குப்பைமேனி:

மணக்கால் அய்யம்பேட்டை | 12:21 PM | Best Blogger Tips

ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

அழகுக் குறிப்புகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tipsகை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

கரிசலாங்கண்ணி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:55 AM | Best Blogger Tips

1. வாரத்துக்கு இரண்டு நாள் கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

2. மஞ்சள் காமாலை குணமடையும். கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல், மண்ணீரல் பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.

அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

3. கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

4. கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

5. கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள்கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும்.

6. குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

7. கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

8. கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

9. கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

10. கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

11. கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால் பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

12. கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின் கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.

13. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால் அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
எலித் தொல்லையா? முதல்ல இத படிங்கப்பா..

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tipsநிறைய பேருக்கு செல்லப் பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அந்த செல்லப் பிராணிகள் பல்வேறு சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்கும். அத்தகைய செல்லப் பிராணிகளில் நாய், பூனை, கிளி போன்றவற்றை தான் பெரும்பாலானோர் வளர்ப்பார்கள். சிலர் எலிகளில் வெள்ளை நிற எலியை வளர்ப்பார்கள். ஆனால் அந்த வகைகளில் ஒன்றான கருப்பு நிற எலியைக் கண்டால் பலரும் எரிச்சல் அடைவார்கள். ஏனெனில் கருப்பு நிற எலியின் அட்டகாசத்தை தாங்கவே முடியாது. குறிப்பாக பெருச்சாளி என்றால் அனைவரும் அது மட்டும் கையில் கிடைத்தால், அதனை அடித்தே சாவடிப்பேன் என்ற அளவில் கோபப்படுவார்கள். ஏனென்றால், அவை வீட்டில் உள்ள மரத்தாலான நாற்காலி, உடைகள் போன்றவற்றை கிழித்து வைத்துவிடும். பொதுவாக இந்த மாதிரியான எலிகளின் இருப்பிடம் வீட்டின் தோட்டம் என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு நாம் குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர குப்பைகளை போடுவதால், அதன் வாசனைக்கு அது பொந்து போட்டு, தங்கி, வீட்டின் உள்ளே வந்து வீட்டையே அசிங்கமாக்கிவிடுகிறது. எனவே வீட்டையும், தோட்டத்தையும் எலிப் பிரச்சனையின்றி வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

* முதலில் குப்பைத் தொட்டியை வீட்டின் வெளியே தோட்டத்தில் வைத்தால், அவற்றை நன்கு மூடி வைக்க வேண்டும். குறிப்பாக ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும். ஏனெனில் குப்பையின் வாசனைக்கு எலிகள் எளிதில் வந்துவிடும். எனவே குப்பைத் தொட்டியை நன்கு மூடி வைக்க வேண்டும். மேலும் குப்பையை வெளியே எறிந்த பின்னர், அதனை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.

* மரத்தூள் குவியல் மற்றும் தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அதன் வாசனையால் எளிதில் எலியானது வந்துவிடும்.

* வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை களிமண் அல்லது கம் வைத்து நன்கு அடைத்துவிட வேண்டும். இதனால் எலிகள் வீட்டில் வந்து விளையாடுவதை தடுக்கலாம்.

* வீட்டில் ஆங்காங்கு எலிப் பெட்டியை வைக்க வேண்டும். அதிலும் அந்த பெட்டியில் நல்ல வாசனை உணவுப் பொருட்களை வைத்து, எலி அடிக்கடி வரும் இடம் மற்றும் தங்கியிருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இதனால் உணவுப் பொருட்களின் வாசனைக்கு எலியானது பெட்டிக்குள் சென்று மாட்டிக் கொள்ளும். பின் அதனை வீட்டிற்கு மிகவும் தொலைவில் விட்டுவிட வேண்டும்.

* எலிகளுக்கு புதினாவின் வாசனை என்றால் அறவே பிடிக்காது. எனவே வீட்டைச் சுற்றி புதினாவால் செய்யப்பட்ட எண்ணெய் அல்லது வாசனை திரவியத்தை எலி தங்கியிருக்கும் இடத்தில் தெளித்தால், அதனை வீட்டிற்குள் வராமல் விரட்டலாம்.

* அதுமட்டுமின்றி எலிகளுக்கு அந்துருண்டையின் வாசனை பிடிக்காது. ஆகவே வீட்டில் ஆங்காங்கு அந்துருண்டையை வைத்து விட்டால், எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இவையே எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழி.

