பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர். தம்மை நாடிவந்த விருந்தினருக்கு சுவையான உணவு வகைகளைச் செய்து விருந்தளித்து மகிழ்வித்தனர். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை மறைக்காது விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர்.
 உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு
 என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. குற்றியலுகரச் சொற் களுக்கு உதாரணமாக 
இச்சொற்களைக் கூறுவர். வடமொழியாளர் இச்சுவைகளை லவண, கஷாய, தித்த, கடு, 
மதுர, அம்ல என்பர்.
 
சோற்றுக்கு விடும் குழம்பு கொடுகளி பற்றிய செய்திகள் ஆரம்பகாலத்திலிருந்தே குறைவாகவே கிடைக்கின்றன. பிங்கலநிகண்டு பாகு, ஆணம் என்னும் இரண்டு சொற்களையே குழம்பிற்குக் கூறுகிறது.
 
சங்க காலத்தில் சோற்றுக்குரிய குழம்பாகப் புளிக்குழம்பு இருந்தது. தமிழ் மக்கள் புளியை அதிக அளவில் பயன்படுத்தினர்.
 
காய்கறி உணவு (சைவ உணவு):
மாமிச உணவைத் தவிர நல் காய்கறிகளைச் சமைத்து உண்ணவும் தமிழர்கள் அறிந்திருந்தனர். நல்ல தானியங்களைச் சமைக்கவும் கற்றிருந்தனர். கடினமற்ற அரிசி முழு அரிசி இத்தகைய அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல்போல் நிமிர்ந்து தனித்தனியாகச் சேர்ந்திருக்கின்ற சோறு. அதைப் பால்விட்டுச் சமைத்த பொரிக்கறிகளோடும் புளிக்கறிகளோடும் மிகுதியாகத் தின்போம் என்று சைவ உணவு சமைத்த முறையையும் அவ்வுணவை உண்டதையும் பொருநராற்றுப்படையில் பொருநர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
புலால் உணவு (அசைவ உணவு)
 
புலாலை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர். வெந்த்து வேவிறைச்சி என்றும், சுட்டது சூட்டிறைச்சி என்றும் வழங்கப்பட்டது. செம்மறியாட்டுக் கறியைச் சிறந்த்தாக எண்ணினர். செம்மறியாட்டுக் கறியிலும் அதன் தொடைக்கறியைச் சிறந்த சத்தும் கொழுப்புமுடையதாக்க் கருதினர். வந்த விருந்தினருக்குச் செம்மறியாட்டுக் கறி சமைத்துப் போடுவது பழந்தமிழரின் உணவு வழக்கமாக இருந்தது.
 
அருகம்புல்லை மேய்ந்து கொழுத்திருக்கின்ற செம்மறியாட்டின் மாமிசத்தை வேக வைப்பர். அதன் தொடையின் மேற்பாகத்துக் கறியினை எடுத்துக் கொடுத்து விருந்தினரை வற்புறுத்துவர்.
 
இரும்புச்சட்டத்தில்ல் புலாலைக் கோர்த்துத் தீயிலே சுட்டெடுத்த நல்ல கொழுத்த ஊன். அதன் நல்ல துண்டை வாயிலே போட்டுக் கொள்வோம். சூடு பொறுக்காமல் அந்த்த் துண்டத்தை இந்தக் கடைவாய்க்கும் அந்தக் கடைவாய்க்கும் தள்ளித் தள்ளித் தின்போம். ஊன்தின்றது போதும் என்று வெறுத்தால் வேறு வேறு வகையாகச் செய்யப்பட்ட பலகாரங்களைக் கொடுப்பர். எம்மை அங்கேயே தங்கும்படியும் செய்வர் என்பதை,
 
“துராஅய் துற்றிய துருவை அம்புழுக்கின்
கராஅரை வேவைப் பருகு எனத் தண்டி
காழின் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி
அவை அவை முனிகுவம் எனினே சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ” (103-108)
 
- என பொருநர்கள் கூறுவதாகப் பொருநராற்றுப்படை மொழிகின்றது. இவ்வடிகளில் மாமிச உணவை இன்சுவை உணவாகத் தமிழர்கள் புகழ்ந்து உண்டது குறிப்பிடப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.
 
சிற்றூர்களில் பெரும்பாலும் புலால் உணவையே மக்கள் உண்டனர். தினையரிசியைச் சோறாக்கி, நெய்யில் புலாலை வேகவைத்துப் பொரித்து தாமும் உண்டு, தம்மை நாடிவந்தோருக்கும் இனியன கூறி உண்ணக் கொடுத்தனர். இத்தகைய அரிய செய்தியை,
 
“மானவிறல்வேள் வயிரியர் எனினே
நும்மில் போல நில்லாது புக்குக்
கிழவிர்போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம்பு அகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த
நெய்க்கண் வேவையோடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்” (164-169)
 
என மலைபடுகடாம் நவில்கின்றது. இவ்வடிகள் சிற்றூர் மக்களின் பண்பினை எடுத்துரைக்கின்றது.
 
