சாம் மானேக்சா - நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:34 PM | Best Blogger Tips

சாம் மானேக்சா
{{{lived}}}
Manekshaw.gif
சாம் மானேக்சா
எட்டாவது தலைமைத் தளபதி
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
பட்டப்பெயர் "சாம் பகதூர்"
பிறப்பு ஏப்ரல் 3, 1914
இறப்பு சூன் 27 2008 (அகவை 94)
சார்பு வார்ப்புரு:நாட்டுத் தகவல் British India (till 1947)
இந்தியாவின் கொடி இந்தியா (after 1947)
பிரிவு Indian Army
சேவை ஆண்டு(கள்) 1934–2008[1]
தரம் Field Marshal
சமர்/போர்கள் World War II
Indo-Pakistan War of 1947
Sino-Indian War
Indo-Pakistan War of 1965
Bangladesh Liberation War 1971
விருதுகள் Padma Vibhushan
Padma Bhushan
Military Cross

சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw)(ஏப்ரல் 3, 1914 - சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகித்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர்.[2] வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் கரியப்பா.

இளமை

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏப்ரல் 3, 1914-ல் ஒரு பார்சி குடும்பத்தில் சாம் மானெக்ஷா பிறந்தார் .இவருடைய தந்தை ஹோர்முஸ்ஜி மானெக்சா; தாயார் ஹீராபாய். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க விரும்பினார் மானெக்சா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர். 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்சா.[3]

இராணுவ சேவை

1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது.[4] ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த் தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் மாண்டனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது மானெக்சா மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.[5][6] தன்து உடல் வயிறு, உள்ளிட்ட 9 இடங்களில் குண்டு காயம் அடைந்தார். ரங்கூனில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுத் தேறினார். இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை மானெக்சா கைப்பற்றினார்.[7] அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்சாவின் உறுதியையும், துணிவையும் பாராட்டி போர்முனையிலேயே 'மிலிட்டரி கிராஸ்' [8] என்ற விருதை அளித்தார். 1942, ஏப்ரல் 23 ஆம் நாள் லண்டன் கெசட் இதழ் இச்செய்தியை வெளியிட்டது.[9][10]
உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார்.[3] 1946-ல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இராணுவத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் 1971

1969-ம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாகப் பதவியேற்றார். இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்சா.[11] இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவத் திறமையைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவை வெற்றி பெறச்செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார்.[12][13]

சிறப்புகள்

  • பர்மாப் போரில் சிறப்பான சேவைக்காக 1968-ம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது.
  • சாம் மானெக்சாவின் சேவையைப் பாராட்டி 1972-ம் ஆண்டு 'பத்ம விபூஷண்' விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1973, ஜனவடி 1-ம் தேதி அவருக்கு 'பீல்டு மார்ஷல்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இறுதிக் காலம்

ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார். 2007 ஆம் ஆண்டு கோகர் அயூப் என்பவர் ஓய்வு பெற்ற முன்னாள் பீல்டு மார்ஷல் மானெக்சாவின் மீது '1965-ல் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்திய ராணுவ ரகசியங்களை 20,000 ருபாய்கு விற்று விட்டதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.[14][15] இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.

உசாத்துணை

நினைவில் வாழும் வெற்றித் திருமகன், தேசமே தெய்வம் வலைதளம்

 http://en.wikipedia.org/wiki/Sam_Manekshaw

நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது.

உலக நாயகன் பீல்ட் மார்ஷல் மானேக்ஷா

மணக்கால் அய்யம்பேட்டை | 4:32 PM | Best Blogger Tips



பீல்ட் மார்ஷல் மானேக்ஷா
பிறப்பு: ஏப். 3

  40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும்,  போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத்  தோற்கடித்து சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி,  இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர் சாம் ஹோர்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்ஷா   என்ற பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா.

  இந்திய ராணுவத்தில் 2 பேர்தான் 'பீல்டு மார்ஷல்' என்ற தகுதிநிலைக்கு உயர்ந்தவர்கள். ஒருவர்,  பீல்டு மார்ஷல் கரியப்பா, மற்றவர் பீல்டு மார்ஷல் மானெக்ஷா.

  பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஹோர்முஸ்ஜி மானெக்ஷா- ஹீராபாய் என்ற பார்சி இன தம்பதியினருக்கு மகனாக ஏப். 3, 1914  ல் பிறந்தார் சாம் மானெக்ஷா.

  பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க அனுப்புமாறு தனது தந்தையிடம் கேட்டார் மானெக்ஷா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர்.  1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்ஷா.

  1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது. மூர்க்கத்துடன் வந்த ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த்  தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது அவர் மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை அவர் பிடித்தார். அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்ஷாவின் உறுதியையும், துணிந்த நெஞ்சத்தையும் பாராட்டி போர்முனையிலேயே 'மிலிட்டரி கிராஸ்' விருதை அளித்தார்.

  படுகாயமடைந்த பின் உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார். பிறகு ஆஸ்திரேலியாவில் 1946-ம் ஆண்டு சுற்றுலா சென்றார்.

  தேசப் பிரிவினைக்குப் பிறகு ராணுவத்தில் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார். இதையடுத்து 1968-ம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது.

  7 ஜூன், 1969-ம் ஆண்டு சாம் மானெக்ஷா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவ அனுபவத்தின் மூலம் இந்தியாவை வெற்றி பெறச் செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார்.

  இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்ஷா. இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது.  இதையடுத்து  ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது.

  அவரது சேவையைப் பாராட்டி 1972-ம் ஆண்டு 'பத்ம விபூஷண்' விருது நமது  அரசால் வழங்கப்பட்டது. 1973, ஜன. 1-ம் தேதி அவருக்கு 'பீல்டு மார்ஷல்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

  ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார்.

  இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்து இந்தியாவின் தங்க மகனாகத் திகழந்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.

- க.ரகுநாதன்

காண்க:












http://desamaedeivam.blogspot.in/search/label//போர்ப்படை நாயகர்

பூர்ண கும்பம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips
பூர்ண கும்பம்;
-------------------
பூர்ண என்பது நிறைவு,கும்பம் என்பது கலசம்.பூர்ண கும்பம் என்பது நிறைவான கலசம் என்று பொருளாகும்.கலசம் நிறைய தூய்மையான தண்ணீர் நிரப்பி புதிய மாவிலைகளை வைத்து அதன் நடுவே தேங்காய் வைத்து வழிபடுவது பூர்ண கும்பமாகும்.மண், செம்பு, வெள்ளி கலசங்கள் புனிதமாக கருதப்படுகின்றன.

பூர்ண கும்ப வழிபாடின் தத்துவம் என்னவென்றால்,மனிதனது வாழ்க்கை எந்த குற்றம்,குறைகளும் இல்லாமல் முழுமையானதாக இருக்க வேண்டும்.எடுத்த காரியம் பூரணமாக நிறைவுற வேண்டும் என்பதை உணர்த்தவே ஆகும்.

வேத காலத்தில் இருந்தே இந்த வழிபாட்டு முறை  கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.பூர்ண கும்பத்தின் ஐதீகம் என்னவென்றால் பாற்கடலை கடையும் போது விஷ்ணு அமிர்த கலசத்தை ஏந்தியபடி நின்றதால் அனைத்து தெய்வங்களும் பூர்ண கும்பத்தில் நிறைந்து இருப்பதாக நம்ப படுகிறது.

பூர்ண கும்ப வழிபாடு புதுமனை புகு விழா, திருமணம், பண்டிகைகள் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும்  நிச்சயம் உண்டு.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

பூர்ண என்பது நிறைவு,கும்பம் என்பது கலசம்.பூர்ண கும்பம் என்பது நிறைவான கலசம் என்று பொருளாகும்.கலசம் நிறைய தூய்மையான தண்ணீர் நிரப்பி புதிய மாவிலைகளை வைத்து அதன் நடுவே தேங்காய் வைத்து வழிபடுவது பூர்ண கும்பமாகும்.மண், செம்பு, வெள்ளி கலசங்கள் புனிதமாக கருதப்படுகின்றன.

பூர்ண கும்ப வழிபாடின் தத்துவம் என்னவென்றால்,மனிதனது வாழ்க்கை எந்த குற்றம்,குறைகளும் இல்லாமல் முழுமையானதாக இருக்க வேண்டும்.எடுத்த காரியம் பூரணமாக நிறைவுற வேண்டும் என்பதை உணர்த்தவே ஆகும்.

வேத காலத்தில் இருந்தே இந்த வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.பூர்ண கும்பத்தின் ஐதீகம் என்னவென்றால் பாற்கடலை கடையும் போது விஷ்ணு அமிர்த கலசத்தை ஏந்தியபடி நின்றதால் அனைத்து தெய்வங்களும் பூர்ண கும்பத்தில் நிறைந்து இருப்பதாக நம்ப படுகிறது.

