🍇💫🍇💫🍇💫🍇💫
🟢👑காலை நேர
சிந்தனை
🍇💫🍇💫🍇💫🍇💫
🌐🔥கல்வியா ,
செல்வமா....
🍇💫🍇💫🍇💫🍇💫
🟤🌸முன்பெல்லாம் ஊரில் படித்தவர்கள் குறைவு.படித்தவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
🟤🌸பெரிய மனிதன் என்று அனைவராலும் போற்றப்பட்ட காலம். இன்று பணம் இருப்பவனே பெரிய மனிதன்.
🟤🌸தெருவுக்கு நாலு இஞ்சினீயர் இருக்கிறார்கள் இன்று. எல்லாரும் படிச்சு முன்னேறினா பெருமை தானே ........
🟤🌸எல்லோரும் படித்திருக்கிறார்கள் உண்மை தான்.ஆனா முன்னேறி இருக்கிறார்களா.....
🟤🌸ஆயிரம் வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோயில் கட்டப் பட்டது. இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
🟤🌸1,30,000 டன் எடை கொண்ட கற்களால் கட்டப் பட்டது. பாறைகளே இல்லாத தஞ்சை மண்ணில்.
🟤🌸வெறும் ஏழு வருடங்களில் கட்டப் பட்டது. எவ்வளவு சிறந்த தொழில் நுட்பம்.எப்பேற்பட்ட கணித அறிவு.
🟤🌸இன்றைய இன்ஜினியர்களால் இதே போல் ஒன்று கட்ட முடியுமா?. ஒரு பாலம் கட்டவேண்டும் என்றாலே ஐந்து வருடம் ஆகும்.அதுவும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாது.
🟤🌸உண்மையில் அறிவு வளர்ந்திருக்கிறதா .சொல்லுங்கள்.
🟤🌸ஒரு செல் போனில் பத்து வருடங்களில் எத்தனை மாற்றங்கள்.அப்படியானால் ஆயிரம் வருடங்களில் நமது அறிவு எத்தனை மேம்பட்டிருக்க வேண்டும்.
🟤🌸என்ன ஆச்சு!. எங்கே தவறு? ஏன் ? என்றாவது நாம் இதை பற்றி யோசித்தி ருப்போமா! .இல்லையே..........
🟤🌸நமது பண்டைய நாட்களில் அறிவு என்பது கல்வி,வேள்வி என்று இரு விதங்களில் அந்தணர் எனும் அறவோர் வசம் இருந்தது.
🟤🌸அவர்களுக்கு பொருள் மீது பற்று இல்லை.இன்பம் மீது ஆசையில்லை. அவர்கள் அறத்தின் (தர்மத்தின்)வழியில் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள்.
🟤🌸அவர்கள் தங்களிடம் இருந்த கல்வி,வேள்வி ஞானத்தை போற்றி பாதுகாத் தார்கள். தகுதியானவர்களுக்கு அதை கற்று தந்தார்கள்.
🟤🌸அந்த அறிவை அழியாது பாது காத்தார்கள்.அதுவே அவர்களின் தர்மமாக இருந்தது.
🟤🌸அவர்களில் பலர் அன்றாடம் காச்சிகள் . ஆள்வோரும் அரசும் அவர்களை பேணி வந்தார்கள். அவர்களுக்கு தகுந்த மரியாதையை அளித்து அவர்களை போற்றி வந்தார்கள்."
🟤🌸அன்று அனைத்து அறிவும் செவி வழி மட்டுமே.ஆசிரியர்கள் வாய் மொழி யாய் கூறி அதை சீடர்கள் செவி வழி கேட்டு அறிவை ஆய்ந்து வளர்த்து வந்தார்கள்.
🟤🌸அவையே வேதங்கள் என்று சொல்லப் பட்டன.பல குருகுலங்களில் பல விதமான அறிவு கற்றுத் தரப் பட்டன.
🟤🌸பின் வியாசர் அவைகளை தொகுத்து அவற்றை நான்கு விதமாய் பிரித்து ஒழுங்கு படுத்தினர்.
🟤🌸பின் எழுத்தும் ஏடும் வந்தபின் ஏட்டில் எழுதி வைத்து ஆர்வமுள்ளவர்கள் எங்கிருந்தாலும் கற்றுக் கொள்ள முடிந்தது.
🟤🌸எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள இயலும் என்கிற போது தானே ஆர்வம் குறையும். அறிவின் தரமும் குறையும். இதுவே நியதி.