அந்த கால போர் வீரர்கள் க்ஷத்ரியர்கள் ஆகியோர் புலால் உணவையே பெரிதும் விரும்பி உண்டிருக்கிறார்கள் . தமிழன் ஆரம்ப காலத்திலிருந்தே அசைவ உணவுப் பிரியனாக இருந்திருக்கிறான். இறைச்சித் துண்டுக்கு பைந்தடி, ஊன், பைந்துணி என்னும் சொற்கள் உள்ளன. வீரர்கள் தொடர்ந்து இறைச்சியைத் தின்றதால் நிலத்தை உழும் கலப் பையின் கொழு தேய்வதைப் போலப் பற்கள் மழுங்கிப் போயின என்று பொருநர் ஆற்றுப்படை கூறும்.
 
உழவர்களின் உணவு
 
உலகிற்கு உணவிடும் உழவர்கள் அரிசி உணவையே மிகுதியாகச் சமைத்து உண்டனர். எனினும் உழவர்கள் பலவிடங்களிலும் வாழ்ந்தனர். அவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் விளைந்த உணவுப் பொருள்களையே சமைத்து உண்டனர். என்பது நோக்கத்தக்கது. உழவர்குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள். வயல்களில் பிடித்த நண்டையும், கொல்லையில் காய்த்த பீர்க்கங்காயையும் சேர்த்துச் சமைப்பார்கள். அதனையே தம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வர்
 
தொண்டை மண்டலத்தில் நெல் விளைவது குறைவு. புன்செய்ப் பயிர்கள்தாம் மிக அதிகமாக விளையும். அங்குள்ள உழவர்கள் பெரும்பாலும் வரகு, சாமை, அவரை உள்ளிட்ட புன்செய் தானியங்களையே அதிகம் பயிரிடுவர். அவர்களது உணவு புன்செய் தானியங்களாகவே இருப்பது நோக்கத்தக்கது.
 
வரகரிசிச் சோற்றை, புழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து பெருகிய சோற்றை அவ்வுழவர்கள் உண்டு வந்தனர்.
 
மேலும் வயல்களில் வலைஞர்களால் பிடித்துக் கொண்டுவரப்பட்ட வாளைமீன், தூண்டிலின் மூலம் பிடித்த வரால் மீன், இறைச்சித் துண்டுகள் இவற்றால் செய்யப்பட்ட உணவினையும், அரிசிச் சோற்றையும், பானையில் ஊற்றி வைத்திருக்கும் மதுவையும் காலை நேர உணவாக உழவர்கள் உண்டனர்
 
ஆயர் உணவு
 
முல்லை நிலத்தில் வாழ்பவர்கள் ஆயர் ஆவார். காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழும் ஆயராகிய இடையர்கள் ஆடுமாடுகளைச் செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய உணவு காடுகளாகிய புன்செய் நிலத்தில் விளையும் தானியங்களே ஆகும். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும் காலும் அவர்கள் உண்ணும் உணவாகும். ஆடுகள் மேய்த்து வந்த ஆயர்கள் பாலுணவை அதிகம் உண்டனர். அவர்ளின் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு பசும்பாலை உண்பதற்காக்க் கொடுத்தனர்
 
பார்ப்பார் உணவு
 
பார்ப்பாரின் உணவு இனிமையான அறுசுவை உணவாக இருந்த்து. அவர்கள் புலால் புசிக்க மாட்டார்கள். காய்கறி உணவுகளையே உண்டனர். இப்பார்பார்கள் தமிழகத்தில் பிறந்தவர்கள். தமிழர் குடியில் தோன்றியவர்கள். தமிழர்களிலே கல்வியும அறிவும் தனக்கென வாழாத் தகைமையும் மக்களுக்கு நல்வழிகாட்டும் மாண்பும் பெற்றவர்களை அந்தணர்கள் என்றும் பார்ப்பார்கள் என்றும் பண்டைக் காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுவது இவர்களையே ஆகும். இத்தகைய பாரபனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன என்பர்.
 
இப்பார்பனர்கள் பாற்சோறும், பருப்புச் சோற்றையும் உண்பர். மேலும் அவர்கள் இராஜான்னம் என்று பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினையும் உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தயிர்ச்சாதம், மாங்காய்ச்சாதம், புளியஞ்சாதம், போன்ற சித்திரான்னங்களையும் உண்பர். தம்மை நாடிவந்தோர்க்கும் கொடுத்து உபசரிப்பர்.
 
செல்வர்களின் உணவு
 
பிற நிலத்தில் வாழும் மக்களைக் காட்டிலும் வறுமையறியாது செல்வ வளமுடன் வாழ்ந்தனர். ஏனெனில் மருதநிலப் பகுதியிலே பெரிய பெரிய ஊர்களும் உண்டு. இக்காலத்தில் கிராமப் புறப் பகுதிகளில் வாழும் மக்களைவி நகரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் உயர்தரமான வாழ்க்கை நடத்துகின்றனர். இதுபோன்றே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களும் வளமுடன் வாழ்ந்தனர்.
 
செல்வர்கள் வெண்மையான நெற்சோறுடன் வீட்டில் வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலைச் சேர்த்து உண்டனர்.

