சாதகத்தில் உங்களை வழி நடத்தி செல்லும் கேப்டன் யார் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 9:44 AM | Best Blogger Tips


கிரகங்கள் படுத்தும் பாடு -
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
ஒரு கப்பலை வழி நடத்தி செல்ல ஒரு நல்ல கேப்டன் அவசியம் ஆகும்.அதேபோல மனித வாழ்வினை நல்லபடியாக நடத்தி செல்ல கேப்டனாக செயல்படுபவர் அவரது லக்கனாதிபதியே ஆகும்.எப்படி ஒரு நல்ல கேப்டன் சிக்கலான சூழ்நிலையிலும் சமயோதிததனமாக செயல்பட்டு பிரச்சினையிலிருந்து காத்து செல்வதுபோல லக்கனாதிபதியானது அவரது சாதகத்தில் ஏனைய கிரகங்கள் பலமிழந்து இருப்பினும் லக்கனாதிபதி மட்டும் பலமுடையதாக இருந்தால் அவரது வாழ்கை கடலில் எவ்வளவுதான் தத்தளித்தாலும் சரியாக அவரை அவராகவே வழிநடத்தி வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் எதிர்த்து போராடி வெற்றிபெற்றுவிடுவார்.
லக்கனாதிபதியானது ஒருவருக்கு சுபராக இருக்கும் பட்சத்தில் நேரிய வழியிலும்,பாவராக இருக்கும் பட்சத்தில் நேரிய வழி அல்லாத நிலையிலாவது போராடி ஜெயிப்பார்.
லக்கனாதிபதியானது ஆட்சி,உச்சம் ,கோணம் மற்றும்,கேந்திரம் போன்ற நிலைகளில் இருந்து பலமடைந்து இருந்தால் அவர் எவ்வித சூழலிலும் தாழ்ந்து போகமாட்டார்.
லக்கனாதிபதியானது சுபராக இருக்கும் பட்சத்தில் கேந்திரம் மற்றும் கோணங்களில் பலமடைந்து இருத்தலும்,பாவியாக இருக்கும் பட்சத்தில் மறைவிடங்களில்(3,6,8,12 )இருந்து ஆட்சி,உச்சம் போன்ற பலமடைந்து இருப்பது நலம்.
ஒருவருக்கு என்ன திசை நடந்தாலும் அவை லக்கனாதிபதி இருக்கும் இடத்திலிருந்து கேந்திர மற்றும் கோணங்களில் இருந்து லக்கனாதிபதிக்கு சுபராக இருக்கும் பட்சத்தில் அந்த திசையானது நல்லது செய்யும்.மாறாக மறைவிடம் மற்றும் பகை பெற்று இருப்பின் அந்த கிரகத்தின் திசையானது சாதகருக்கு நல்லது செய்யாது...
ஒரு திசை நடத்தும் கிரகமானது லக்கனத்திற்கு மறைவிடமாக இருந்தாலும் லக்கனாதிபதிக்கு கேந்திர கோணங்களில் இருப்பின் அந்த திசை நன்மையையே செய்யும்.
லக்கனத்திற்கு மறைவிடங்களில் லக்கனாதிபதி இருந்தாலும் அவை உசசம்,ஆட்சி போன்ற பலம் பெற்று இருந்து அந்த லக்கனாதிபதி இருந்த வீட்டிற்குரியவன் கேந்திர கோணங்களில் பலமாக நின்று லக்கனத்தையோ அல்லது லக்கனாதிபதியையோ குருபகவான் பார்த்தால் சாதகர் எந்த நிலையிலும் முன்னேறி செல்வான்.
லக்கினத்திற்கு சுப ஆதிபத்திய கிரகங்கள் கேந்திர கோணங்களில் நின்று இவர்களுக்கு இலக்கினாதிபதியின் சேர்க்கை,பார்வை மற்றும் சாரத்தொடர்பு இருந்தால் இவர்களின் திசா புத்தி காலங்களில் சாதகன் லக்கினாதிபதியின் ஆதரவு ஆதிபத்திய கிரகங்களுக்கு இருப்பதால் சாதகன் வாழ்வில் முன்னேறுவான்.
