பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்து பார் .. #மம்தா ..
ராஜினாமா செய்து விட்டு வருகிறேன் என்ன செய்வாய் ,.. #நீதிபதி
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அவரது அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முன்னதாக ஆசிரியர் நியமனத்தில் பெரியளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணையின் போது மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக சாடினார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பிறப்பித்தார்.
மேலும் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு விசாரணையை பற்றி விபரங்களை தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நீதிபதி அபஜித் கங்கேபாத்யாயின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்தனர்.
மேலும் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்து எங்களை எதிர்த்து பார்க்கட்டும் என்ற வகையில் சவால் விடுத்து வந்தனர்.
இத்தகயை சூழலில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பை அபிஜித் கங்கோபாத்யாய் இன்று ராஜினாமா செய்தார்.
இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார். மேலும் ராஜினாமா கடிதத்தின் நகல்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். .
இதையடுத்து இன்று அபிஜித் கங்கோபாத்யாய் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
அப்போது நான் பாஜக கட்சியில் சேர்ந்து அரசியலுக்குள் நுழைவேன் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
நான் பாஜகவில் சேர உள்ளேன். . அநேகமாக மார்ச் 7ம் தேதி பாஜகவில் இணைவேன். நான் திரிணாமுல் காங்கிரஸின் ஊழலுக்கு எதிராகப் போராடுவேன்
இந்த கொடூரமான ஆட்சியை எதிர்க்கும் ஒரே தேசியக் கட்சி பாஜக தான். அதனால் இந்த கட்சியில் சேர்ந்து மேற்கு வங்காள மக்களை முன்னேற்ற பாடுபடுவேன்
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சவால் மற்றும் கிண்டல் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். ஆளும் கட்சியினர் என்னை பலமுறை அவமதித்துள்ளனர். அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கடும் வார்த்தைகளால் என்னை விமர்சித்துள்ளனர். உண்மையில் அவர்களின் கல்வியறிவில் சந்தேகம் எனக்கு இருக்கிறது'' என்றார்.
அநேகமாக மார்ச் 7 ம் தேதி பாஜகவில் இணைவேன். கட்சியில் இணைய காலதாமதம் செய்ய விரும்பவில்லை.
மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட நிலை தான் உருவாகும்.
திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல. திரிணாமுல் யாத்ரா கட்சி... திரிணாமுல் ஒரு தவறு மட்டுமே செய்யும் கும்பல் என்று உலகத்திற்க்கே தெரியும்
திரிணாமுல் கட்சியை ஒரு அரசியல் கட்சியாக நான் கருதவில்லை'' என்றார்.
இந்த வேளையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
‛‛பாஜக வாய்ப்பளித்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு வாய்ப்பளிப்பது தொடர்பான முடிவு என்பது பாஜக தலைவர்களின் கையில் தான் உள்ளது'' என்றார்.
நன்றி இணையம்