பூர்ண கும்ப வழிபாடு புதுமனை புகு விழா, திருமணம், பண்டிகைகள் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் நிச்சயம் உண்டு.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

இந்தியாவின் உயரிய விருதுகள் - சிறப்புமிகு அமைதிக்காலப் பணி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM | Best Blogger Tips

பரம் விசிட்ட சேவா பதக்கம்

பரம் விசிட்ட சேவா பதக்கம்
Param Vishisht Seva Medal.jpg

Param Vishisht Seva Medal Ribbon.jpg
விருது குறித்தத் தகவல்
வகை வீரம்
பகுப்பு தேசியம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
விருது தரவரிசை
இல்லை ← பரம் விசிட்ட சேவா பதக்கம்அதி விசிட்ட சேவா பதக்கம்
பரம் விசிட்ட சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal அல்லது PVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------

அதி விசிட்ட சேவா பதக்கம்

அதி விசிட்ட சேவா பதக்கம்
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்காலப் பணி
பகுப்பு தேசியம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
விருது தரவரிசை
பரம் விசிட்ட சேவா பதக்கம்அதி விசிட்ட சேவா பதக்கம்விசிட்ட சேவா பதக்கம்
அதி விசிட்ட சேவா பதக்கம் (Ati Vishisht Seva Medal அல்லது AVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. துவக்கத்தில் இந்த விருது விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு - II என வழங்கப்பட்டு வந்தது. வகுப்புகளை களையும் வண்ணமாக சனவரி 27, 1967 முதல் . மறுபெயரிடப்பட்டது. 1980 ஆம் ஆண்டிலிருந்து போர்க்காலப்பணிக்கு தனியாக உத்தம் விசிட்ட சேவா பதக்கம் வழங்கப்படுவதால் இது அமைதிக்கால சிறப்புப் பணிகளுக்கு வழங்கப்படுகிறதுt[1]. .
-------------------------------------------------------------------------------------------------------------

விசிட்ட சேவா பதக்கம்

விசிட்ட சேவா பதக்கம்
Vishisht Seva Medal Ribbon.jpg
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்காலப் பணி
பகுப்பு சிறப்புமிகு சேவை
நிறுவியது சனவரி 26, 1960
வழங்கப்பட்டது இந்திய அரசு
விவரம் படைத்துறையின் அனைத்து பிரிவினரக்கும்
முந்தைய பெயர்(கள்) விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III. (சனவரி 27, 1967 வரை)
முகப்பு மையத்தில் ஐம்முனை நட்சத்திரம் கூடிய 35 மி.மீ வட்டவடிவ பதக்கம்.
நேரான பட்டயத்திலிருந்து தொங்கவிடப்பட்டது; பக்கவாட்டில் பெயர்.
பின்புறம் மேலே இந்தியில் விருது பெயருடன் கீழே அரசு இலச்சினை.
இந்தியில் "விசிட்ட சேவா பதக்கம்"
நாடா 32 மிமீ, 2 மிமீ கருநீல பட்டைகளுடன் கூடிய மஞ்சள் நாடா
விசிட்ட சேவா பதக்கம் (Vishisht Seva Medal அல்லது VSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படக்கூடியதாகும்.
இந்தப் பதக்கம் துவக்கத்தில் "விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III" என வழங்கப்பட்டது[2]. 1967ஆம் ஆண்டு முதல் தற்போதையப் பெயரில் அழைக்கப்படுகிறது. பதக்க வடிவமைப்பில் இதனால் எந்த மாறுதல்களும் இல்லை. 1980ஆம் ஆண்டு முதல் போர்க்காலச் சிறப்புப் பணிகளுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுவதால்[2] இந்த விருது போரற்ற அமைதிக்காலப் பணிச் சிறப்பிற்காக வழங்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் உயரிய விருதுகள் - சிறப்புமிகு போர்க்காலப் பணி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:04 PM | Best Blogger Tips

சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்


சர்வோத்தம் யுத் சேவா பதக்கத்திற்கான நாடா
சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் (Sarvottam Yudh Seva Medal) இந்தியாவின் மிக உயரிய போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் மிக உயர்ந்தநிலையில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய சிறப்புமிகு சேவை விருதான பரம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு ஒப்பானது. இந்த விருது விருதுக்குரியவர் இறந்தபின்னும் கொடுக்கற்பாலது.