![அமர்நாத் கீரையின் உடல்நல நன்மைகள்:-
ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத நிபுணர்கள் எப்போதும் அமர்நாத் ஆச்சரியமான சுகாதார நலன்கள் அடையாளம் என்றே கருதுகிறார்கள். விதைகள் மற்றும் அமர்நாத் இலைகள், இரண்டுமே மூலிகை வைத்தியததில் பயன்படுத்தப்பட்டது. விதைகள் மற்றும் இலைகள் அதீத வயிற்றுப்போக்கை நிறுத்தும், மற்றும் அதீத குருதிப் போக்கு (Hemorrhagic) போன்ற மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அமர்நாத் இலைகள் முக பரு மற்றும் படை போன்ற தோல் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து. அமர்நாத் இலைகள் கூட வாய் பூண், ஈருக்களில் வீக்கம் மற்றும் தொண்டை பூண் போன்றவற்றிற்கு ஆற்றல் வாய்ந்த மருந்தாகும்.
அமர்நாத் இலைகள் முடி உதிர்தல் மற்றும் முடி செம்மை படுதலுக்கு ஒரு நல்ல தீர்வாக காணப்படுகிறது. அமர்நாத் இல்லையின் சாறு தடவினாள் முடி நிறம் மற்றும் முடி உதிர்ததலை தக்க வைத்து கொள்ள உதவுகிறது, அது முடியை மென்மையாக வைத்திருக்கும், மற்றும் ஒரு பெரிய முடி இழப்பு சிகிச்சை ஆகும்.
அமர்நாத் 'விதை அல்லது தானியம்' இன் ஊட்டச்சத்து நலன்கள் அடிப்படையில் 'தினை' போல இருக்கும். இந்தியாவில், அமர்நாத் தானியம் சோளம் போன்று தெரித்து காலை உணவில் கஞ்சி அல்லது கூழ் போல பயன்படுத்தப்படும், மற்றும் லாட்டுச் போன்ற இனிப்பு பலகாரத்தில் சேர்க்கப்படும், அல்லது மாவு சேர்த்து அரைக்கப்பட்டு சப்பாதிச் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
அமர்நாத் தானியம் மிக அதிக புரதம் மற்றும் அதிக கொழுப்பு சத்து கொண்டுள்ளது. உண்மையில், அமர்நாத், கோதுமையை விட புரதம் சிறந்து இருக்க ஆதாரமாக உள்ளது. ஒட்டுமொத்த சுகாதார பராமரிப்பு, உடல் பராமரிப்பு மற்றும் திசு சிதைவைய் செறி செய்ய தேவையான linoleic acid மற்றும் lysine, அத்தியாவசிய amino acids, மற்றும் இது முக்கியமாக ஒரு செறிவூட்டப்படாத எண்ணெய். அமர்நாத் தானியம் 6-10 சதவீதம் எண்ணெய் கொண்டுள்ளது. மனித உடல்கள் இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிளம்களை தயாரிக்க முடியாது; நாம் எனவே நமது உணவில் இருந்து இதை பெற வேண்டும்.
மேலும் அமர்நாத் ஒரு கார்போஹைட்ரேட் நிறைந்த தனியமாகும். அமர்நாத் தணியத்தில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு சதுக்கள் சம நிலையில் இருக்கின்றது ஆகவே இத் தானியத்தை ஒரு எநர்ஜீ ஆற்றல் நேறைந்த உணவாகவே கருத்த படுகிறது, ஏனெனில் இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் அது கொட்டையின் உணவின் சுவைமணம் மற்றும் முறுமுறுப்பான கட்டமைப்பு கொண்டுள்ளது. அமர்நாத் கீரை எநர்ஜீ ட்ரிஂக்ஸ் தயாரிக்க பயன்படுகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
அமர்நாத் தானியம் எளிதில் ஜீரணம் ஆகா கூடியது, மேலும் மத்த தனியங்களில் இருக்கும் போல் ஒரு விதமான பசை போன்ற ஒட்டி கொள்ளும் தன்மை இதில் இல்லை. பெரும்பாலும் பிறந்த குழந்தை, சிறியவர்கள், முதியவர்கள் மற்றும் நோய் வாய் பட்டு அதில் இருந்து குணமகுபவர்கள் என எல்லோரும் உன்ணக்கூடியவை
இந்தியாவில் அமர்நாத் தானியம் மாவாக அரைத்து மற்ற மாவுகாளை சேர்த்து ரொட்டி செய்து உண்ணபபடுகிறது.
அமெரிக்காவில் அமர்நாத் இலைகள், தனியமாகவும், மற்றும் மாவகவும் அமெரிக்காவில் இருக்கும் இந்திய மற்றும் ஆசிய மளிகை கடைகள் கிடைக்கிறது, அதே போல் உங்கள் உள்ளூர் கரிம மற்றும் வைட்டமின் கடையில் கிடைக்கும்.
To Read in English, Click the link ~~ @[431943046865465:274:Food is the Best Medicine]](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/s480x480/302744_301985466568299_272878406_n.jpg)