பூர்வீக சொத்தால் பலனடையும் யோகங்கள் யாருக்கு உண்டு ?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:50 | Best Blogger Tips

'"கிரகங்கள் படுத்தும் பாடு - ( 77 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

முதலில் பூர்வீக செத்தால் பலன்பெற இயலாமைக்கு "ஜோதிடமாலை "தரும் பாடல் ஒன்றையும் அதன் விளக்கத்தையும் தருகிறேன்.
"கிட்டவே பஞ்சமாதி
கிளர்மதி சேயுங்கூடி
பொட்டேன வியத்தில் தோன்ற
பொன்னவன் மறைந்து நோக்க
திட்டமாய் ஜாதகர்க்கு
பூர்வீகம் விரயம் சொல்லே
வட்டமுக வஞ்சியர்க்கு
உரைத்தேனே"
பாடல் விளக்கம்
ஒருவரது சாதகத்தில் ஜந்தாமாதிபதி ,சந்திரன் மற்றும் செவ்வாயும் கூடி பணிரெண்டாமிடத்தில் இருக்க குருபகவான் ஆறு அல்லது எட்டாமிடத்தில் இருந்து அவ்விடத்தை நோக்கினால் சாதகருக்கு பூர்வீக சொத்து விரயமாகும்.
கீழ்காணும் பூர்வீக சொத்தால் பலனடைய கூறப்படும் ஒன்பது காரணங்களும் பலவீனமடைந்து இருப்பினும் சாதகருக்கு பூர்வீக சொத்தால் பலனடையும் யோகமில்லை.
ஒருவருக்கு பூர்வீக சொத்தால் பலனடையும் யோகம் இருக்கிறதா ? என தெரிந்து பலனளிக்க அவரது சாதகத்தில்
கீழ்கண்ட விவரங்களை கவனிக்கப்படவேண்டும்.
1) பூர்வபுண்ணிய ஸ்தானமான ஜந்தாமிடத்தையும் ,அதில் அமைந்துள்ள கிரகங்களின் வலிமையையும் கவனிக்கவேண்டும்
2) ஐந்தாமிடத்ததிபதியோடு சேர்ந்துள்ள கிரகங்களையும் மற்றும் பார்வை பெறும் கிரகங்களையும் கவனிக்கவேண்டும்.
3) ஐந்தாமிட அதிபதி உச்சம் ,ஆட்சி போன்ற வலிமையடைந்துள்ளதா ?என கவனிக்கப்படவேண்டும்.
4) ஐந்தாமிட அதிபதி நட்சத்திர சாரமானது சுபர் மற்றும் சுபஸ்தானத்தின் சாரமாக இருந்து அவை ஐந்தாமாதிபதிக்கு பகை பெற்ற கிரகமாக இருக்ககூடாது.
5) லக்கனாதியும் பலமடைந்து அவை ஐந்தாமாதிபதிக்கு நட்புடையதாக இருக்கவேண்டும்.
6) கால புருஷ லக்கனப்படி பஞ்சமாதிபதியாக சூரியனும்,பாக்யாதிபதியாக குரு பகவானும் வருவதால் இவைகள் பலன்பெற வேண்டும்.
7) மேலும் பூர்வபுண்ணிய காரகனான குரு பகவானும் மற்றும் தந்தைக்காரகனான சூரிய பகவானும் பலமிழக்க கூடாது.
8) நன்செய் நிலத்தின் காரகனான சந்திரன் பகவானும் மற்றும் புன்செய் நிலத்தின் காரகனான செவ்வாய் பகவானும் ஒருவருடைய சாதகத்தில் பலம்பெற்றிருக்கவேண்டும்.
9) ஒருவரது சாதகத்தில் ஐந்துக்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடமும் உச்சம்,ஆட்சி போன்ற பலமடைந்து சுபர் பார்வை பெறவேண்டும்.
நன்றி 
AstroRavichandran
M.SC,MA,BEd (Teacher)
Cell: 97 151 89 647
Cell: 740 257 08 99
(Online Astro consult conducy my cell and my Whatsup no 97 151 89 647)