வெளியிணைப்புகள்


-------------------------------------------------------------------------------------------------------------

உத்தம் சேவா பதக்கம்


உத்தம் யுத் சேவா பதக்கத்திற்கான நாடா
உத்தம் யுத் சேவா பதக்கம் (Uttam Yudh Seva Medal) இந்தியாவின் உயரிய போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் உயர்ந்தநிலையில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய சிறப்புமிகு சேவை விருதான அதி விசிட்ட சேவா பதக்கத்திற்கு ஒப்பானது. இந்த விருது விருதுக்குரியவர் இறந்தபின்னும் கொடுக்கற்பாலது.

-------------------------------------------------------------------------------------------------------------

யுத் சேவா பதக்கம்


யுத் சேவா பதக்கத்திற்கான நாடா
யுத் சேவா பதக்கம் (Yudh Seva Medal) இந்தியாவின் போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய சிறப்புமிகு சேவை விருதான விசிட்ட சேவா பதக்கத்திற்கு ஒப்பானது. இந்த விருது விருதுக்குரியவர் இறந்தபின்னும் கொடுக்கற்பாலது.

-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் உயரிய விருதுகள் - போர்க்காலம்/அமைதிக்காலம் பணி & வீரதீரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips

சேனா பதக்கம்

சேனா பதக்கம்
Sena Medal.jpg

Sena Medal Ribbon.jpg
விருது குறித்தத் தகவல்
வகை பதக்கம்
வழங்கப்பட்டது இந்தியத் தரைப்படை
சேனா பதக்கம் (Sena Medal) இந்தியத் தரைப்படையின் அனைத்து மட்டத்திலும், "தரைப்படை செயற்பாட்டிற்கு முகனையான பங்காற்றிய, தங்கள் பணியில் ஈடுபாடும் வீரமும் கொண்ட வீரர்களுக்கு" வழங்கப்படுகிறது. வீரரின் மறைவிற்குப் பின்னர் வழங்கவும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றோருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இது தரைப்படையில் தீரச்செயல்கள் புரிந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும். இருப்பினும் அமைதிக் காலங்களிலும் சிறப்புமிகு சேவை புரிந்த படைவீரர்களுக்கு சேனா பதக்கம் (சிறப்புமிகு) வழங்கப்படுகிறது. இந்தியத் தரைப்படையின் பாராட்டை வெளிப்படுத்தும் ஓர் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதுக்கு மேலாக வீர சக்கரம், சௌர்யா சக்கரம், யுத் சேவா பதக்கம் ஆகியன உள்ளன. இந்தப் பதக்கம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு மேலானது.
-------------------------------------------------------------------------------------------------------------

நவ சேனா பதக்கம்

நவ சேனா பதக்கம்
Nao Sena Medal.jpg
விருது குறித்தத் தகவல்
வகை பதக்கம்
வழங்கப்பட்டது இந்தியக் கடற்படை
நவ சேனா பதக்கம் (Nao Sena Medal) இந்தியக் கடற்படை தனது கடற்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காக வழங்கும் ஓர் விருதாகும். இது 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது.
முகப்பு: இந்தப் பதக்கத்தின் முதன்மை விவரணங்கள் இது ஓர் உள்ளடங்கிய ஓரங்களை உடைய ஐம்முனை வெள்ளி பதக்கமாக குறிப்பிட்டாலும் இத்தகைய பதக்கம் வெளியானதாகத் (மாதிரிகள் மற்றும் குறுவடிவங்கள் தவிர்த்து ?) தெரியவில்லை. மே 1961ஆம் ஆண்டில் இதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதன்படி கடற்படை சின்னம் முகப்பில் அமைந்த 35 மி.மீ வட்டவடிவ வெள்ளி பதக்கமாக உள்ளது. பதக்கத்தைத் தொங்கவிட ஓர் அழகிய சட்டகம் அமைக்கப்பட்டுள்ளது; இதன் ஓரத்தில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.
பின்புறம்: முதலில் ஓர் கயிறு சுற்றிய மேல்நோக்கிய திரிசூலம் பதிப்பதாக இருந்தது. 1961ஆம் ஆண்டில் இதற்கு மாற்றாக குறுக்காக ஒன்றன்மீது ஒன்று சாத்திய நங்கூரங்களைச் சுற்றி சங்கிலி வடம் அமைந்துள்ளதைப் போல வடிவமைக்கப்பட்டது. மேலே இந்தியில் "நௌ சேனா பதக்கம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
நாடா: 2 மிமீ வெள்ளை மையக்கோடுகளுடன் 32 மிமீ, கருநீலம். கருநீலம் 15 மிமீ, வெள்ளை 2 மிமீ, கருநீலம் 15 மிமீ.

