ஆலய அதிசயங்கள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:05 PM | Best Blogger Tips

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.
6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.
17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.
19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.
20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.
22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.
நன்றி இணையம்

மின்விசிறி போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips

July 4, 2016 ஆரோக்கியம், அழகு, ஃபேஷன் Leave a comment
உச்சிவெயிலில் உடல் வியர்த்து வந்து மின்விசிறிக்கு அருகில் அமரும்போது ஜிலுஜிலுவென காற்று உடலை தழுவுவது தனிசுகம்தான்.
அத்தகைய குளிரூட்டும் கருவிக்கு ஆளையே கொல்லும் மறுபக்கம் இருப்பதை அறிவீர்களா?
காற்றாடி ஓடும்போது கழன்று தலையில் விழுந்து கொல்லுவது வேறு கணக்கு.
நம்மோடு கலகலவென சிரித்து பேசிக்கொண்டிருந்த நபர் பின்னர், விடைபெற்று உறங்கச் செல்கிறார். காலையில் அவருடைய அறைக்கு சென்று பார்க்கும்போது, அவர் படுத்திருந்தபடியே காயம் ஏதுமின்றி இறந்து கிடக்கிறார். அங்கு மின்விசிறி மட்டுமே வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது நீங்கள் என்ன நினைப்பீர்கள்.
இதுபோல ஒன்று, இரண்டு சம்பவமல்ல நூற்றுக்கணக்கில் நடந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்.
பரிசோதனையில் இறந்தவருக்கு மாரடைப்பும் ஏற்படவில்லை என்றால் அந்த மர்ம மரணத்திற்கு யார் காரணம் நிச்சயமாக மின்விசிறிதான்.
இந்த மின்விசிறி பயம் கொரியர்களை அதிகமாகவே குலை நடுங்க வைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
ஓடும் மின்விசிறியோடு இரவில் தனித்திருக்க பயப்படும் அளவில் அங்கு மின்விசிறி பேய்களின் பினாமியாகவே பார்க்கப்படுகிறது.
மின்விசிறி கொலை கதைகள்:
மின்விசிறி ஆளை கொல்வதுபற்றி மிகைப்படுத்தியும் கொரியாவில் கதைகள் புனையப்படுகிறது.
சினிமாக்களிலும் கதையோட்டத்தில் திடுக்கிடும் திருப்பங்களை அமைப்பதற்கு மின்விசிறி பயத்தை பயன்படுத்துவது அவர்களுடைய வழக்கங்களில் வந்திருக்கிறது.
மருத்துவர்களின் பல்வேறு கருத்து:
இறந்தவர்களை ஆய்வுசெய்த குழுவினரில் பல மருத்துவர்கள் மின்விசிறி மரணங்களை ஏற்றுள்ளனர்.
மேலும், மின்விசிறி ஓடுவதால் மட்டுமே ஒருவர் இறப்பதும் சாத்தியம் என்றும் அறிவித்துள்ளனர்.
சியோலில் உள்ள செவரன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ஜான் லிண்டோன் 2004 ல் ஜூன்காங் நாளிதழுக்காக கூறுகையில்,
அறிவியல் பூர்வமாகவும் மின்விசிறி மரணங்கள் மீது சிறிய அளவில் ஆதரவு இருக்கிறது. ஆனால், கதவு, ஜன்னல், கூரை என எல்லாம் மூடப்பட்ட நிலையில், ஓடும் மின்விசிறியால் மட்டுமே ஒருவர் இறக்க முடியும்என்று கூறியுள்ளார்.
சியோல் நேஷனல் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை பேராசிரியர் யூ தாய் வூ
மின்விசிறி ஓடுவதையும் இறந்து கிடப்பதையும் சேர்த்துப் பார்ப்பதால் மக்கள் மின்விசிறி மரணங்களை நம்புகின்றனர். ஆனால், ஆரோக்கியமான மனிதர்களை மின்விசிறி ஒன்றும் செய்வதில்லை அவர்கள் நன்றாக தூங்குவார்கள்என 2007 ம் ஆண்டு கூறினார்.
கனேடிய நிபுணர் விளக்கம்:
கனேடிய நிபுணர் கார்ட் ஜீஸ்ப்ரெசிட் மின்விசிறி மரணங்கள் பற்றிஜூன்கான்நாளிதழுக்கு கூறியிருப்பதாவது,
மின்விசிறியால் இறப்பவர்கள் பெரும்பாலும் தாழ்வெப்பநிலை (ஹைபோதெர்மியா) தாங்க முடியாதவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மின்விசிறி இரவில் நீண்ட நேரம் ஓடுவதால் அதன் வெப்பநிலை 10 டிகிரி குறைந்து 28 க்கு கீழே போகும்போது அவர்களுடைய முகத்தைச்சுற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது அதனால், மூச்சுத்திணறி இறக்கலாம். என கூறுகிறார்.மேலும், அதையே காரணமாகக் கொண்டு பயனுள்ள ஒரு அறிவியல் கருவிமீது கொலைப்பழி சுமத்துவது சரியல்ல. உதாரணமாக, டிவியின் அருகில் இருந்து பார்த்தால், கண்களை பாதிக்கிறது. அதற்காக, டிவி கண்பார்வையை பறிக்கிறது என்று ஒதுக்கிவிட முடியுமா? என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்.
அறிவியல் கூறுவதென்ன?
கொரியாவின் நகர்ப்புற மக்கள் மின்விசிறி மரணங்களை உறுதியாக நம்புகின்றனர்.
35 ஆண்டுகளாக அங்கு நிகழ்ந்த பல மரண சம்பவங்களை வைத்து ஊடகங்களும் மக்கள் கருத்தை பிரதிபலிக்க துவங்கியுள்ளன.ஆனால், அறிவியல் கூற்றுப்படி, மின்விசிறி மரணங்கள் வாய்ப்பில்லை என்பதுதான்.
மேலும், மின்விசிறி ஓடும்போது, வெப்பநிலை குறைகிறது என்று சொல்லப்பட்டாலும் மின்விசிறி ஓடுவதால் அதன் மோட்டார் சூடாகிறது.
அந்த வெப்பம் அறையின் காற்றலைகளில் கடத்தப்படுவதால் சமயங்களில் கொஞ்சம் அனலாகவும் வீசும். அது இயற்கையாக வீசும் காற்றைவிட இனிமை குறைந்ததாகவே இருக்கும். வெளிக்காற்று வராமல் முற்றிலும் அடைக்கப்பட்ட அறையில் மின்விசிறி ஓடினாலும் அந்த அறையின் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்து ஆக்ஸிஜன் குறையவே செய்யும்.
மின்விசிறியின் வேகமான காற்றலை, திடீரென குறையும் வெப்பநிலை, அறை காற்றில் மிகும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம்.
மூடநம்பிக்கையா? நுட்பமான அறிவியலா?
மின்விசிறி ஆளைக் கொல்லும் அளவுக்கு தீங்கானது என்பதை மேலோட்டமாக கேட்கும் போது ஒரு மூடநம்பிக்கை போல தோன்றினாலும் அதில் ஒரு நுட்பமான அறிவியல் பார்வை உள்ளது என்பதும் உண்மைதான்.
ஆரோக்கியத்தில் மனிதர்களுக்குள் ஆயிரக்கணக்கான நிலைகள் உண்டு. உச்சிவெயிலில் உழைக்க முடிந்தவனும் இருக்கிறான். உலா செல்லும் போதே மூர்ச்சையாகி விழுந்து முடிபவனும் இருக்கிறான்.
ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் பைத்தியமானவனும் இருக்கிறான். அதே அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு அதற்கு வைத்தியமானவனும் இருக்கிறான்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கூட விஷம்தானே அதுபோல, மனிதர்களிடையே உள்ள ஆரோக்கிய பேதங்களால் மின்விசிறிகள் கூட சிலருக்கு கொலை கருவியாக மாறலாம்.
கொரியா மக்களிடமே அதிக மின்விசிறி மரணங்கள் நடந்திருப்பதால் அந்த இனத்தவர்களின் உடல் சுபாவத்தில் மின்விசிறி பயன்படுத்துவதில் ஒவ்வாமை பொதுவாகவே இருக்கலாம்.
அது பல்வீனமானவர்களிடம் மிகுந்து வெளிப்படுவதால் மரணம் நேர்கிறது.
நுட்பமானவையே தீங்கை தெரியப்படுத்தும்:
நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் காற்று நம் கண்களை உறுத்துவதில்லை. அது இயற்கை. அதே சமயம், 80 கி.மீ. வேகத்தில் பைக்கிள் செல்லும்போது காற்று விழித்திரையை கிழிப்பதுபோல உறுத்தும். இந்த வேகம் செயற்கையானது.
இதை நாம் கைகால்களில் உணர்வதைவிட கண்களில்தான் வலியோடு உணர்கிறோம். காரணம் அதுவே நுட்பமான உறுப்பு. பாதுகாக்க கண்ணாடிகளும் அணிகிறோம். அதுபோல, மின்விசிறிகளின் தீங்கிற்கு கொரியர்கள் நுட்பமானவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran



