சாகித்திய அகாதமி விருது
சாகித்திய அகாதமி விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | இலக்கியம் (தனிநபர்) | |
நிறுவியது | 1954 | |
முதலில் வழங்கப்பட்டது | 1954 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2011 | |
வழங்கப்பட்டது | சாகித்திய அகாதமி, இந்திய அரசு | |
விவரம் | இந்தியாவின் இலக்கிய விருது |
தமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாகவே உள்ளது.[1]
பொருளடக்கம்
சாகித்ய அகாதமி
சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதமி.
பரிசுத் தொகை
சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை
இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.[2]
சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்
- சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்
- சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
- சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்
- சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர்கள்

ஞானபீட விருது
ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில்இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் (Bharathiya Jnanpitham) என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின்(Shanti Prasad Jain) என்பவர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.
இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் {வாக்தேவி} சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப் (G Shankara Kurup)க்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.
1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பை பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகப்பட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும் இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து