-------------------------------------------------------------------------------------------------------------

வாயுசேனா பதக்கம்

வாயுசேனா பதக்கம்
Vayusena Medal Ribbon.jpg
விருது குறித்தத் தகவல்
வகை பதக்கம்
வழங்கப்பட்டது இந்திய வான்படை
வாயுசேனா பதக்கம் (Vayusena Medal) இந்திய வான்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காகவும் அமைதிக்கால சேவைகளின் சிறப்பிற்காகவும் வழங்கப்படும் இந்தியப் படைத்துறை விருதாகும். மறைவிற்கு பின்னரும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்கள் பெற்றவருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இதனை 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு 1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வீரதீரச் செயல் புரிந்தோருக்கு "வாயுசேனா பதக்கம் (வீரச்செயல்)" என்றும் பிறருக்கு "வாயுசேனா பதக்கம் (சிறப்புப் பணி)" என்றும் வகைபடுத்தப்பட்டுள்ளது.

விவரணம்

முகப்பு: தாமரை மலர்வது போன்ற நான்கு கைகள் உடைய வெள்ளி நட்சத்திரம். நடுவில் தேசியச் சின்னம். ஓர் நேர் சட்டக்கத்திலிருந்து தொங்குமாறான அமைப்பு. சட்டகத்தின் ஓரங்களில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.
பின்புறம்: சிறகுகள் விரித்த இமாலாயக் கழுகு. அதன் மேலும் கீழும் இந்தியில் "வாயு சேனா பதக்கம்" என்ற பொறிப்பு.
நாடா: 2 மிமீ அகலமுள்ள கருவெள்ளை மற்றும் செம்மஞ்சள் பட்டைகள் கீழிருந்து மேலாக குறுக்காகவும் மாறி மாறியும் இருக்குமாறு 30 மிமீ நாடா.

உசாத்துணை


-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் உயரிய விருதுகள் - அமைதிக்காலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:59 PM | Best Blogger Tips

சௌர்யா சக்கரம்

(செளர்யா சக்கரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சௌர்யா சக்கரம்
Shaurya Chakra Ribbon.jpg
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்கால வீரச்செயல்
பகுப்பு தேசிய வீரம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) அசோகச் சக்கரம், வகுப்பு III
(1967 வரை)
விருது தரவரிசை
கீர்த்தி சக்கரம்சௌர்யா சக்கரம் → இல்லை
சௌர்யா சக்கரம் (Shaurya Chakra) போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் மூன்றாவது நிலையில் கீர்த்தி சக்கரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள உயரிய விருதாகும். சேனா பதக்கங்களுக்கு மேல்நிலை விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இது அமைதிக் காலத்தில் வழங்கப்படும் வீர சக்கரம் எனலாம். 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோகச் சக்கரம், வகுப்பு III என குறிப்பிடப்பட்டது. விருதுகளில் வகுப்புகளை புகுத்திட விரும்பாத இந்திய அரசு சௌர்ய சக்கரம் எனத் தனிப்பெயரிட்டது.
இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது.
சூலை, 1999 முதல் காவல்துறை, தீயணைப்புதுறையினரைத் தவிர பிற அனைத்து வாழ்க்கைத்துறை குடிமக்களுக்கும், ஆண்பெண் பாகுபாடின்றி வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது. [1]

----------------------------------------------------------------------------------------------------------- 

கீர்த்தி சக்கரம்


கீர்த்தி சக்கரம்
Kirti Chakra Ribbon.jpg
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்கால வீரச்செயல்
பகுப்பு தேசிய வீரம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) அசோகச் சக்கரம், வகுப்பு II
(1967 வரை)
விருது தரவரிசை
அசோகச் சக்கரம்கீர்த்தி சக்கரம்சௌர்யா சக்கரம்
கீர்த்தி சக்கரம் (Kirti Chakra) போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் அசோகச் சக்கரத்திற்கு அடுத்த நிலையிலும் சௌர்யா சக்கரத்திற்கு மேல் நிலையிலும் உள்ள உயரிய விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இது அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மகா வீர சக்கரம் எனலாம். 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோகச் சக்கரம், வகுப்பு II என குறிப்பிடப்பட்டது. விருதுகளில் வகுப்புகளை புகுத்திட விரும்பாத இந்திய அரசு கீர்த்தி சக்கரம் எனத் தனிப்பெயரிட்டது.
இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------

