தெரித்துக் கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரித்துக் கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப்....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:38 PM | Best Blogger Tips

May be an image of 5 people, monument and temple 

 

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு.
 
தஞ்சாவூர்: 
 
ஆஹா என்ன அழகு எத்தனை அழகு...
கண்ணையும், மனதையும் தழுவி நெஞ்சை நிறைக்கும் தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான்.
 
நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள்.
முக்கியமாக #நீர்மேலாண்மையில் சிறந்தவர்கள்.
அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர்.
 May be an image of 3 people, street, temple and text
சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன. 
 
அன்றே தண்ணீரின் அவசியத்தையும், மேன்மையையும் உணர்ந்து பரந்து, விரிந்து சென்றது.
 May be an image of 6 people and temple
இப்படி பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன.
 
இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்க ப் பட்டது. 
 
பெரியக்கோவிலில் விழுக்கின்ற மழை நீரானது வீணாகமல் அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கு
சென்றடையும். 
 தஞ்சாவூர் - தமிழ் விக்கிப்பீடியா
சிவகங்கை குளம் நிரப்பினால் அதிகபடியான நீர் ஊரின் மத்தியில் உள்ள ஐயன் குளத்தில் சேரும் படியான நீர்மேலாண்மை அமைப்பை ஏற்படுத்து இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
 Tanjore: Discovery of tunnel waterway from Ayyankulam to Sivagangai pond |  தஞ்சை: அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்திற்கு சுரங்கவழி நீர்ப்பாதை  கண்டுபிடிப்பு...!
அவ்வாறை தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார் பாண்டிய மன்னன் வல்லபனுக்கு சேனாதிபதியாய் இருந்த சாமந்தன் என்பவர்.
தஞ்சை நகரில் சாமந்த நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலை நிறுவினார்.
 
அந்த கோயிலுக்காக சாமந்த நாராயணக்குளம் என்ற குளம் ஒன்றை வெட்டினார். 
 
பின்னர், அங்கு ஒரு புதுக் குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன்.
 
அப்படி அவர் தோற்றுவித்த குடியிருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து #இன்றுதஞ்சைமாநகராய்# பிரமாண்டமாய் மாறியுள்ளது.
 
தஞ்சையில் புதுக்குடியிருப்பு 
 
வரக்காரணாமாய் இருந்த இக்கோயில் கீழவாசல் பகுதியில் கீழை நரசிம்மர் என்ற பெயரில் இன்றும் உள்ளது.
 
தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணிக்க வேண்டும்.
 
தஞ்சாவூர் மாநகருக்கு தண்ணீர் பிரச்சனையை போக்கும் பல்வேறு குளங்களில் சாமந்தன் குளமும் ஒன்றாகும்
 
மற்றும்
எழில் மிகு குளங்களாக இருந்த அய்யன்குளமும் ஆகும்
 
தஞ்சையில் நீர் மேலாண்மையில் முக்கியமாக விளங்கிய இது போன்ற குளங்களா என்று அனைவரும் வியக்கும் அளவில் இருந்தவை ஆகும்.
இதில் அய்யன்குளத்துக்கு, மன்னர் காலத்தில் பயன்படுத்திய நீர் வழிப்பாதையை கண்டறிந்து,
அவை சீரமைக்கப்பட்டது. 
 
குளத்தை சுற்றிலும் நடைபாதை,
அலங்கார மின் விளக்குகள்,
சுவரில் ஓவியங்கள்
என பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு ,மாலைநேரத்தில் பொதுமக்கள் இதில் நடந்து தங்களை ரிலாக்ஸ் ஆக்கி கொள்கின்றனர்.
 
மாலை நேரத்தில் சுற்றுலாவாக வருபவர்களுக்கு இந்த குளங்கள் சிறப்பான ஒரு மகிழ்வை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 Thanjavur Maratha building - ''Mangala Vilas,'' South Main Street can be  made a heritage hotel!!
குளம் தானே என்று நினைப்பதை தவிர்த்து நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வை எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.
 
தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, 
 
நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்று, 
 
தொடர்ந்து சென்று சாமந்தன் குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.
இத்தகைய பெருமை வாய்ந்த சாமந்தான் குளத்தின் 
 
மேல்புறத்தில் படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் 
 
அலங்கார மின்விளக்குகள்,
நடுவில் நீராழி மண்டபம், 
 
அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட்டன.
காவேரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்த்தாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால்
தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப் படுகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள
கோயில்கள், 
 
கலைகள்,
கட்டிடக்கலைகள் உலகப்புகழ் பெற்றவை. 
 
சோழா்கள், 
 
பாண்டியா்கள், 
 
நாயக்கா்கள், 
 
மராட்டியா்கள் ஆட்சியின் கீழும் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷாரின் ஆட்சியன் கீழும் இருந்தது. 
 உலகிலேயே 2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் - கல்லணை | history of  kallanai dam in tamil | - YouTube
May be an image of 4 people, monument, temple and castle
கல்லணை,
 May be an image of 1 person, monument, twilight, temple, castle and text
தஞ்சை பெரிய கோயில்,
 
சரபோஜி மஹால் அரண்மனை,
 வரலாற்றுச் சிறப்பு மிக்க சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூல்நிலையம்,
 ஆசியாவின் மிக பழமையான நூலகம்.. அதுவும் நமது தஞ்சையில்! யாரும் மிஸ் பண்ணாம  அந்த பொக்கிஷத்த பாத்துருங்க..! | தஞ்சாவூர் - News18 தமிழ்
பீரங்கி மேடை 
 தஞ்சாவூர் பீரங்கி - தமிழ் விக்கிப்பீடியா
மற்றும் 
 
பல புராதண சின்னங்கள் மேற்கண்ட 
 spiritual Tour Thanjavur cannon Rajagopala Beerangi standing majestically  for 400 years TNN | Thanjavur cannon: கம்பீரமாக 400 ஆண்டுகளாக நிலைத்து  நிற்கும் தஞ்சாவூர் பொக்கிஷம் ராஜகோபால ...
ஆட்சியாளா்களின் ஆளுகைக்கு உட்பட்டு தஞ்சை மாவட்டம் இருந்ததை எடுத்துக்காட்டும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகும்.
 Trichiites on X: "Thanjavur Old Bus Stand in 1959.❤️ #CentralRegion #Trichy  #Tanjore https://t.co/1mqRyuaOaM" / X

Thanks to https://harithiagarajan.blogspot.com/.../blog-post_20.html 

 May be an image of 6 people, temple and text that says "Infinix InfinixHOT10S HoT HOT10 10S"

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 3 people and temple🌷 🌷🌷 🌷

 

இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு

மணக்கால் அய்யம்பேட்டை | 3:45 PM | Best Blogger Tips

 Mannar - இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும் A -  Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். B - Behaviour  புன்முறுவல் ...

 

இந்த 26 வார்த்தைகள்..!
எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்

A - Appreciation

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression

மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego

மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive

கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty

தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk

சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding

மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation

அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience

சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness

பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting

இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate

மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary

அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield

முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero

இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்...

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