வேறு ஏதாவது எளிதான வழிகள், உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

வெந்தயக் கீரை..!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:51 AM | Best Blogger Tips

ஆங்கில பெயர் - Fenu greek seeds

தாவரப்பெயர் :- TRIGONELLA FOENUM GTAECUM.

தாவரக்குடும்பம் :- FABACEAE.

பயன் தரும் பாகங்கள் :- இலை தண்டு, விதை முதலியன.

வளரியல்பு :-

இதன் தாயகம் கிழக்கு ஐரோப்பா மற்றும் எத்தியோப்பியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெந்தயம் அதிகமாகப் பயிரிடும் நாடுகள் இந்தியா, பாகீஸ்தான், நேபாள், பங்களாதேஷ், அர்ஜென்டினா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, மொராக்கோ மற்றும் சைனா. உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெந்தயத்தை வீடுகளில் தொட்டிகளில் கூட வளர்க்கலாம். தண்ணீர் அதிகம் தேங்கக்கூடாது. கடல் கரை சார்ந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளர்கிறது. நன்சை நிலத்திலும் புன்சை நிலத்திலும் வளரும். இதற்கு வெய்யிலும் தேவை. இது ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்..
இதன் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்தலாம். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதை தான் வெந்தயம்.

இது மூன்று மாதத்தில் வளரக்கூடியது. இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத்தீவனமாகவும் பயன் படுத்தினார்கள். சமையல் மற்றும், மருந்தாகவும் பயன் படுகிறது.

மருத்துவப்பயன்கள் :

* பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

* 5 கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

* வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைந்து விரைவில் ஆறும்.

* வெந்தயப்பொடியை ஒரு தேக்கரண்டி காலை மாலை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

* இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரழிவு நோயின் வீரியம் சிறிது சிறிதாக குறையும்.

* தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருத்தரிக்காது.

* முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊற வைத்துத் தலைகுளித்து வர பலன் கிட்டும்.

* முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் பூசி கழுவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

வெந்தயக்கீரை.

* வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

* வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

* வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

* வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.

* வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடைய வாய்ப்பு இருக்கிறது.

* வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தய அல்வா

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். நெய்யை விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வெந்தயத்தை அவசியம் உங்கள் வீட்டில் தொட்டிகளில்/
பிளாஸ்டிக் சாக்கில் விதைத்து வளர்த்துவாருங்கள்...கீரையை தொடர்ந்து உட்கொண்டு பலன் பெறுங்கள் !

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

வைத்தியலிங்க சுவாமி கோவில்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 AM | Best Blogger Tips
வைத்தியலிங்க சுவாமி கோவில்..!

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் வைத்தியலிங்க சுவாமி கோவிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. சிவாலயமாக வழிபடப்படும் இந்த கோவிலின் மூலவர் அறையில் சிவலிங்கத்துக்கு பதிலாக சாமி உருவச் சிலை அமைந்துள்ளது. சிவாலயங்களில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளே இங்கும் பின்பற்றப்படுகின்றன.
 
இது தவிர, ஆவணி மற்றும் பங்குனி மாதங்களில் பத்து நாள் விழா நடைபெறுகின்றன. இரண்டு மாதங்களிலும் 10-வது திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஆருத்திரா தரிசனம் தினத்தன்று சிறப்பு பூஜையுடன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
 
இது தவிர, சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மூன்று தினங்களுக்கு கொடை விழாவும் நடத்தப்படுகின்றன. ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாமல் சிவகாசி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருத்தங்கல், சிதம்பரம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களை கொண்டுள்ள வைத்தியலிங்க சுவாமி கோவிலின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
 
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள கூழையன் குண்டு என்கிற `கல்லால்' என்ற இடம் தான் வைத்தியலிங்க சுவாமியின் பூர்வீக தலம்.             திருச்செந்தூர் வட்டம் மானாடு பகுதியில் இருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய கற்பக சித்தர் என்பவரே வைத்தியலிங்க சுவாமி மூல விக்கிரகத்தை ஆலடிப்பட்டிக்கு கொண்டு வந்து ஆலயம் அமைத்தார் என்பது இக்கோவில் வரலாறு.
 
கல்லால் என்ற ஊரில் இருந்து ஆலடிப்பட்டிக்கு இந்த வைத்தியலிங்க சுவாமி வந்த கதை வித்தியாசமானது. அந்த காலத்தில், கல்லால் பகுதியில் தங்கப் புதையல் (கிடாரம்) எடுக்கும் முயற்சியில் 60 வீட்டுக்காரர்கள் ஈடுபட்டனர். அதற்காக ஒரு ஜோதிடரை நாடியபோது, திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழாவுக்கு தேவதைகள் செல்லும் சமயத்தில் புதையல் எடுக்கலாம் என்றும், அதற்காக நிறைமாத கர்ப்பிணிப் பெண், ஆடு, பன்றி ஆகியோரை பலி கொடுக்க வேண்டும் என்றும் ஜோதிடர் தெரிவித்தார்.
 
