சுவையான மொறுமொறு சோயா பக்கோடா

மணக்கால் அய்யம்பேட்டை | 11:44 AM | Best Blogger Tips
சுவையான மொறுமொறு சோயா பக்கோடா

மாலை வேளையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், நல்ல சுவையோடு இருக்கும் வகையிலும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு சோயா பக்கோடா சரியாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது. இப்போது இந்த சோயா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து மசித்தது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
கடலைப்பருப்பு - 2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
எள்ளு - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சோயா பீன்ஸை சுடு தண்ணீரில் 8-10 நிமிடம் ஊற வைக்கவும். இதனால் அவை சற்று மென்மையாகிவிடும். கடலைப் பருப்பை ஒரு அரைமணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் கழுவிய கடலைப்பருப்பை போட்டு, அத்துடன் ஓமம், மிளகாய் தூள், உப்பு, எள்ளு, பேக்கிங் சோடா, மல்லித் தூள் சேர்த்து நன்கு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதோடு சோயா பீன்ஸ், வெங்காயம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்திருக்கும் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேப்போல் அனைத்து கலவையையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான மொறுமொறு சோயா பக்கோடா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது ஏதேனும் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:40 AM | Best Blogger Tips
உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....

உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால், சிலர் குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர். அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால், அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள், கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தோல்வியை தான் சந்திப்பர்.

இத்தகைய உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும். மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொன்னால் நம்பமுடியாது தான்.

ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான். ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ சத்து உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் வைட்டமின் ஏ உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது. இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

புரோட்டீன்

புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் டி

உயரமாவதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியமானது. ஆகவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, வலுவடையவும். எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான், மீன், தானியங்கள், முட்டை, சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கால்சியம்

எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்.

கனிமச்சத்து

கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

குழந்தை இன்மை பிரச்சனைக்கு சாதிக்காய் …….

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

குழந்தை இன்மை பிரச்சனைக்கு சாதிக்காய் …….

செக்ஸ்… ஓரு நல்ல உடற்பயிற்சி. கணவனும், மனைவியும் உச்சத்தில் இருக்கும் போது இருவரது உடலிம் அனைத்து உறுப்புகளும் படுவேகமாக இயங்குகிறது. இந்த வேலை முடிந்ததும் இருவரது உடலிலும் நச்சு திரவம் வியர்வையாக வெளியேறுகிறது. எனவே கணவன்-மனைவியும் அடிக்கடி தாம்பத்யம் கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று- சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திருமணமான கணவன்-மன
ைவியும் ஓராண்டுக்குள் குழந்தை பேறு இல்லை என்றால் ஊரார் அந்த பெண்ணை பழி பேசுவார்கள். கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகிறது. இன்னும் ஒரு புழு பூச்சி கூட இல்லையா? என ஏளனம் பேசுவார்கள். இதற்கான காரணம் தாம்பத்யம் உறவில் திருப்தி இன்மை, ஆண் உறுப்பு விறைப்பு இல்லாதது, விரைவில் சக்தி வெளியேறுதல், இதுதான் குழந்தை பேறின்மைக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆண்மைக்கு நல்ல மருந்தாக, செக்ஸ் இன்பத்துக்கு நல்ல விருந்தாக திண்டுக்கல்லில் செக்ஸ் காய் என்கிற சாதிக்காய் விற்பனை ஆகிறது. சமையலில் மணம் சேர்க்க நம் முன்னோர்கள் உபயோகித்த பொருட்கள் மருந்தாக நம் ஆரோக்கியத்தை காக்க கூடியவை. அந்த வகையில் சாதிக்காய் ஆண்மை விருத்தியை அதிகரித்து இன்ப நேரத்தை நீட்டிக்க வல்லது.

பொதுவாக மணம் உள்ள பொருள் என்றுமே வீரியத்தை தூண்டக்கூடியது. உதாரணமாக மல்லிகை பூ அணிந்து கன்னியர் பாதையை கடந்தாலே காளையர்களுக்கு ஒரு வீரியத்தை தூண்டுகிறது. இது போல்தான் சாதிக்காய் நறுமணத்தை தரக்கூடியது. எனவே தான் சாதிக்காயும் ஆண்மையை தூண்டும் மருத்துவ குணம் உடையது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதிக்காய் இந்தோனேசியா, மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப்பட்டாலும் இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், பின்னர் ஐரோப்பா, மேற்கிந்திய தீவுகளிலும் சாதிக்காய் வளர்கிறது. சாதிக்காய் பற்றி சித்தமருத்துவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

சின்னாளப்பட்டி அருளகம் சித்த வைத்திய சாலை சித்த மருத்துவர் எஸ்.சிவமுருகேசன்:-

சாதிக்காய் அழகிய நறுமணம் உள்ள இலைகளையும், மஞ்சள் பூக்களை கொண்டது. இது மர வகையை சேர்ந்தது. சாதிக்காய் சிறிய கோழி முட்டை அளவில் இருக்கும். இதன் சுவை துவர்ப்பு, கார்ப்பு. இது வீரியத்தை உண்டாக்கி வாசனையை பெருக்கி காமத்தை பெருக்கும். உடலுக்கு நல்ல உரத்தினை உண்டாக்கும். சூட்டை தணித்து ஆண்மையை அதிகரிக்கும். ஆண்மை குறைவு உள்ளவர்கள் சாதிக்காய் பொடியை அரை தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி அதிகரிக்கும்.

திண்டுக்கல் செல்லம் மருத்துவமனை டாக்டர் கோகுலகுமார்:- சாதிக்காய் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடியது. அதிக விந்தணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டது. விறைப்பு தன்மையை உண்டாக்கி தாம்பத்யத்தை அதிக நேரம் நீட்டிக்க கூடியது. நரம்பு தளர்ச்சியை போக்கி ஒரு புதிய சக்தியை கொடுக்ககூடியது. விந்தணுக்களின் எண்ணிக்கையை சாதிக்காய் அதிகரிக்கும். இதனை லேகியமாக சாப்பிட்டு வந்தால் புதிய தெம்பு கிடைக்கும்.

தமிழ்நாடு சித்தமருத்துவ மைய டாக்டர் முகமது மாலிக்:- சாதிக்காய் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். திரவம் போல் இருக்கும் விந்துவை கெட்டியாக உருவாக்கும் தன்மை சாதிக்காய்க்கு உண்டு. பொதுவாக டிரைவர்கள் எப்போதும் வாகனங்கள் ஓட்டியபடி இருப்பதால் உடலில் சூடு அதிகம் இருக்கும். இதனால் விந்தணுக்கள் அவர்களை அறியாமல் வெளியேறிடும்.

எனவே சாதிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சியை தந்து விந்து கெட்டியாக இருக்கும். இதனை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். ஒரு மணமூட்டி காய்க்கு இப்படி ஓராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமையாக புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் அதனை எந்தவிதத்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமைதான்