மனைவி அமைவதெல்லாம் ......

மணக்கால் அய்யம்பேட்டை | 9:33 AM | Best Blogger Tips


கிரகங்கள் படுத்தும் பாடு -
ஒரு வீட்டுக்கு இல்லாள் ஆக வரும் பெண்ணானவள் நன்கு சிரித்த முகமாக லட்சுமி கடாட்சமாக இருந்தால் அந்த குடும்பமே கோவிலாக மாறிவிடும்.ஒரு சில பெண்கள் அடி எடுத்த வைத்த வீடு கூரையாக இருந்தாலும் கோபுரமாக மாறிவிடும்.ஒரு சில பெண்கள் அடு எடுத்து வைத்த வீடு பெரிய கோபுரமாக இருந்தாலும் இவள் அடி பட்ட பிறகு அந்த குடும்ப சிதறிப்போய்விடும்.
ஒருவர் என்னதான் படித்திருந்தாலும் ,எத்தனை செல்வங்கள் தேடியிருந்தாலும் ,, என்ன பதவி வகித்தாலும் மற்றும் எவ்வளவு புகழ் தேடியிருந்தாலும் திருமணம் இல்லாத வாழ்வு நிலவு இல்லாத வானம் போனறது..
ஒருவரது இல்லறம நல்லறமாக அமைய சமூகம் அவனைப்போற்ற மனைவியின் பங்கு முக்கியமானது.சமூகத்தில் ஒரு ஆடவனுக்கு கிடைக்கும் முதல் மரியாதை மனைவியிலிருந்தே ஆரம்பமாகிறது.
# சிலர் திருமணத்திற்கு பிறகு அவன் செய்யும் தொழில் மேன்மையுற்று திகழ்வதற்கு அவனது சாதக கட்டத்தில் ஏழாம் அதிபதியும் மற்றும் பத்தாம் அதிபதியும் நண்பர்களாக அமைந்து நல்லவர்களது மனையில் இருந்தாலும்,இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டாலும் (இவர்கள் வீட்டில் அவர்கள் வீட்டில் இவர்கள் என) இவர்களுடன் லக்கனாதிபதியும் தொடர்புபெற மேற்கண்ட அமைப்பு உண்டாகிறது.
# அதேபோல இவர்களுடன் இரண்டாம் அதிபதியும் ,லாபாதிபதியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டாலோ அல்லது பரிமாறிக்கொண்டாலோ அல்லது நட்சத்திர சார பரிவர்தனை பெற்றிருந்தாலும் குடிசையில் பிறந்திருந்தாலும் திருமணத்திற்கு பின் தாம் செய்யும் தொழிலால் மேன்மையுற்று கோபுரமாக மாறிவிடுவார்கள்.
அதேநேரத்தில் ஒருவருக்கு சரியான மனைவி அமையாதபோது அவனது இல்லற வாழ்வு சரியாக அமையாமல் என்னதான் அழகு,திறமை ,அறிவு ,அந்தஸ்து பெற்றிருந்தாலும் அவனது வாழ்வானது திசை மாறி சென்றுவிடுகிறது.இதற்கு காரணம் என்னவாக இருக்கும் ஆராய்ந்து நோக்கில் கீழ்வரும் காரணங்கள் காரணமாகிறது.
# ஏழாம் அதிபதி ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டில் மறைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியோடு மேற்கண்ட அதிபதிகள் சேர்ந்திருந்தாலும்,
# களஸ்திரகாரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானமேறியிருந்தாலும் அல்லது அவர்களுடன் தொடரபு பெற்று அமைந்திருந்தாலும்,
# ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ இரண்டு மற்றும் ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் பாவிகளான ராகு,கேது ,சனி மற்றும் செவ்வாய் தொடர்பு பெற்றிருந்தாலும்,
# ஏழாம் அதிபதி மற்றும் குடும்பாதிபதி இருவரும் நீசம் மற்றும் அஸதமனம் பெற்றிருந்தாலும்,
# களஸ்திரகாரகன் சுக்கிரபகவான் அசயர்களான ராகு,கேது ,சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருந்தாலும்,மேலும் அவை நீசம் மற்றும் பெற்றிருந்தாலும் ,
மேற்கண்ட இதுபோல பல காரணங்கள் ஒருவரது சாதகங்களில் இருப்பின் மனைவி வந்த பிறகு அவனது வாழ்வு திசைமாறி குலைந்துவிடுகிறது.
எனவே தனது குடும்பத்திற்கு வரும் பெண்ணை தனது குலவிளக்கை ஏற்றிவைக்க வந்தவள் என்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக உபய லக்கனமோ அல்லது ராசியையோ அல்லது லக்கனமும் ராசியும் ஒன்றாக பெற்றவர்களுக்கு மட்டும் லக்கனாதிபதியும் மற்றும் ஏழாம் அதிபதியும் இருவரும் உச்சம் ,ஆட்சி என பலப்படும்போது கிரகயுத்தம் ஏற்படுவதால் கட்டியே மனைவியை எதிரியாகிவிடுவாள்.
அதேபோல ஒரு ஆடவர் /பெண்டிர் இருவரது சாதகத்திலும் சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் ,செவ்வாய் சேர்க்கை பெற்று சுபர் பார்வை பெறாமல் மனோகாரகன் சந்திரனும் கெட்டுவிட்டால் அவர்கள் கட்டிய இணையோடு தாம்பத்ய வாழ்வில் திருப்பி ஏற்படாமல் வரம்பு மீற வாய்ப்பு உண்டு.
எனவே ஒருவனுக்கு மனைவி அமைவதெல்லாம் நல்ல கிரகங்கள் தரும் வரம் எனக்கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
(தங்களது சாதக பலன் மற்றும் திருமணப்பொருத்தங்கள் போன்ற விவரங்களை போன் வழியாக எந்த நாட்டில் இருந்தாலும் பலன்பெறலாம்.எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு 97 151 89 647 பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை அனுப்பினால்போதும்.கட்டணம் உண்டு)
My Email:
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
செல் : 97 151 89 647
செல் : 740 257 08 99.