திருவாரூரில் 🔀 அகஸ்தியம்பள்ளி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips

 06630/Tiruvarur - Agastiyampalli DEMU Passenger - Tiruturaipundi to  Agastiyampalli SR/Southern Zone - Railway Enquiry

⚡ திருவாரூரில் இருந்து அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் பயணிகள் ரயில் எதிரே வரும் காரைக்குடி திருவாரூர் பயணிகள் ரயிலை திருத்துறைப்பூண்டி சந்திப்பு நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சி 😍 இதன் மூலம் இணைப்பு காரைக்குடி மார்க்கத்தில் உள்ளது !!
 
✔️ காரைக்குடியில் இருந்து வேதாரண்யம் செல்ல வாரத்தில் 5 நாட்கள் இணைப்பு ரயில் சேவை கிடைக்கப்பெறுகிறது 🤝

📌 76830 || திருவாரூர் அகஸ்தியம்பள்ளி டெமு பயணிகள் ரயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07:40 மணிக்கு திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 08:22 மணிக்கு திருத்துறைப்பூண்டி சந்திப்பு வருகிறது //
 
எதிரே >> பட்டுக்கோட்டை வழியில் இருந்து .....
📌 56828 || காரைக்குடி திருவாரூர் பாசஞ்சர் ரயில் தினமும் மாலை 06:15 மணிக்கு காரைக்குடி சந்திப்பு நிலையத்தில் புறப்பட்டு இரவு 08:13 மணிக்கு திருத்துறைப்பூண்டி சந்திப்பு வந்து சேருகிறது //
 
🔗 இரண்டு வண்டிகளுக்கும் இடையே ரயில் மாறி கொள்வதற்கு 10 நிமிட இடைவெளி உள்ளது •• 08:13 மணிக்கு வருகை // 08:24 மணிக்கு புறப்படும் நேரம் ....
 
🔀 காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் மக்கள் இந்த இணைப்பை வாரத்தில் 5 நாட்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தி கொள்ள முடியும் ❗ சனி மற்றும் ஞாயிறு திருவாரூர் அகஸ்தியம்பள்ளி பயணிகள் ரயில் சேவை கிடையாது ❌ எனவே ஐந்து நாள் மட்டும் இதனை பயன்படுத்தலாம் .....
 
⬆️ இந்த ரயில் சேவை துவங்கிய போது யாருக்கும் பயனில்லாமல் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை சென்று வந்தது எந்த ஒரு ரயிலுக்கும் இணைப்பும் இல்லாமல் குறுகிய பகுதிக்கு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது ‼️ பிறகு வேதாரண்யம் பகுதி மக்கள் முழு அளவில் பயன்பெறும் வகையில் சேவை மாற்றி அமைக்கப்பட்டது ✅ அதன்படி காலையில் அகஸ்தியம்பள்ளி திருவாரூர் இணைப்பு கொடுக்கப்பட்டு // மீண்டும் இரவு திருவாரூர் அகஸ்தியம்பள்ளி இணைப்பு கொடுக்கப்பட்டு 👇👇
திருத்துறைப்பூண்டி சந்திப்பில் இறங்கி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மார்க்கத்தில் செல்லும் வகையிலும் 🎯
 
திருவாரூர் சந்திப்பில் இறங்கி தஞ்சாவூர் திருச்சி // பேரளம் மயிலாடுதுறை // தேவை இருப்பின் நாகப்பட்டினம் காரைக்கால் வழித்தடங்களில் பயணிக்க ஒரு இணைப்பு அங்கு கொடுக்கப்பட்டது 🎯

🔥 இதன் மூலமாக நேரடியாக இந்த அனைத்து ஊர்களுக்கும் பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறுகிறது 🤝 பல இணைப்பை உள்ளடக்கி தான் இந்த சேவையை திருச்சி ரயில்வே கோட்டம் மாற்றி அமைத்தது !!

📌 விரைவில் இதன் பெட்டிகளை MEMU வகை வெட்டியாக மாற்றி இதன் சேவையை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது 💢 தற்போது இந்த ரயில் DEMU வகை ரயிலாக இருப்பதால் திருச்சிக்கு பராமரிப்பு மேற்கொள்ள சனி மற்றும் ஞாயிறு சென்று விடுகிறது 📍 அதனால் வாரத்தில் ஐந்து நாள் மட்டுமே தற்போது இந்த வழித்தடத்தில் சேவை செய்து வருகிறது இந்த ரயில் ::- தினசரி இயங்கும் வகையில் இதனை மாற்ற வேண்டுமென்றால் தற்போது இந்த வழித்தடம் முழு அளவில் மின்சார வழிதடமாக மாறிவிட்டது
 
மேலும் இந்த ரயிலுடன் பெட்டி பகிர்மானம் செய்யும் திருவாரூர் பட்டுக்கோட்டை பயணிகள் ரயில் ஓடும் வழித்தடத்திலும் முழு அளவில் மின்சார வழித்தடமாக பட்டுக்கோட்டை வரை மாறிவிட்டது 🔀 இனி தாராளமாக இதனை மெமு வகை ரயிலாக மாற்ற முடியும் ::- தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கை உள்ளது
 
📷 படம் || திருத்துறைப்பூண்டி சந்திப்பு TTP
• நடைமேடை 1 || காரைக்குடியில் இருந்து 
 
திருவாரூர் செல்லும் பயணிகள் ரயில் CROSSING மேற்கொள்ள காத்திருக்கிறது ✅
 
• நடைமேடை 3 || திருவாரூர் அகஸ்தியம்பள்ளி டெமு ரயில் வந்து கொண்டிருக்கிறது ✅

 

