மூக்கிரட்டை’ -
பெயரில் மட்டும் அல்ல... குணத்திலும் வித்தியாசமானது இந்த மூலிகைத் தாவரம். தரையில்
கொடியாகப் படர்ந்து வளரும் இந்தத் தாவரத்தை மூக்குறட்டை, மூச்சரைச்சாரனை,சாட்டரணை என்றும்
சொல்வார்கள். மூக்கிரட்டையின் வேரை உலர்த்திச் சுத்தப்படுத்தி, பொடி (சூரணம்) செய்து
மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். வேர்ச் சூரணமும் வேர்ப்பட்டைச் சூரணமும் தனித்தனியாக
மருந்துக்குப் பயன்படுகிறது.
முகவாத நோய் குணமாக...
மூக்கிரட்டை வேர்ப்பட்டைச்
சூரணம் 20 கிராம், மாவிலங்க மரப்பட்டைச் சூரணம் 20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்ச்சூரணம்
20 கிராம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து 250 மி.லி. தண்ணீரில் இட்டு இரவில் ஊறவைத்துவிட
வேண்டும். காலையில் அதனை 50 மி.லி. ஆகும் வரை நன்கு கொதிக்கவைத்து, பின்னர் ஆறவைத்து
வடிகட்டி கஷாயத்தைத் தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கஷாயத்தில் 60 மி.லி. நண்டுக்கல் பற்பம் சேர்த்து தினமும் காலை பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் உட்கொண்டுவர 60 முதல் 90 நாட்களுக்குள்ளாக முகவாத நோயில் இருந்து நலம் பெறலாம்.
கண் பார்வைக்கு...
மூக்கிரட்டை வேர்ச் சூரணத்தை காலை, மாலை இரு வேளை ஒரு சிட்டிகை அளவு எடுத்து, தேனுடன் சேர்த்துத் தினமும் சாப்பிடலாம். இதனால், மங்கலான பார்வை தெள்ளத் தெளிவாகும். மாலைக்கண் நோய் தீரும்.
காமாலை, நீர்க்கட்டு குணமாக...
மூக்கிரட்டை வேர், அருகம்புல், கீழா நெல்லி ஆகிய மூன்றையும் தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, அதில் 10 மிளகை பொடித்துச் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டர் ஆகும் வரை நன்கு கொதிக்கவிட வேண்டும். சூடு தணிந்த பின் வடிகட்டி, அந்தக் கஷாயத்தை தினம் காலை, மாலை இரு வேளை உட்கொண்டால், காமாலை, வீக்கம், நீர்க்கட்டு, நீர் ஏற்றம், சோகை போன்ற நோய்களில் இருந்து குணம் பெறலாம்.
கப இருமல், ஆஸ்துமா நீங்க...
மூக்கிரட்டை வேரும் அருகம்புல்லும் தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதில் 10 மிளகைப் பொடிசெய்து சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கால் லிட்டர் ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். ஆறிய பின் வடிகட்டி, அந்தக் கஷாயத்தை தினமும் மூன்று வேளைக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் கப இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாவதோடு கீழ் வாதமும் மூச்சுத் திணறலும் தீரும்.