ஒருவனுடைய சாதகத்தில் யோகம் தரும் கிரகங்கள் இலக்கினத்திற்கு கேந்திரகோணங்களில் நின்று பலமடைந்து இருந்தாலும் அக்கிரகங்கள் இலக்கினாதிபதிக்கு மறைவிடங்களில் நின்றால் அக்கிரகங்கள் நடத்தும் திசையால் சாதகருக்கு நன்மைகள் ஏற்படுவதில்லை.
லக்கினத்திற்கு சுப ஆதிபத்திய கிரகங்கள் இலக்கினத்திற்கு மறைந்தாலும் அவை இலக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருந்தால் அவை முழு மறைவு அல்ல. அவ்வாதிபத்திய திசை காலங்களில் சாதகனுக்கு நன்மையே உண்டாகும்.
லக்கினத்திற்கு சுப ஆதிபத்திய கிரகங்கள் லக்கினத்திற்கு ஆறு,எட்டு ,பணிரெண்டில் மறைந்து லக்கினாதிபதிக்கும் மறைந்தால் முழு மறைவே.சாதகனுக்கு அக்கிரக திசை காலங்களில் சாதகனுக்கு நன்மைகள் உருவாகுவதில்லை.
ஒரு சாதகத்தில் ஒரு கிரகம் அசுப ஆதிபத்தியம் பெற்று அவை லக்கினாதிபதிக்கு மறைவு ஸ்தானத்தில் நின்று திசை நடத்தினால் அந் கிரக ஆதிபத்தியத்திற்குரிய தீய பலன்களையே கொடுப்பான்.
லக்கினாதிபதி நின்ற வீட்டோன் ஆட்சியே பெற்றிருந்தாலும் அவை இலக்கினத்திற்கும்,இலக்கினாதிபதிக்கும் மறைந்து விட்டால் அந்த சாதகனின் வாழ்க்கையில் பிரச்சினைகளும் ,போராட்டங்களும் நிறைந்ததாகவே இருக்கும்.
லக்கினத்திற்கு துர்ஸ்தானதிபதிகள் (6,8,12) அவரவர் வீட்டில் ஆட்சி பெற்று இலக்கினாதிபதி தொடர்பு பெறின் அவரது திசை காலங்களில் அந்த தொடர்பு பெற்ற துர்ஸ்தானதிபதியை பொறுத்து சாதகர் தீய பலனை அனுபவிப்பான்.
எனவே எந்த திசை நடந்தாலும் சோதிடராகிய நாம் அவை லக்கினத்திற்கும்,லக்கினாதிபதிக்கும் எவ்வித தொடர்பு உள்ளது என்பதை முதலில் நன்கு கவனித்த பின்பே சாதகருக்கு பலனளிப்பது அவசியமாகும்.இலக்கினத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத அந்த திசையானது சாதகனுக்கு நன்மையை உண்டாக்குவதில்லை.
உதாரணமாக லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி லக்கினாதிபதிக்கும் ஐந்து,ஒன்பது போன்ற கேந்திரகோண இடத்தில் பலம் பெற்றால் அவை நடத்தும் திசை பலன்தரும்.மாறக மறைவிடத்தில் நிற்பின் சாதகர் பலவித வேதனைகளுக்கு ஆட்படுவார் .
( தங்களுடைய சாதகங்களையும் இதுபோல கிரகம் நடத்தும் திசையானது லக்கினாதிபதியோடு தொடர்பு பெற்றுள்ளதா ?அவை நன்மை செய்யுமா ? தீமையை செய்யுமா ? என்பதை ஆராய்சி செய்து போன் வழியாக எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் பலன் பெறலாம்.தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 6
47 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை அனுப்பி பலன பெறலாம்.கட்டணம் உண்டு )
அன்புடன் 
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆராய்சி ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
My Email
masterastroravi@gmail.com
My website
செல்; 97 151 89 647
செல்; 740 257 08 99