அசோகச் சக்கர விருது


அசோகச் சக்கரம்
Ashoka Chakra Award.jpg

Ashoka Chakra Ribbon.jpg
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்கால வீரச்செயல்
பகுப்பு தேசிய வீரம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) அசோகச் சக்கரம், முதலாம் வகுப்பு
(1967 வரை)
விருது தரவரிசை
இல்லை ← அசோகச் சக்கரம்கீர்த்தி சக்கரம்
இந்தக் கட்டுரை அசோகச் சக்கரம் விருது குறித்தானது. இந்திய அரசு இலச்சினை, அசோகச் சக்கரத்தினைக் குறித்த தகவல்கள் அறிய காண்க: அசோகச் சக்கரம்.
அசோகச் சக்கரம் (Ashoka Chakra) இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லாது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்; மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம்.
இரண்டாம் முறையாகப் பெறுவோருக்கு பதக்கத்தின் நாடாவில் ஆடைப்பட்டயம் வழங்கப்படும். இந்த விருது பெற்றோர் பிற வீரச்செயல்களுக்காக கீர்த்தி சக்கரம் அல்லது சௌர்ய சக்கரம் பெற தடை இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் உயரிய விருதுகள் - போர்க்காலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips

வீர சக்கரம்


வீர சக்கரம் (Vir Chakra, Vr.C) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கு இந்தியப் படைத்துறை வழங்கும் பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம் விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம்[1].
இவ்விருது பெற்றோர் தங்களின் பெயரின் பின்னால் Vr.C என்று போட்டுக்கொள்ளலாம்.[2]

விருதின் தோற்றம்

ிந்த விருது 1-3/8 அங்குல வட்டவடிவ வெள்ளிப் பதக்கமாகும். நடுவில் சக்கரமும் தங்க முலாமில் இந்திய அரசு இலச்சினையும் புடைச்செதுக்கப்பட்ட ஐம்முனை நட்சத்திரம் முகப்பில் உள்ளது. ஓரங்களில் விருதின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஓர் சுழலும் பட்டையத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பதக்கத்தின் விளிம்பில் நடுவில் இடைவெளி விடப்பட்டு தாமரை மலர்கள் இடையில் இருக்க இந்தியிலும் (தேவநாகரி) ஆங்கிலத்திலும் விருதின் பெயரும் ஆண்டும் குறிக்கப்படுகின்றன. 32 மி.மீ அகலமுள்ள அரை கரும்நீலம், அரை செம்மஞ்சள் நாடாவில் தொங்கவிடப்படுகிறது.[3]

 

--------------------------------------------------------------------

மகா வீர சக்கரம்


மகா வீர சக்கரம் (Maha Vir Chakra, MVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்தியப் படைத்துறையின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். இந்தி மொழியில் மகாவீர் என்பது தமிழில் பெரும் வீரர் என்ற பொருளில் வழங்கும்.

விருதின் தோற்றம்

விருது பதக்கம் தரமான வெள்ளியில் வட்டவடிவில் அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து முனை முத்திரை நட்சத்திரத்தின் நடுவில் வட்டமான தங்கமுலாமிட்ட அரசு இலச்சினை இருக்குமாறு புடைச்செதுக்கப் பட்டுள்ளது. பதக்கத்தின் பின்புறம் நடுவில் இரு தாமரை மலர்களுடன் தேவநாகரி மற்றும் ஆங்கில எழுத்துருக்களில் "மகா வீர சக்கரா" என்று புடைச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த விருது படைவீரரின் இடது மார்பில் 3.2 செ.மீ அகலமுள்ள அரை வெள்ளை அரை செம்மஞ்சள் வண்ண நாடாவுடன், செம்மஞ்சள் வண்ணம் இடது தோளிற்கு அண்மையில் இருக்குமாறு குத்தப்படுகிறது.[1]
விருது பெற்றோர் தங்கள் பெயரின் விகுதியில் எம்.வி.சி என்று போட்டுக் கொள்ளலாம்.

