலை செய்யாத போது ஏற்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
 
எப்பொழுது நலம் ஆகும்.?
குழந்தை பிறந்த 2-3 வாரங்களில் முற்றிலும் வீக்கம் குறைந்து, மறைந்து விடும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது. Inferior Vena Cava பாதங்களிலிருந்து இரத்தத்தை மேல எடுத்து செல்லும். இப்போது அழுத்தினால் அது சரியாக இரத்தத்தை மேலே கொண்டு செல்ல முடியாது. எனவே இரத்தம் காலில் தேங்க ஆரம்பிக்கும் பொழுது வீக்கம் ஏற்படுகிறது.

இந்த கால் வீக்கம் காலை நேரங்களில் குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். வெயில் காலங்களில் வீக்கம் அதிகரிக்கும். சிலருக்கு கை வீக்கம் கூட ஏற்படும்.

எப்படி சமாளிப்பது :
வீக்கம் அதிகமாக இருப்பின் சற்று பெரிதாக செருப்புகள் வாங்கி உபயோகியுங்கள்.
முடிந்தவரை வலதுபக்கம் படுக்கவும். இது மீதான அழுத்தத்தை சற்று குறைக்கும்.
கால்களை உயர்த்தி வைக்கவும்.
நிறைய தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 2 – 2 1/2 லிட்டர் குடியுங்கள்.
உப்பின் அளவை உணவில் குறைத்து கொள்ளுங்கள்.
நடைபயிற்சி அல்லது நீச்சல் தொடர்ந்து செய்வது நல்லது.
கால்களை கீழிருந்து மேலாக நீவி விடலாம்.
பார்லி கஞ்சி, வெந்தய கஞ்சி பருகலாம்.
வீக்கத்தில் பச்சை முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டி கொண்டாலும் வீக்கம் குறையும்.
ஹோமியோபதியில் இதற்கு மருந்துகள் உண்டு. உரிய சிகிச்சை பெறலாம்.

எப்பொழுது வீக்கம் கவலைப்பட வைக்கும்?

திடீர் என கை, கால், முகம் வீங்கினாலோ அல்லது இந்த பாகங்களில் வீக்கம் அதிகமாக இருந்தாலோ அது Pre-eclamsiaவாக இருக்க வாய்ப்பு உள்ளது. Pre-eclampsia என்பது (கொடி) சரியாக வேலை செய்யாத போது ஏற்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

எப்பொழுது நலம் ஆகும்.?
குழந்தை பிறந்த 2-3 வாரங்களில் முற்றிலும் வீக்கம் குறைந்து, மறைந்து விடும்.

நன்றி -நலம், நலம் அறிய ஆவல்.