🟡🟡🟡
சர்க்கரை நோய்க்கு, ஒரு அடிப்படைத் தீர்வு உண்டு!
ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு உண்டு, ஓய்வு இல்லாமல் உழைத்து வாழும் ஒருவருக்கு நீரிழிவு நோய் எப்படி வரும்?
கணக்கு வழக்கு இல்லாமல் உண்பது! அதிலும் கேடுகெட்ட உணவு முறையில் வாழ்வது! உண்ட உணவுக்கு, இடைவெளி இல்லாத போகங்கள்!
உழைப்பே இல்லாத வாழ்க்கை முறை! அப்புறம் நீரிழிவு நோய் இரத்த அழுத்த நோய், சிறுநீரகக் கோளாறு, மூட்டு வலி, தேய்மானம், கண் பார்வைக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாசக் கோளாறுகள், மன அழுத்த ஆணவக் கோளாறுகள் இந்தக் கருமங்களில் ஏதாவது ஒன்றாவது இல்லாத, ஒரு மனிதனைக் காட்டுங்கள்!
என்னைக் கேள்வி கேட்கப் புறப்பட்டு விடாதீர்கள்!
இது எதிலும் இன்று வரை சிக்கவில்லை என்பதற்கு அடிப்படைக் காரணம் பிறப்பின் இயல்பு மட்டுமல்ல, வாழ்தலின் தத்துவமும் கூட!
இந்த நோய்களும் கூட இல்லாத இந்தத் தலைமுறையை, சிந்தித்துப் பார்த்தால், உடலும் உள்ளமும் நடுங்குகிறது!
காணும் ஒவ்வொரு மனிதனும், மனுஷியும் அணுகுண்டை விட மிகக் கொடிய உயிரினங்களாக உலவும் நிலையில் அல்லவா, இந்த உலகம் இருக்கும்?
மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம்! சிந்தனை வழி, செயல்கள்! சிந்தனையை சீர் திருத்தாது, மனம் தூய்மை அடையாது! மனம் தூய்மை அடையாமல், உடல் நலம் அடையாது!
எத்தனை தூரம் இந்த விஞ்ஞானம் வளர்ந்தாலும் எந்த உயிரினத்துக்கும் இந்த பிரபஞ்சத்தின் கர்ம விதி இது தான்!
சுயநலத்தோடு, ஆணவத்தோடு நோய் கொண்ட உடல் மற்றும் உள்ளத்தோடு, பல்லாண்டு காலம் இந்தத் தலைமுறை உயிர்கள் வாழ்க! வளர்க!
நன்றிSNR
🟡🟡🟡
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

