உஷார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உஷார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மழைக்காலத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில....

மணக்கால் அய்யம்பேட்டை | 4:27 PM | Best Blogger Tips

  Why do my lights blink on and off when it rains? - BPM Electric

அன்பார்ந்த நண்பர்களே...

மழைக்காலத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (மின்சாரம் சம்பந்தப்பட்டது)

i) எர்த் லீக் Rdகேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம்; செலவு பாராமல் வைக்க வேண்டும்.

ii) வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.
5 dangers that come with the "rainy season" | Phitsanulok Hospital | Tel :  055 909 888
iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,
 வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.

v) பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.
Electrical safety precautions during rainy season - India Today
vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,
 அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில்,
ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம்.
தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து, அந்த நடிகை  இறந்து  போயிருக்கிறார்.
ஹீட்டருக்கு கொடுக்க கூடிய
இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.
எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.
அவுட்லெட், ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,
ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.
ELCB/RCCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.
ஹீட்டர் சுவிச்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிச்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.
Electrical Safety Tips During Rainy Season (Do's and Don'ts) | Work Gearz
vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள்.
அதற்குப்பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்குட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும்.
எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல, வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.

viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,
ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால்,
நேர்ந்து விட்டால்,
அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்
பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை  நேரடியாக தொடவேக் கூடாது.

கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாத்த அவர்களை தொட்டு இழுத்து, இறந்து போன மாமியாரையும்,
பல வருடங்களுக்கு முன்பு,
திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு, கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன்
தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.
இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.
செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல்.
அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.

வீடென்றால் தொடப்பக்கட்டை!

வெளியே என்றால் செருப்பு!!!

எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான்!
வேறொன்றுமில்லை!

தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?
Electrical Safety - Safety Toolbox
x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.
குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிச் பாக்ஸ் வைக்கக் கூடாது.

xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர்,
இரு முனை அயன்கிளாட் சுவிச்சும்,
3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிச்சும் வைத்திருக்க வேண்டும்.
நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்;
ஃப்யூஸ் போடக் கூடாது.
நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPS க்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம்.  மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம்  நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால்,
 நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர்.
 ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை  பயன்படுத்திக்கொண்டால்   மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப்  செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.
Safety precautions: Steps to avoid electrical accidents at home during  monsoon
UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது.
UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின்,
UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும்,
பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால்,
சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது.
இது எளிதான காரியமல்ல.
அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம்.இது கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.

xiii) முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், RCCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.
 நாட்டில் பல பகுதிகளில் பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள  எச்சரிக்கை - ஐபிசி தமிழ்
எனவே, வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்!எனவே, நாம்தான், இந்த கடும்
மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கையுடன் இருப்போம் விபத்தை தவிர்ப்போம் நன்றி

🙏 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, beard and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

செல்போன்......

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips

 May be an image of phone and text

அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும். * சுத்தமில்லாத கையால் செல்போனை உபயோகித்தால், கைகளின் மூலம் பாதிப்பு செல்போனுக்குப் பரவி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
 
1. இது கடிகாரத்தை சாப்பிட்டது
 
2. இது டார்ச் லைட்டை உட்கொண்டது
 
3. இது தபால் அட்டைகளை சாப்பிட்டது
 
4. இது புத்தகங்களை முழுங்கியது
 
5. இது வானொலியை விழுங்கியது
 
6. இது டேப் ரெக்கார்டரை உட்கொண்டது
 
7. இது கேமராவை அழித்தது
 
8. இது கால்குலேட்டரை சாப்பிட்டது
 
9. இது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது
 
10. இது உறவையும் மறக்கடித்தது
 
11. இது நம் நினைவாற்றலை நுகர்ந்தது
 
12. தியேட்டர் இல்லை
 
நாடகம் இல்லை,
 
தொலைக்காட்சி இல்லை,
 
விளையாட்டு இல்லை, பாடல் இல்லை...
 
இதுவே வங்கி, இதுவே ஹோட்டல்,
 
இதுவே மளிகைக் கடை...
 
இதுதான் மருத்துவர், இதுதான் ஜோதிடர்...
 
இதுதான் உண்மையான சந்தை...
 
வெளியே போனால் எல்லாமே போனில் இருந்துதான்...
 
எல்லாமே ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்...
 
ஒரு விரல் உலகை ஆளுகிறது...
 
அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது....
 
வாய் முடக்கப்பட்டுள்ளது...
 
உண்மைதான்... தொட்டால்தான் வாழ்க்கை...
 
ஆனால் யாரும் தொடர்பில்லை...
 
ஒன்னாக கூடி இருந்தாலும் இது சிணுங்கினால் போதும் ஒதுங்கி விடுவார்கள் தனியாக.....
 
பல குடும்பங்கள் கெட்டுப் போனதும் இதனால தான்.....
 
படித்ததில் பிடித்தது!!!

 

🌷 🌷🌷 🌷  


🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

*ஆத்திரம் எதைத் தரும்?*

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips

 




ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.


கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.


அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.


"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.


இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.


"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.


உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.


சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.


**நம்மில் பலருக்கு ஆத்திரத்தில் அறிவும்புத்தியும் வேலை செய்வதில்லை.* *ஆத்திரம் பெரும்பாலும்* *அழிவைத் தருகிறது.*


*ஆத்திரம் , கோபம்* *தவிர்த்து அன்புடனும்,* *அமைதியுடனும் வாழ்ந்திட வேண்டும்.**

 

நன்றி இணையம்