உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips


தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது,
இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.
நல்லெண்ணெய்
2.
பூண்டு
3.
மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.
எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.
2
நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.
2
நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.
மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.
மேலும், சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
இந்தச் செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்களும்) பயன் பெற இந்தச் செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.
Happy Tuesday Morning my Dear Guru,GOD,
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran


நன்றி ! நன்றி ! நன்றி !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 AM | Best Blogger Tips

மனதார நன்றி 
எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான 
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
பக்தி என்பது வெளிவேஷமல்ல
என்பதை எனக்குப் பயங்கரமாய்
புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு
எப்பொழுதும் மனதார நன்றி !
நாமஜபத்தின் அற்புத மஹிமையை
எனக்குச் சரியாகப் புரியவைத்த
என்னுடைய பாபங்களுக்கு
என்றுமே மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் Kadavuluku மனதார நன்றி !
இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !
எனக்கு என்னை ஆத்மா என்று
உணர வைக்க என்னை குருவிடத்தில் சேர்ப்பித்த என்னுடைய வாழ்க்கைக்கு
என்றென்றும் மனதார நன்றி . . .
நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன் ! ! !
மனதார நன்றிகள் .
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran



*காற்றில் தவழும்* *கண்ணதாசன்*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips

*90வது பிறந்த_நாள் 24. 6. 16.*
நான் நிரந்தரமானவன் - அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியபடி இன்றும் நமது இதயங்களில் வாழும் - உன்னத கவி - கண்ணதாசன் அவர்கள். 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று 'கன்னியின் காதலி'யில் எழுதியது முதல் பாட்டு. 'மூன்றாம் பிறை'யில் வந்த, 'கண்ணே கலைமானே' கவிஞரின் கடைசிப் பாட்டு.
அச்சம் என்பது மடமையடா', 'சரவணப் பொய்கையில் நீராடி', 'மலர்ந்தும் மலராத...', 'போனால் போகட்டும் போடா...', 'கொடி அசைந்ததும்', 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை', 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்', 'சட்டி சுட்டதடா கை விட்டதடா...' ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுதும் இருக்கும் காவியங்கள்
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. 'அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும். திடீரென்று காணாமல் போய்விடும். 'பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு' என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும்தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ். 
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
'கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்பது கவிஞரின் வாக்குமூலம். 'முத்தான முத்தல்லவோ' பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது, 'நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!' கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், 'திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா.' தனக்குப் பிடித்த பாடல்களாக, 'என்னடா பொல்லாத வாழ்க்கை', 'சம்சாரம் என்பது வீணை' ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார். கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம். 'நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான்' என்பார். காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால், முற்றுப்பெறவில்லை! ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் 'பராசக்தி', 'ரத்தத்திலகம்', 'கறுப்புப்பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். முதல் மனைவி பெயர் பொன்னம்மா. அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்! படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்! 

'
கண்ணதாசன் இறந்துவிட்டார்' என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது! 'உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன?' என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... 'புத்தகங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!' தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். 'வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங் கள்' என்றார். காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர், கரு ணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! .வெ.கி.சம்பத், ஜெயகாந்தன், சோ, பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல்ரீதியாக நெருக் கமான நண்பர்கள். 'கவிஞரின் தோரணையைவிட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்' என்பார் ஜெயகாந்தன்.
திருமகள், திரையலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றல், தென்றல் திரை, முல்லை, கடிதம், கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை. திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. 'இது எனக்குச் சரிவராது' என்றார். 'குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை' என்று தனது தவறுகளுக்கு வெளிப் படையான விளக்கம் அளித்து உள்ளார். 'பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது' என்பது அவர் அளித்த வாக்குமூலம். தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்! '. இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்... 'ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு!'

நன்றி இணையம்