பிச்சாவரம் அலையாத்தி(மாங்குரோவ்) காடுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:25 | Best Blogger Tips
அனைவரும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலம்!

பிச்சாவரம் அலையாத்தி(மாங்குரோவ்) காடுகள்!

பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.[1]

இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.

பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது

 அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வேறு பெயர்கள்
ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.
இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.
முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.
இந்தியாவில் அலையாத்திக் காடுகள்
கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.