🟤🌸suply யில் தடை இல்லையேல் demond அதுவே குறையும்.
🟤🌸(முன்பெல்லாம் ஒரு நூறு போன் நம்பராவது எனக்கு ஞாபகம் இருக்கும்.பல ஊர்களுக்கு S.T.D code கூட தெரியும்.
🟤🌸இன்று செல் போனில் அத்தனையும் நினைவில் இருக்கிறது.ஆனால் எனது மூளையில் மற்றொரு சிம் நம்பர் கூட நினைவில் இல்லை. இது தான் யதார்த்தம்.)
🟤🌸அனைவர்க்கும் அனைத்தையும் அறியும் வாய்ப்பு வந்த பின் அந்தணர்க்கு பிழைப்புக்கு வழியில்லாமல் ஆயிற்று.
🟤🌸அவர்களும் நாட்டுக்குள் வந்தார்கள். வீட்டில் வாழ்ந்தார்கள்.அரசனுக்கு ஆலோசனை கூறும் ராஜ குரு ஆனார்கள்.அமைச்சர்களாக மாறினார்கள். ஆலயத்தை நிர்வகித்தார்கள்."
🟤🌸மன்னர்கள் மாறியதும் இவர்களும் சாதாரண clerk ஆனார்கள். சுதந்திரம் வந்தது. இவர்கள் அதிகாரிகள் ஆனார்கள்.
🟤🌸காலம் மாறியது இவர்கள் அறிவின் மூலம் கிடைத்த கல்வியில் அயல்நாடு சென்றார்கள்.
🟤🌸இன்று அந்தணன் என்னும் அறவோன் அறவே இல்லை.
🟤🌸பக்கத்து வீட்டு அய்யர் பையன் B.E படிச்சு அமெரிக்கா போயிட்டான். நீயும் படிடா என்று எல்லா வீட்டிலும் பற்றிக் கொண்டது.
🟤🌸அம்மா என்னால முடியல என்று பையன் சொன்னால் ,பத்து லட்சம் கொடு த்து நல்ல காலேஜ் ஜில் பையனை சேர்க்க வேண்டியதாகி விட்டது.
🟤🌸அப்புறமும் நல்ல மார்க் வாங்க டியூஷன் வேற. இதை பார்த்ததும் கள்ளப்பணம் அதிகம் கொண்ட அரசியல் வாதிகளும் கள்ள சாராய வியாபாரிகளும் கல்லூரி தொடங்கி விட்டார்கள்.
🟤🌸எங்ககிட்ட ஐந்து லட்சம் கொடுத்தா போதும் .வேலைக்கு நான் கியாரண்டி என்று வலையை வீசினார்கள்.
🟤🌸நல்ல வாத்தியாரை காசு கொடுத்து தூக்கி வந்தார்கள். நாளுக்கு நாள் பிசினெஸ் ஸும் கூடிச்சு.விலைவாசியும் கூடிடிச்சி.
🟤🌸இன்னைக்கி குழந்தை பிறந்த உடனேயே அட்மிஷன் போடணும். அட்வான்ஸ் சும் குடுக்கணும்.
🟤🌸இல்லன்னா நல்ல ஸ்கூலில் படிக்க முடியாது. இதுவா நல்ல கல்வி. கல்வியே வியாபாரம் ஆகி விட்டது.
🟤🌸கல்வி என்பது அறத்தை சார்ந்து இருந்த பொழுது அறிவு இருந்தது. என்று கல்வி பொருளை சார்ந்து சென்றதோ அன்றே அதன் தரமும் தாழ்ந்தது.
🟤🌸பொருள்,இன்பம்.அறம் ,வீடு என்று படிப்படியாக வளர வேண்டிய நாம் , இன்று பொருள் என்ற ஒன்றை மட்டும் துரத்தி சென்று ஆரம்ப நிலைக்கு நம்மை தரம் தாழ்த்தி விட்டோம்.
🟤🌸முன்றாம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு செல்வது வளர்ச்சியா ! இல்லை வீழ்ச்சியா !
🟤🌸சிந்தியுங்கள்.
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
🟤🌸முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
🟤🌸நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
🟤🌸இந்த நாள் இனிய நாளாகட்டும்
🟤🌸வாழ்க 🙌 வளமுடன்🎋🌴
🟤🌸அன்பே🔥சிவம்🌴🎋
🌴🎋🌴🎋🌴🎋🌴
நன்றி காரியாண்டி கணேஷ்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