இந்தியாவின் உயரிய விருதுகள் - விளையாட்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:46 PM | Best Blogger Tips

ராஜீவ் காந்தி கேல் ரத்னா

ராஜீவ் காந்தி கேல் ரத்னா
Rajiv Gandhi Khel Ratna Award.jpg
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு விளையாட்டு (தனிநபர்/ குழு)
நிறுவியது 1991 - 1992
முதலில் வழங்கப்பட்டது 1991 - 1992
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு Indian Rupee symbol.svg750,000
விவரம் இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருது.
முதல் வெற்றியாளர்(கள்) விசுவநாதன் ஆனந்த்
கடைசி வெற்றியாளர்(கள்) ககன் நரங்
விருது தரவரிசை
ராஜீவ் காந்தி கேல் ரத்னாஅருச்சுனா விருது
ராஜீவ் காந்தி கேல் ரத்னா இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது. இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் ரூ.750,000க்கு கூட்டப்பட்டது.[1]
1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------

 

அருச்சுனா விருது


அருச்சுனா விருது
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு விளையாட்டு (தனிநபர்)
நிறுவியது 1961
முதலில் வழங்கப்பட்டது 1961
கடைசியாக வழங்கப்பட்டது 2011
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு Indian Rupee symbol.svg 500,000
விருது தரவரிசை
ராஜீவ் காந்தி கேல் ரத்னாஅருச்சுனா விருது → ஏதுமில்லை
அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 500,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அருச்சுனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப்பட்டு இந்திய பரம்பரை விளையாட்டுகளும் உடல் நலிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன.

2001ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன:
  • ஒலிம்பிக் விளையாட்டுகள் / ஆசிய விளையாட்டுகள் / பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் / உலக கோப்பை / உலக சாதனையாளர் துறைகள் மற்றும் துடுப்பாட்டம்
  • இந்திய பரம்பரை விளையாட்டுகள்
  • உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள்

 

துரோணாச்சார்யா விருது


துரோணாச்சார்யா விருது
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு விளையாட்டு பயிற்றுனர்கள் (தனிநபர்)
நிறுவியது 1985
முதலில் வழங்கப்பட்டது 1985
கடைசியாக வழங்கப்பட்டது 2010
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு Indian Rupee symbol.svg. 500,000
துரோணாச்சார்யா விருது 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது
----------------------------------------------------------------------------------------------------------

தியான் சந்த் விருது


 
தியான் சந்த் விருது (Dhyan Chand Award) இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சம் (500000) நிதிப்பரிசு தவிர ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------


நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.