அதன்படியே, புதையலை எடுத்த 60 வீட்டுக்காரர்களும் புதையலை 61 பங்கு வைத்து ஜோதிடருக்கு ஒரு பங்கு அளித்தனர். ஆனால், ஜோதிடர் அந்த புதையலை வாங்காமல் பூமியிலேயே புதைத்து விட்டார். இந்த தகவலை அறிந்த தேவதைகள், திருச்செந்தூரில் இருந்து திரும்பி வந்ததும் 60 வீட்டுக்காரர்களையும் தீயிட்டு அழித்தன.
 
ஜோதிடர் மட்டும் தப்பித்தார். அந்த ஜோதிடரின் மகன் தான் கற்பக சித்தர். அவருடைய கனவில் வைத்தியலிங்க சுவாமி தோன்றி, தான் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளார். அதன்படியே, கல்லால் பகுதியில் புதைந்திருந்த வைத்தியலிங்க சுவாமியின் விக்கிரகத்தை கற்பக சித்தர் எடுத்து அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார்.
 
தங்கப் புதையலை மறுத்த ஜோதிடரின் மகனுக்கு புதையலாக வந்தவரே, வைத்தியலிங்க சுவாமி. காலப்போக்கில் பஞ்சம் ஏற்பட்டதால், ஓலைப் பெட்டியில் வைத்தியலிங்க சுவாமியை வைத்துக் கொண்டு ஊர் ஊராக கற்பக சித்தர் சுற்றி வந்தார். ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் என்ற இடத்துக்கு வந்தபோது சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டது.
 
எனவே, கையில் இருந்த வேலால் தரையில் குத்தினார். அந்த இடத்தில் நீருற்று பெருகியது. தற்போதும், அந்த இடம் `எச்சி நா ஊற்று` மலை என்றே அழைக்கப்படுகிறது. சிவலார் குளத்திலேயே சில காலம் தங்கியிருந்த கற்பக சித்தர், பின்னர் ஆலடிப்பட்டிக்கு வந்து ஊருக்கு வட பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே வன்னி மரத்தின் அடியில் சுவாமி சிலையை வைத்து பூஜை செய்தார்.
 
அதன் பிறகு, தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலும், அபிஷேக கிணறும், ஆலமரமும் சேர்ந்திருப்பதை பார்த்து... ஓலைப்பெட்டியில் வைத்திருந்த வைத்தியலிங்க சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். இதைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு ஆலடிப்பெட்டி என்ற பெயர் உருவானது.
 
காலப்போக்கில் ஆலடிப்பட்டி என அழைக்கப்படுகிறது. கோவிலின் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. கற்பக சித்தர் வந்தடைந்த தெப்பக் குளத்தையும் அதன் அருகே வன்னி மரத்தையும் இன்றும் காணலாம். இந்த கோவிலில் கற்பக சித்தருக்கும் சிலை எழுப்பப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெறுகின்றன. கற்பக சித்தருக்கு நேர்த்திக்கடன் செய்தால் தலை சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.

Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

இரத்தத்தை சுத்தப்படுத்தும் புளியன் இலை..

மணக்கால் அய்யம்பேட்டை | 11:39 AM | Best Blogger Tips
இரத்தத்தை சுத்தப்படுத்தும் புளியன் இலை..

புளி நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பொருளாகும். புளியன் பழம் ஒன்றுதான் புளி மரத்தில் கிடைக்கும் பலன் என நாம் என்னுகிறோம். புளி இலையும் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது. புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

புளி ஒரு மென்மையான மலமிளக்கியாக செயல்படுகிறது. புளியை மாலை வேளையில் சிறிது புளியாகாரம் செய்து சாப்பிடுவதனால் குடல் இயக்கங்களை மேம்படுத்தலாம். புளி பித்த நீரால் ஏற்பட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். புளி உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது.. 

