உடற்பருமன் குறைக்க வழி?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips


நான் சிறு வயதிலிருந்தே குண்டாகத்தான் இருந்தேன். என் அம்மா, அவருடைய சொந்தங்கள் எல்லாருமே குண்டாகத்தான் இருப்பார்கள். திருமணத்தின் போதும் எனது உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தது. உடல் எடை குறைப்பதற்காக நானும் என் கணவரும் பலவிதமான முயற்சிகள் எடுத்தோம். தினமும் காலையில் நடைப்பயிற்சி, யோகா, கட்டுப்பாடான உணவு என்று பல முயற்சிகள் எடுத்தோம். ஆங்கில மருத்துவத்திலும் பல மருந்துகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் எதுவுமே பலன் தரவில்லை. அப்போது ஆங்கில மருத்துவத்தில், அறுவை சிகிச்சை மூலம் இரைப்பையை வெட்டி சிறிதாக்கிக் கொண்டால் உணவு அதிகம் உட்கொள்ள முடியாது, பிறகு உடல் தானாகவே இளைத்து விடும் என்று கூறினார்கள்.




அறுவை சிகிச்சை மூலம் இரைப்பையை வெட்டி சிறிதாக்கிக் கொண்டால் உணவு அதிகம் உட்கொள்ள முடியாது, பிறகு உடல் தானாகவே இளைத்து விடும் என்று கூறினார்கள்.

ஆனால் அறுவை சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தியதால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எங்களுக்குத் தெரிந்த ஒருவர், கோவை ஈஷா யோகா மையம் பற்றியும் அங்குள்ள ஈஷா புத்துணர்வு மையத்தில் நடக்கும் “யோக மார்கா” என்னும் புத்துணர்வு மற்றும் சிகிச்சை நிகழ்ச்சி பற்றியும் கூறினார். அவர் அப்போதுதான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் நோயிலிருந்து குணமாகியிருந்தார். யோக மார்கா நிகழ்ச்சி பற்றி அவர் மிகவும் சிறப்பித்துக் கூறவே, மார்ச் 2010ல் நடந்த யோக மார்கா நிகழ்ச்சியில் நானும் சேர்ந்து கொண்டேன். அது 21 நாள் நிகழ்ச்சி. இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் உடல் மற்றும் மன நிலை அறிந்து சிகிச்சை அளிக்கிறார்கள். எனக்கு சில நாட்கள் தண்ணீர், சில நாட்கள் ஜுஸ், சில நாட்கள் ஜுஸ் மற்றும் சேலட் என்றெல்லாம் மாற்றி மாற்றி கொடுத்தார்கள். சிகிச்சை ஆரம்பித்த சில நாட்களிலேயே உடல் மிகவும் லேசாக இருப்பதுபோல் உணர்ந்தேன். பயிற்சிகள் செய்வதற்கும் சுலபமாக இருந்தது. இதைத் தவிர சித்த மருந்துகளும் ஆயுர்வேத தெரபிகளும் எடுத்துக்கொண்டேன்.
யோக மார்கா நிகழ்ச்சியில் சேர்வதற்கு முன்பு எனது எடை 123 கிலோ இருந்தது. யோக மார்கா 21 நாட்கள் முடிந்தபோது எனது எடை 9 கிலோ குறைந்திருந்தது. மேலும் கூடுதலாக 20 நாட்கள் தங்கினேன். அதில் மேலும் 8 கிலோ குறைந்தேன். 41 நாட்களில் மொத்தம் 17 கிலோ குறைந்தது.
மீண்டும் 15 நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு அடுத்து நடந்த யோக மார்கா நிகழ்ச்சியிலும் சேர்ந்தேன். இதேபோல் 1 மாதம் வீட்டில், 1 மாதம் ஈஷாவில் என தொடர்ந்து இருந்தேன். இவ்வாறு தொடர்ந்து 6 முறை பங்கேற்றேன். மொத்தமாக 51 கிலோ எடை குறைந்தது. இப்போது நான் 72 கிலோ தான் இருக்கிறேன். இந்த சிகிச்சை எடுத்தபோது எனக்கு உடலளவிலும், மனதளவிலும் மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும்போது சப்பாத்தி, கம்பு, ராகி, சேலட் இந்த மாதிரி உணவு மட்டும் எடுத்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் மிகவும் சோம்பேறியாக இருப்பேன். ஒரு வேலை செய்வதென்றால் மிகவும் யோசிப்பேன். இப்போது எந்த வேலை செய்வதென்றாலும் சுறுசுறுப்பாக செய்கிறேன். மனதளவிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இந்த புத்துணர்வு மையம் (Rejuvenation Center) ஒரு மருத்துவமனை மாதிரி இல்லாமல் யோகப் பயிற்சி மையம் போல் இருப்பதாலும் அங்கிருப்பவர்கள் எப்போதும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாலும், எப்போது யோக மார்கா நிகழ்ச்சி வருகிறது என்று காத்திருந்து சந்தோஷமாக வருவேன். புத்துணர்வு மையத்திற்கு பொறுப்பேற்று இருக்கும் பிரம்மச்சாரிணி அவர்கள், “இனிமேல் நீ யோக மார்கா நிகழ்ச்சிக்கு வரக்கூடாது,” என்று அன்புக் கட்டளை இட்டுவிட்டதால் தற்போது கலந்து கொள்வதில்லை. ஆனால் இன்னும் ஒரு 5 கிலோ மட்டும் விரைவில் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். சீக்கிரமாகக் குறைத்து விடுவேன்.

எஸ். காயத்ரி தேவி, திண்டுக்கல்

மேலும் விபரங்களுக்கு
ஈஷா புத்துணர்வு மையம்
தொலைபேசி : +91-422-2515464
மின்னஞ்சல் : isharejuvenation@ishafoundation.org