வரலாறு

இதுவரை 155க்கும் மேற்பட்ட வீரச்செயல்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளனர். ஒரே போரில் மிக கூடுதலான மகாவீரப் பதக்கங்கள் 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பாக்கித்தான் போரில் வழங்கப்பட்டன; அப்போது பதினோரு விருதுகள் இந்திய வான்படைக்கு வழங்கபட்டது.
மகா வீர சக்கரம் பெற்றவர்களுக்கு இரண்டாம் முறையாகப் பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பெயர் விகுதியில் MVC(Bar) என்று போட்டுக்கொள்ளலாம். 1965ஆம் ஆண்டு முதன்முறையாக இவ்விதியின்படி இருவருக்கு வழங்கப்பட்டது. இந்நாள்வரை ஆறுமுறை முதல் ஆடைப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது: விங் கமாண்டர் ஜக்மோகன் நாத் (1962 & 1 செப்டம்பர் 1965), மேஜர் ஜெனரல் ராஜிந்தர் சிங் (19 மார்ச்சு 1948 & 6 செப்டம்பர் 1965), அருண் ஸ்ரீதர் வைத்யா (16 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971), விங் கமாண்டர் பத்மநாப கௌதம் (6 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971 (மறைவிற்குப்பின்னர்)), கர்னல் செவாங் ரின்ச்சென் (சூலை 1948 & 8 திசம்பர் 1971), மற்றும் பிரிகேடியர் சான்ட் சிங் (2 நவம்பர் 1965 & சனவரி 1972). இரண்டாம் ஆடைப்பட்டயங்கள் வழங்கப்பட்டவரில்லை.

--------------------------------------------------------------------

பரம வீர சக்கரம்



பரம் வீர் சக்கரம் (Param Vir Chakra அல்லது PVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது. இந்தி மொழியில் உள்ள இந்த விருதின் பெயரின் தமிழாக்கம் உயரிய வீரர் பதக்கம் என்பதாகும்.
சனவரி 26, 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசான பிறகு குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற ஆகத்து 15, 1947 முதலே அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பட்டியலிடப்பட்ட ஊழியர்களும் இந்த விருதுக்குத் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த விக்டோரியா கிராஸ் விருதிற்கு மாற்றமாக அமைந்தது.
இந்த விருதை இரண்டாம் முறை (அல்லது அதன் பின்னரும்) பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்க விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இன்று வரை, அத்தகைய வாய்ப்பு எதுவும் நடக்கவில்லை.இந்த விருதைப் பெற்றவர்கள் தங்கள் பெயரின் விகுதியில் பி.வி.சி என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரம் வீர் சக்கரத்திற்கு இணையான அமைதிக்கால மிக உயரிய படைத்துறை விருது அசோகச் சக்கர விருது ஆகும். இந்த விருது போர்களத்தில் அல்லாது காண்பிக்கப்படும் "மிக உயரிய வீரதீரச் செயலுக்கும் தன்னலமற்ற தியாகத்திற்கும்" வழங்கப்படுகிறது. இது படைத்துறை அல்லாது குடிமக்களுக்கும் வழங்கபடக்கூடியது. பரம் வீர் சக்கரத்தைப் போலவே இதுவும் மரணத்திற்கு பின்பு வழங்கக்கூடியது.
இந்த விருது பெற்ற லெப்டினன்ட் நிலைக்கு கீழான (இணையான பிற சேவையினருக்கு) நிதிப் படி வழங்கப்படுகிறது. சில நேரங்களில் நிதிக்கொடையும் வழங்கப்படுகிறது. மரணத்திற்குப் பின்னால் வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியம், அவர் இறக்கும்வரை அல்லது மறுமணம் புரியும்வரை, வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த இந்த நிதி உதவி பெரும் சர்ச்சையில் இருந்தவாறுள்ளது. மார்ச்சு 1999 நிலவரப்படி இது ரூ.1500/- என்ற அளவிலேயே இருந்தது.

நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் உயரிய விருதுகள் - நடுவண் இந்தி மேம்பாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:51 PM | Best Blogger Tips

மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது 

வில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு பயண இலக்கியம் (2 தனிநபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1993
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 30
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்ஸ்தான், இந்திய அரசு
விவரம் இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) முனைவர். கமலா சாங்கிருத்யாயன்
முனைவர். சியாம் சிங் ராசி
கடைசி வெற்றியாளர்(கள்) முனைவர். பூரண் சந்திர ஜோஷி
அரிராம் மீனா
மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது (Mahapandit Rahul Sankrityayan Award, தேவநாகரி: महापंडित राहुल सांकृत्यायन पुरस्कार) இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (நடுவண் இந்தி அமைப்பு) வழங்கும் விருதாகும். இந்தி செவி சம்மான் என்றும் ராகுல் சாங்கிர்த்யாயன் தேசிய விருது என்றும் அழைக்கப்படும் இந்த விருது இந்தியில் பயண இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாக இருவருக்கு வழங்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------