நீர்த்த புளிசாறு தொண்டையில் ஏற்படும் புண்னை குணமாக்குகிறது. புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறையை புளிபழம் சரி செய்கிறது. முக்கியமாக தோலில் ஏற்படும் அழற்சியை குணமாக்கும். ஆக்ஸிஜனேற்றத்திற்கு நல்ல ஆதாரமாக இருப்பது புளி, ஆதலால் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவி புரிகிறது. மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. புளியன் கொழுந்தை பக்குவபடுத்தி உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். புளியன்கொழுந்தை தேவையான அளவு எடுத்து அத்துடன் பருப்பு சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். புளியங்கொழுந்தை பச்சையாக சாப்பிட்டால் கண் தொடர்பான பிணிகள் அகலும். பாண்டு ரோகத்தை குணமாக்கும் சக்தியும் உண்டு. உள்வெளி ரணங்களை குணமாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

மருத்துவக் குறிப்பு Health Care in Tamil
புளி நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பொருளாகும். புளியன் பழம் ஒன்றுதான் புளி மரத்தில் கிடைக்கும் பலன் என நாம் என்னுகிறோம். புளி இலையும் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது. புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

புளி ஒரு மென்மையான மலமிளக்கியாக செயல்படுகிறது. புளியை மாலை வேளையில் சிறிது புளியாகாரம் செய்து சாப்பிடுவதனால் குடல் இயக்கங்களை மேம்படுத்தலாம். புளி பித்த நீரால் ஏற்பட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். புளி உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது..

நீர்த்த புளிசாறு தொண்டையில் ஏற்படும் புண்னை குணமாக்குகிறது. புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறையை புளிபழம் சரி செய்கிறது. முக்கியமாக தோலில் ஏற்படும் அழற்சியை குணமாக்கும். ஆக்ஸிஜனேற்றத்திற்கு நல்ல ஆதாரமாக இருப்பது புளி, ஆதலால் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவி புரிகிறது.மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. புளியன் கொழுந்தை பக்குவபடுத்தி உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். புளியன்கொழுந்தை தேவையான அளவு எடுத்து அத்துடன் பருப்பு சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். புளியங்கொழுந்தை பச்சையாக சாப்பிட்டால் கண் தொடர்பான பிணிகள் அகலும். பாண்டு ரோகத்தை குணமாக்கும் சக்தியும் உண்டு. உள்வெளி ரணங்களை குணமாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

மருத்துவக் குறிப்பு Health Care in Tamil

மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:27 AM | | Best Blogger Tips
மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் --இய‌ற்கை வைத்தியம்:-

*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.--இய‌ற்கை வைத்தியம்:-

*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.
 
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
 
பிச்சாவரம் அலையாத்தி(மாங்குரோவ்) காடுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips
அனைவரும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலம்!

பிச்சாவரம் அலையாத்தி(மாங்குரோவ்) காடுகள்!

பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.[1]

இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.

பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது

 அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வேறு பெயர்கள்
ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.
இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.
முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.
இந்தியாவில் அலையாத்திக் காடுகள்
கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.

வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:11 AM | Best Blogger Tips
1) செருப்புக்கடி புண்ணுக்கு

தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.

2) மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.
3) புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்

1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.

2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.
4) பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்

கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.
5) காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்

1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

2. சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.

6) உடன் தீப்பட்ட புண்ணுக்கு...

1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.

2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.

3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.

4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).

7) கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க

1. தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

2. கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.
தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்

1. நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர தீரும்.

2. தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.

9) உள்நாக்கு வளர்ச்சிக்கு

வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்‍ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.

10) உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர

1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.
2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.
3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.

11) கக்கூஸ் படை, தேமல், சொறி ஆகியன குணமாக

1. சீமை அகத்தியிலை, கற்பூரம் சிறிதளவு இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.

12) பேன், பொடுகு, தலை ஊரல் தீர

1. பொரும் வெற்றிலை அல்லது மலையாள வெற்றிலைச் சாறு (300 மிலி). இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் பேன் கொல்லி விதை, கோஷ்டம், அதிமதுரம், குன்றிமணி விதை எல்லாம் பத்து கிராம் வீதம் எடுத்து, இவை நான்கையும் பொடித்து சாறுவிட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெயில் கலந்து சாறு வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர வருடக்கணக்கிலுள்ள பேன் தொல்லைகளும் உடன் தீரும்.

2. மருதோன்றிச் சாறு (100 மிலி), படிகாரம் (அ) சீனாக்காரம் (5 கிராம்), மருதோன்றிச் சாற்றில் இதைக் கரைத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் தொல்லை தீரும்.

13 ) அரையிடுக்கிலுள்ள அரிப்புத் தேமல், கரும்படை குணமாக

மிளகு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்காரம் இரண்டையும் 25 கிராம் அளவில் எடுத்து, பசு நெய் விட்டு நன்கு மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.