"வாழ்க்கை அழகானது
முடிந்தால் அழகுபடுத்து
இல்லையெனில் அசிங்கபடுத்தாதீர்கள்."
இல்லையெனில் அசிங்கபடுத்தாதீர்கள்."
என்கிறார் டாக்டர் மு.வ
விதைக்கப்படும் விதைக்கு சரியாக தண்ணீர் பாய்ச்சி
தகுந்த நேரத்தில் உரமிட்டு வளரும் பராமரித்த மரங்களைவிட எவ்வித பராமரிப்பு இன்றி தானாகவே போராடி அடி ஆழத்திற்கு வேரினை நீட்டி நீரை உறிஞ்சி தன்னை வளர்த்துக்கொண்டு ,வளர்ந்த மரம் விழாமல் இருக்க காற்றை எதிர்த்து போராடி நிற்கும் மரங்கள் பலமானவை ஆகும்.இதிலிருந்து பெறப்படும் விதைகளும் வீரியமானதாக இருக்கும்.
தகுந்த நேரத்தில் உரமிட்டு வளரும் பராமரித்த மரங்களைவிட எவ்வித பராமரிப்பு இன்றி தானாகவே போராடி அடி ஆழத்திற்கு வேரினை நீட்டி நீரை உறிஞ்சி தன்னை வளர்த்துக்கொண்டு ,வளர்ந்த மரம் விழாமல் இருக்க காற்றை எதிர்த்து போராடி நிற்கும் மரங்கள் பலமானவை ஆகும்.இதிலிருந்து பெறப்படும் விதைகளும் வீரியமானதாக இருக்கும்.
காலசூழலால் தனக்கு என யாரும் இன்றி போராடி வெற்றி பெறுவது என்பது ஒரு சவால் ஆகும்.
நமது மறைந்த ஜானாதிபதி அப்துல்கலாம்
கூறியதுபோல
"வானம் என்றும்
நீலநிறமாகவே இருக்கும் என்றோ !
பாதை முழுவதும் பூக்களே
பூத்திருக்கும் என்றோ !
இறைவன் நமக்கு வாக்கு தரவில்லை!
கூறியதுபோல
"வானம் என்றும்
நீலநிறமாகவே இருக்கும் என்றோ !
பாதை முழுவதும் பூக்களே
பூத்திருக்கும் என்றோ !
இறைவன் நமக்கு வாக்கு தரவில்லை!
நாம் தான்
அனுதினத்திற்கான
சக்தியை
போராடுவதற்கான
மனதினை
தரவேண்டும் என
பிரார்திக்க வேண்டும் !
அனுதினத்திற்கான
சக்தியை
போராடுவதற்கான
மனதினை
தரவேண்டும் என
பிரார்திக்க வேண்டும் !
எவ்வளவு அற்புதமான வரிகள் யார் சொன்னது வானம் எப்பொழுதும் நீலநிறமாகவே இருக்கும் என்று அதில் சில கவலை மேகங்கள் வந்து அடிக்கடி மறைக்கலாம்.மீன்டும் மறையலாம்.மறைப்பதும்,மறைவதுமே இயல்பு.எதுவும் நிரந்தரமில்லை.இந்த நிலையும் மாறும் என்பது உண்மை ஆகும்.
நம் பயணிக்கும் பாதை முழுவதும் பூக்களே நிறைந்திருக்கும் என கூறி இறைவன் உன்னை படைக்கவில்லை.பாதைகளில் கரடு,முரடுகளும் மற்றும் முட்களும் இருக்கலாம்.அதுபோல வாழ்வு முழுவதும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்கும் என்று இறைவன் உனக்கு வாக்கு தரவில்லை.பல பிரச்சினைகளும்,போராட்டங்களும் மற்றும் ஏமாற்றங்களும் கலந்ததுதான் வாழ்வு.
வாழ்க்கை என்பது கசப்பு உட்பட எல்லா சுவையும் கலந்ததுதான்.எனவே இறைவனால் படைக்கப்பட்ட நம்மை தானே அழித்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாது.தான் நினைத்த மதிப்பெண் வரவில்லை என்பதாலோ அல்லது தேர்வில் தவறிவிட்டாலோ உலகமே இருண்டுவிட்டதைப்போல அல்லது மாற்றுவழியே இல்லாததைப்போல தன்னையே மாய்த்துக்கொள்ளும் இளைஞர்கள் சிலரை பார்க்கும்போது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.
இதற்கு நமது கல்வி அமைப்பையும் ,பெற்றோர்களையும்தான் குறைகூற வேண்டியிருக்கிறது.அதிக மதிபபெண்கள் எடுப்பதிலேயே நாம் குறியாக இருப்பதும்,படிக்கவில்லை எனில் வாழ்வே அஸ்தமாகிவிடும் எனும் மனநிலையை உருவாக்குவதும் ஆகும்.இதற்காக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்ற கருத்துக்கு வரவில்லை.நமது பிள்ளைகளுக்கு"எந்த உயிரினமாக இருந்தாலும் போராடி ஜெயிப்பதே நிலைக்கும்" என்ற சார்லஸ்டார்வினின் சிந்தாத்தை அவனது மனதில் திணிக்கவில்லையே என்ற வருத்தம்தான்.
இதேபோல விரும்பியவள் கிடைக்கவில்லை என்றோ அல்லது விருப்பமானவளாக வாழ்க்கை துணை அமையவில்லை என நித்தமும் தன்னையும்,,தன்னை சார்ந்த உறவினர்களையும் வேதனைப்பட வைப்பதில் என்ன லாபம்.அதனால் தன்னையே கெடுத்துங்கொள்ளும் அல்லது மாய்த்துக்கொள்ளும் இளைஞர்கள் பட்டாளங்களுக்காகவும் இப்பதிவை பயன்படுத்திக்கொள்கிறேன்.தான் விரும்பியபடி நடக்கவில்லை எனில் அது இறைவனின் சித்தம் ஆகும்.அவர் .கிரகங்கள் வழியாக படுத்தும் பாடு ஆகும்.
வள்ளுவர் கூறியதுபோல
"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படா தவர்"
"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படா தவர்"
என்பதுபோல துன்பமே இவனை எவ்வளவு துன்ப படுத்தினாலும் துன்ப பட மாட்டிகிறானே ? என துன்பத்திற்கே துன்பம் வரவைத்துவிடவேண்டும் என்கிறார்.இது ஒரு நல்ல அணுகுமுறை