கந்தர் சஷ்டி கவசம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips


துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.


காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
நூல்
1 திருப்பரங்குன்றம் 
திருப்பருங்குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத்துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப்பொருளே ... ... 4
வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே
ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ ... ... 8
பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ
விராலிமலையுறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ ... ... 12
சூரசங் காரா துரையே நமோ நமோ
வீரவேலேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
கண்களீராறுடை கந்தா நமோ நமோ ... ... 16
கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
ரரர ரரர ரீம்ரீம் ... ... 20
வவவ வவவ ஆம் ஹோம்
ணணண ணணண வாம்ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ கெளம் ஓம் ... ... 24
லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக ... ... 28
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருக நிஷ்களங்கனே வருக
தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச் ... ... 32
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினமும் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வாராமல் தடுத்து ... ... 36
நல்ல மனத்துடன் ஞானகுரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா ... ... 40
நந்தன் மருகா நாரணி சேயே
என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமிநாதா
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர் ... ... 44
தவக்கதிர்காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு ... ... 48
சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச்
செகத்தொர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் ... ... 52
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ...
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி ... ... 56
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி
வாணி யுடனே வரைமாக் கலைகளும் ... ... 60
தானே நானென்று சண்முகமாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரண கிருபை புரிபவா போற்றி
பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள் ... ... 64
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் ... ... 68
எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி ... ... 72
பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே
செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே ...
சரணம் சரணம் சரஹணபவ ஓம் ... ... 76

அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரஹணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ... ... ... 79
நன்றி இணையம்