Thanks & Copy form Sibi Kumar


 

மன்னார்குடி ⟨⟨≈⟩⟩ 🔀திருவாரூர்⟨⟨≈⟩⟩🔀மன்னார்குடி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:55 PM | Best Blogger Tips

 Mannargudi to Thiruvarur Long-Distance Trains, Shortest Distance: 37 km -  Railway Enquiry

56002/Mannargudi - Thiruvarur Passenger (UnReserved) - Kulikarai to  Thiruvarur SR/Southern Zone - Railway Enquiry

🚂 திருவாரூரில் இருந்து தினமும் மன்னார்குடி வரை செல்லும் பாசஞ்சர் ரயில் 🚆 காரைக்குடி ரயிலுக்கு இணைப்பு சேவையாக உள்ளது ✅

⬆️ மன்னார்குடி >> திருவாரூர் >> மன்னார்குடி இடையே தினசரி பயணிகள் ரயில் இப்போது இயக்கப்பட்டு வருகிறது ❗ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த சேவை நேரடியாக மன்னார்குடி முதல் மயிலாடுதுறை வரை சென்று வந்த நிலையில் // பிறகு இந்த ரயிலுக்கு இணைப்பு சேவை வழங்கி இதனை திருவாரூர் உடன் பகுதியாக நிறுத்திவிட்டனர்
 
📌 இப்போதும் காரைக்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயிலுக்கு இந்த ரயில் இணைப்பு சேவையாக திருவாரூரில் செயல்பட்டு வருகிறது // காலை & மாலை நேரங்களில் ரயில் மாறி கொள்ளும்படி இதற்கான நேரம் மற்றும் கால அட்டவணை வடிவமைக்கப்பட்டு இதன் வழித்தடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது !!
 
🚂 வண்டி எண் || 56001 // 56002
• மன்னார்குடி ⟨⟨≈⟩⟩ திருவாரூர் •
" தினசரி பயணிகள் வண்டி "
 
🔴 56002 || மன்னார்குடி திருவாரூர் பயணிகள் ரயில் தினமும் காலை 08:35 மணிக்கு மன்னார்குடி ரயில் நிலையத்தில் புறப்பட்டு காலை 09:40 மணிக்கு திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேருகிறது 💢

🔀 திருவாரூரில் மயிலாடுதுறை செல்லும் ரயிலில் மாற வேண்டும் 🔗 திருவாரூரில் 👇👇

📌 56835 காரைக்குடி மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் தினமும் காலை 09:50 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்பட்டு காலை 10:45 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது ✅

⚡⚡ மறு மார்க்கத்தில் மயிலாடுதுறையில்

📌 56836 மயிலாடுதுறை காரைக்குடி பாசஞ்சர் ரயில் தினமும் மாலை 05:10 மணிக்கு மயிலாடுதுறை சந்திப்பில் புறப்பட்டு மாலை 05:57 மணிக்கு திருவாரூர் வந்து சேருகிறது 
 
🔀 திருவாரூரில் மன்னார்குடி செல்லும் ரயிலில் மாற வேண்டும் 🔗 திருவாரூரில் 👇👇

🔴 56001 || திருவாரூர் மன்னார்குடி பயணிகள் ரயில் தினமும் மாலை 06:15 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்பட்டு இரவு 07:20 மணிக்கு மன்னார்குடி சென்று சேருகிறது ✅

🚏 நிறுத்தங்கள் ::- நீடாமங்கலம் சந்திப்பு கொரடாச்சேரி திருமதிக்குனம் குளிக்கரை ...

🚏 திருவாரூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள ரயில் நிறுத்தங்கள் ::- நன்னிலம் பூந்தோட்டம் பேரளம் சந்திப்பு .....
 
இந்த ரயிலில் மொத்தமாக 15 UNRESERVED பெட்டிகள் செயல்பாட்டில் உள்ளது // மன்னை எக்ஸ்பிரஸ் பெட்டிகளை பயன்படுத்தி இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது 👨‍🔧 சென்னை எழும்பூரில் பராமரிக்கப்படும் மன்னை மன்னார்குடி சென்னை விரைவு ரயில் பெட்டி திருவாரூர் வரை வந்து செல்கிறது :- இங்கு இந்த ரயிலுக்கு சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீர் நிரப்பதற்கு போன்று PFTR பணிகள் நடைமேடை ரீதியிலாக நடைபெறும் ......
 
🔗 திருவாரூரில் இறங்கி மற்றொரு ரயில் மாறி கொள்ளும் வகையில் இதற்கான அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது !! காலை 09:20 மணிக்கெல்லாம் காரைக்குடி ரயில் திருவாரூருக்கு வந்துவிடும் ‼️ இருப்பினும் மன்னார்குடி இணைப்புக்காக காலை 09:50 மணிக்கு தான் புறப்படும் வகையில் இதற்கான அட்டவணை திருவாரூரிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது !!
 
📌 மன்னார்குடியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை வரை செல்வதற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு திருவாரூரில் ரயில் மாறிக்கொண்ட வேண்டும் .....
 
📷 படம் || திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம் 
 
• நடைமேடை 2ல் மன்னார்குடி பாசஞ்சர் மாலை 06:15 மணிக்கு புறப்பட தயாராக உள்ளது 🔀
 
• நடைமேடை 4ல் காரைக்குடி பாசஞ்சர் மாலை 06:00 மணிக்கு புறப்பட தயாராக உள்ளது 🔀

 

Thanks & Copy from