இந்தியாவின் உயரிய விருதுகள் - நடுவண் இந்தி மேம்பாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:51 PM | Best Blogger Tips

மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது 

வில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு பயண இலக்கியம் (2 தனிநபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1993
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 30
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்ஸ்தான், இந்திய அரசு
விவரம் இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) முனைவர். கமலா சாங்கிருத்யாயன்
முனைவர். சியாம் சிங் ராசி
கடைசி வெற்றியாளர்(கள்) முனைவர். பூரண் சந்திர ஜோஷி
அரிராம் மீனா
மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது (Mahapandit Rahul Sankrityayan Award, தேவநாகரி: महापंडित राहुल सांकृत्यायन पुरस्कार) இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (நடுவண் இந்தி அமைப்பு) வழங்கும் விருதாகும். இந்தி செவி சம்மான் என்றும் ராகுல் சாங்கிர்த்யாயன் தேசிய விருது என்றும் அழைக்கப்படும் இந்த விருது இந்தியில் பயண இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாக இருவருக்கு வழங்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------

கங்கா சரண் சிங் விருது


கங்கா சரண் விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி வளர்ச்சி (3-16 தனிநபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1989
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 90
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான்,
இந்திய அரசு
விவரம் இந்திய இலக்கிய விருது
கங்கா சரண் சிங் விருது (Ganga Sharan Singh Award, தேவநாகரி: गंगाशरण सिंह पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பாகிய கேந்திரிய இந்தி சன்சுதான் இந்திமொழியை பரப்பவும் இந்திமொழிப் பயிற்சிக்கும் பேருதவியாக இருந்த இலக்கியவாதிகளுக்கு தேசிய அளவில் வழங்கும் விருதாகும். 1989ஆம் ஆண்டு இந்தி பயிற்றுவிக்கும் திட்டத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களின்போது நிறுவப்பட்ட ஏழு விருதுகளில் இதுவும் ஒன்றாகும். [1] இந்திய விடுதலை வீரரும் இந்தி மொழிப் பற்றாளருமான கங்கா சரண் சிங் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.

 

------------------------------------------------------------------

சுப்பிரமணிய பாரதி விருது


சுப்பிரமணிய பாரதி விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்திஇலக்கியம் (2-8 தனிநபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1989
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 46
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான்,
இந்திய அரசு
விவரம் இந்திய இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) டா. பிரபாகர் மச்வே
டா. ராசேசுவர் வர்மா
டா. அர்தேவ் பகாரி
டா. என்.ஏ. நாகப்பா
பேரா. ராம்சிங் டோமர்
டா. பக்த் தர்சன்
டா. பி. கோபால் சர்மா
திரு. மங்கல்நாத் சிங்
கடைசி வெற்றியாளர்(கள்) பேரா. நிர்மலா ஜெயின்
பேரா. நந்தகிசோர் நவல்
சுப்பிரமணிய பாரதி விருது (Subramanyam Bharati Award) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு தமிழ் மொழியின் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. அவ்வாண்டில் டா. பிரபாகர் மச்வே, டா. ராசேசுவர் வர்மா, டா. அர்தேவ் பகாரி, டா. என்.ஏ. நாகப்பா, பேரா. ராம்சிங் டோமர், டா.பக்த் தர்சன், டா. பி. கோபால் சர்மா மற்றும் திரு. மங்கல்நாத் சிங் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது


முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது
डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி ஊக்குவிப்பு (1-2 நபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1994
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 15
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு
விவரம் இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) முனைவர். லோதர் லுட்சு
கடைசி வெற்றியாளர்(கள்) பேரா. தனுதா இசுடாசிக்
முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது (Dr. George Grierson Award, தேவநாகரி: डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार) இந்தியாவின் நடுவண் அரசின் மனிதவளத் துறையின் கீழுள்ள கேந்திரிய இந்தி சன்சுதான் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வண்ணம் மிக உயரிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் ஓர் விருதாகும். இது முகனையாக வெளிநாடுகளில் இந்திமொழி ஆக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.

வரலாறு

1989ஆம் ஆண்டு மொழியியலாளர் முனைவர் ஜியார்ஜ் அப்ரகாம் கிரீர்சன் நினைவாக இது நிறுவப்பட்டது. முதல் விருது 1994ஆம் ஆண்டு முனைவர் லோதர் லுட்சுவிற்கு வழங்கப்பட்டது.

விருதுகள்

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருதுகள் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் வெளிநாட்டில் இந்தியை வளர்த்தமைக்காகவும் இந்தியில் ஆய்வுக்கட்டுரைகள் வடித்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------

பத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது


பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது
Padmabhushan Dr. Moturi Satyanarayan Award
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி வளர்ப்பு (1 தனிநபர்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 2002
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 6
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு
விவரம் இலக்கியம்
முதல் வெற்றியாளர்(கள்) அரிசங்கர் ஆதேஷ்
கடைசி வெற்றியாளர்(கள்) உஷா பிரியம்வதா
பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது (Dr. Moturi Satyanarayan Award, தேவநாகரி: पद्मभूषण डॉ. मोटूरि सत्यानारायण पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு பெரும் இந்தி மொழி ஆர்வலர் மோடுரி சத்யநாராயண் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. முதல் விருது 2002ஆம் ஆண்டு அரிசங்கர் ஆதேசிற்கு வழங்கப்பட்டது.

விருது பெற்றோர்

ஆண்டு பெயர் நாடு
2002 அரிசங்கர் ஆதேசு
2003 பி. செயராமன்
2004 பேரா. யமுனா கச்ரூ
2005 கிருஷ்ணா கிசோர்
2006 பிரேம் லதா வர்மா
2007 உஷா பிரியம்வதா அமெரிக்கா

நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.