உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips
தொப்பை உள்ளவர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரி எடை இருப்பவர்களுக்கும் கூட தொப்பை ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்ணும் உணவானது உடல்முழுவதும் சீராக பரவினால் தப்பில்லை. ஆனால் ஒரே இடத்தில் வயிற்றுப் பகுதியில் மொத்தமாக தேங்கிவிடுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

வயிறும், இடுப்பும் சுற்றளவு அதிகமாக, அதிகமாக மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் உடல் எடையை குறைக்க காட்டும் அக்கறையை தொப்பையை குறைக்கவும் காட்டுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

வயிறு கொழுப்பு அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் சுரப்பின் அளவு குறைகிறது. பெண்மைத் தன்மைக்கான ஹார்மோன் சுரப்பு குறைவதால் முகத்தில் முடி முளைக்கிறது. மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிவதே காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. இது குறித்து National Health and Nutrition Examination Survey (NHANES III) ஆய்வாளர்கள் 12 ஆயிரத்து 785 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் படி ஆண்,பெண்களில் பி.எம்.ஐ ரிப்போர்ட்படி தொப்பை இருந்த 2,562 பேருக்கு திடீர் மரணங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல் 1,138 பேருக்கு இதயம் தொடர்பான நோய் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. சராசரி எடையோடு இருப்பவர்களைக் காட்டிலும் வயிற்றில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் 2.75 சதவிகிதம் அளவிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எனவே உடல்பருமனை குறைக்கும் அதே நேரத்தில் வயிற்றில் தொப்பையை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:26 PM | Best Blogger Tips

உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்துணவு சாப்பிடதா காரணத்தினால்தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

வெந்தையம்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

இயற்கை ஜூஸ்

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மா மரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

கற்றாழை ஜெல்

நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடி செய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உணவருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.

சப்பாத்தி சாப்பிடுங்க

நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

மூலிகை கசாயம்
 
வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

கூந்தல் உதிருவதற்கான காரணங்கள்?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:25 PM | Best Blogger Tips

அழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. அவ்வாறு கூந்தல் உதிர்ந்து மெலிதாவதைத் தடுக்க, முதலில் அவரவர்கள் கூந்தல் உதிருவதற்கான காரணத்தை அறிய வேண்டும். இத்தகைய கூந்தல் மேலும் சில வழக்கத்திற்கு மாறான செயல்களாலும் கூந்தல் உதிருகிறது. அத்தகைய செயல்கள் என்னென்னவென்று அறிந்து, அதனை செய்யாமல் தடுத்தால் கூந்தலானது

உதிராமல் ஆரோக்கியமாக வளரும். அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

1. சூடான நீரில் முடியை அலசுதல்...

சுடு நீரில் குளிப்பதை விட, குளிர்ந்த நீரில் குளிப்பதே மிகவும் சிறந்தது என்று பலர் சொல்கின்றனர். ஆனால் சிலர் இதற்கு எதிர்மாறாக சொல்கின்றனர். எதுவானாலும் உண்மையில் சுடு தண்ணீரில் குளித்தால் கூந்தலானது பாதிக்கப்படும். ஏனெனில் சுடு தண்ணீர் கூந்தலை பலவீனமடையச் செய்து கூந்தல் உதிர்தலை ஏற்படுத்துகிறது.

2. ஹெல்மெட் அணிதல்...

ஹெல்மெட் ஆனது பயணத்தின் போது மிகவும் அவசியமானதே. ஆனால் இதை அணிவதால் கூந்தலானது உதிரும். ஏனெனில் ஹெல்மெட்-ஐ நீண்ட நேரம் அணிவதால் அதிக வியர்வையின் காரணமாக கூந்தலின் வேர்கள் வலுவிழந்து அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

3. அவசரமாக சீவுதல்...

சீவுவதற்கு ஒரு சில முறைகள் இருக்கிறது. அப்படி சீவாமல் அவசர அவசரமாக சீவினால் கூட கூந்தல் உதிரும். தலை சீவும் போது அழுத்தி சீவ வேண்டும் தான். அதற்காக கூந்தலின் முனையில் சிக்கு இருக்கும் போது அந்த சிக்கை எடுக்காமல் சீவினால் கூந்தலானது கொத்தாகத் தான் வரும். ஆகவே சீவும் முன் கூந்தலின் முனையில் இருக்கும் சிக்கை எடுத்துவிட்டு பின் சீவ வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.

4. ஈரமான கூந்தலை சீவுதல்...

கூந்தலானது ஈரமாக இருக்கும் போது வலுவற்ற நிலையில் இருக்கும். ஆனால் நிறைய பேர் கூந்தலை ஈரமாக இருக்கும் போதே சீவுகின்றனர். அவ்வாறு சீவினால் கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் இதுவே கூந்தல் உதிருவதற்கான பெரும் காரணம் ஆகும். ஆகவே இதனை தவிர்த்தால் நல்லது.

5. கூந்தலை இறுக்கமாக கட்டுதல்...

இன்றைய காலத்தில் 'போனி டைல்' போடுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அதையே ரொம்ப இறுக்கமாக போடுவதால் கூந்தல் உதிர ஆரம்பிக்கும். இருப்பினும் இதுவே பெரும் காரணம் என்று பலருக்கும் தெரியாது. இவ்வாறு கூந்தலை கட்டுவதால், கூந்தலானது பாதியிலேயே கட் ஆகிவிடுகிறது. ஆகவே மெல்லிய முடியை கொண்டவர்கள், இறுக்கமாக கட்டுவதை தவிர்த்தால் நல்லது.
இன்றைய இளைஞர்களுக்கு கூந்தல் உதிருவதே பெரும் தொல்லையாக இருக்கிறது. ஆகவே இத்தகைய தொல்லை தவிர்க்க வேண்டுமென்றால், மேற்கூரிய வழக்கத்திற்கு மாறான செயல்களை தவிர்த்தால், கூந்தலானது உதிராமல் இருக்கும்.

உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 PM | Best Blogger Tips
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/s480x480/255244_409498515766815_1694211041_n.jpg
இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றிப் பாருங்களேன்...

புரோட்டீன்

புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.

கார்போஹைட்ரேட்

ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

கொழுப்புகள்

பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.

மேலும் உடல் எடையை அதிகரிக்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன.

ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம் கூட நஞ்சாக மாறிவிடும்.

சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | | Best Blogger Tips

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்


 —