கங்கா சரண் சிங் விருது


கங்கா சரண் விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி வளர்ச்சி (3-16 தனிநபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1989
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 90
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான்,
இந்திய அரசு
விவரம் இந்திய இலக்கிய விருது
கங்கா சரண் சிங் விருது (Ganga Sharan Singh Award, தேவநாகரி: गंगाशरण सिंह पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பாகிய கேந்திரிய இந்தி சன்சுதான் இந்திமொழியை பரப்பவும் இந்திமொழிப் பயிற்சிக்கும் பேருதவியாக இருந்த இலக்கியவாதிகளுக்கு தேசிய அளவில் வழங்கும் விருதாகும். 1989ஆம் ஆண்டு இந்தி பயிற்றுவிக்கும் திட்டத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களின்போது நிறுவப்பட்ட ஏழு விருதுகளில் இதுவும் ஒன்றாகும். [1] இந்திய விடுதலை வீரரும் இந்தி மொழிப் பற்றாளருமான கங்கா சரண் சிங் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.

 

------------------------------------------------------------------

சுப்பிரமணிய பாரதி விருது


சுப்பிரமணிய பாரதி விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்திஇலக்கியம் (2-8 தனிநபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1989
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 46
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான்,
இந்திய அரசு
விவரம் இந்திய இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) டா. பிரபாகர் மச்வே
டா. ராசேசுவர் வர்மா
டா. அர்தேவ் பகாரி
டா. என்.ஏ. நாகப்பா
பேரா. ராம்சிங் டோமர்
டா. பக்த் தர்சன்
டா. பி. கோபால் சர்மா
திரு. மங்கல்நாத் சிங்
கடைசி வெற்றியாளர்(கள்) பேரா. நிர்மலா ஜெயின்
பேரா. நந்தகிசோர் நவல்
சுப்பிரமணிய பாரதி விருது (Subramanyam Bharati Award) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு தமிழ் மொழியின் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. அவ்வாண்டில் டா. பிரபாகர் மச்வே, டா. ராசேசுவர் வர்மா, டா. அர்தேவ் பகாரி, டா. என்.ஏ. நாகப்பா, பேரா. ராம்சிங் டோமர், டா.பக்த் தர்சன், டா. பி. கோபால் சர்மா மற்றும் திரு. மங்கல்நாத் சிங் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது


முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது
डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி ஊக்குவிப்பு (1-2 நபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1994
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 15
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு
விவரம் இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) முனைவர். லோதர் லுட்சு
கடைசி வெற்றியாளர்(கள்) பேரா. தனுதா இசுடாசிக்
முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது (Dr. George Grierson Award, தேவநாகரி: डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार) இந்தியாவின் நடுவண் அரசின் மனிதவளத் துறையின் கீழுள்ள கேந்திரிய இந்தி சன்சுதான் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வண்ணம் மிக உயரிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் ஓர் விருதாகும். இது முகனையாக வெளிநாடுகளில் இந்திமொழி ஆக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.

வரலாறு

1989ஆம் ஆண்டு மொழியியலாளர் முனைவர் ஜியார்ஜ் அப்ரகாம் கிரீர்சன் நினைவாக இது நிறுவப்பட்டது. முதல் விருது 1994ஆம் ஆண்டு முனைவர் லோதர் லுட்சுவிற்கு வழங்கப்பட்டது.

விருதுகள்

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருதுகள் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் வெளிநாட்டில் இந்தியை வளர்த்தமைக்காகவும் இந்தியில் ஆய்வுக்கட்டுரைகள் வடித்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------

பத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது


பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது
Padmabhushan Dr. Moturi Satyanarayan Award
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி வளர்ப்பு (1 தனிநபர்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 2002
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 6
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு
விவரம் இலக்கியம்
முதல் வெற்றியாளர்(கள்) அரிசங்கர் ஆதேஷ்
கடைசி வெற்றியாளர்(கள்) உஷா பிரியம்வதா
பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது (Dr. Moturi Satyanarayan Award, தேவநாகரி: पद्मभूषण डॉ. मोटूरि सत्यानारायण पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு பெரும் இந்தி மொழி ஆர்வலர் மோடுரி சத்யநாராயண் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. முதல் விருது 2002ஆம் ஆண்டு அரிசங்கர் ஆதேசிற்கு வழங்கப்பட்டது.

விருது பெற்றோர்

ஆண்டு பெயர் நாடு
2002 அரிசங்கர் ஆதேசு
2003 பி. செயராமன்
2004 பேரா. யமுனா கச்ரூ
2005 கிருஷ்ணா கிசோர்
2006 பிரேம் லதா வர்மா
2007 உஷா பிரியம்வதா அமெரிக்கா

நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.