திருவாரூரில் 🔀 அகஸ்தியம்பள்ளி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

⚡ திருவாரூரில் இருந்து அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் பயணிகள் ரயில் எதிரே வரும் காரைக்குடி திருவாரூர் பயணிகள் ரயிலை திருத்துறைப்பூண்டி சந்திப்பு நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சி 😍 இதன் மூலம் இணைப்பு காரைக்குடி மார்க்கத்தில் உள்ளது !!
 
✔️ காரைக்குடியில் இருந்து வேதாரண்யம் செல்ல வாரத்தில் 5 நாட்கள் இணைப்பு ரயில் சேவை கிடைக்கப்பெறுகிறது 🤝

📌 76830 || திருவாரூர் அகஸ்தியம்பள்ளி டெமு பயணிகள் ரயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07:40 மணிக்கு திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 08:22 மணிக்கு திருத்துறைப்பூண்டி சந்திப்பு வருகிறது //
 
எதிரே >> பட்டுக்கோட்டை வழியில் இருந்து .....
📌 56828 || காரைக்குடி திருவாரூர் பாசஞ்சர் ரயில் தினமும் மாலை 06:15 மணிக்கு காரைக்குடி சந்திப்பு நிலையத்தில் புறப்பட்டு இரவு 08:13 மணிக்கு திருத்துறைப்பூண்டி சந்திப்பு வந்து சேருகிறது //
 
🔗 இரண்டு வண்டிகளுக்கும் இடையே ரயில் மாறி கொள்வதற்கு 10 நிமிட இடைவெளி உள்ளது •• 08:13 மணிக்கு வருகை // 08:24 மணிக்கு புறப்படும் நேரம் ....
 
🔀 காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் மக்கள் இந்த இணைப்பை வாரத்தில் 5 நாட்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தி கொள்ள முடியும் ❗ சனி மற்றும் ஞாயிறு திருவாரூர் அகஸ்தியம்பள்ளி பயணிகள் ரயில் சேவை கிடையாது ❌ எனவே ஐந்து நாள் மட்டும் இதனை பயன்படுத்தலாம் .....
 
⬆️ இந்த ரயில் சேவை துவங்கிய போது யாருக்கும் பயனில்லாமல் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை சென்று வந்தது எந்த ஒரு ரயிலுக்கும் இணைப்பும் இல்லாமல் குறுகிய பகுதிக்கு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது ‼️ பிறகு வேதாரண்யம் பகுதி மக்கள் முழு அளவில் பயன்பெறும் வகையில் சேவை மாற்றி அமைக்கப்பட்டது ✅ அதன்படி காலையில் அகஸ்தியம்பள்ளி திருவாரூர் இணைப்பு கொடுக்கப்பட்டு // மீண்டும் இரவு திருவாரூர் அகஸ்தியம்பள்ளி இணைப்பு கொடுக்கப்பட்டு 👇👇
திருத்துறைப்பூண்டி சந்திப்பில் இறங்கி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மார்க்கத்தில் செல்லும் வகையிலும் 🎯
 
திருவாரூர் சந்திப்பில் இறங்கி தஞ்சாவூர் திருச்சி // பேரளம் மயிலாடுதுறை // தேவை இருப்பின் நாகப்பட்டினம் காரைக்கால் வழித்தடங்களில் பயணிக்க ஒரு இணைப்பு அங்கு கொடுக்கப்பட்டது 🎯

🔥 இதன் மூலமாக நேரடியாக இந்த அனைத்து ஊர்களுக்கும் பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறுகிறது 🤝 பல இணைப்பை உள்ளடக்கி தான் இந்த சேவையை திருச்சி ரயில்வே கோட்டம் மாற்றி அமைத்தது !!

📌 விரைவில் இதன் பெட்டிகளை MEMU வகை வெட்டியாக மாற்றி இதன் சேவையை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது 💢 தற்போது இந்த ரயில் DEMU வகை ரயிலாக இருப்பதால் திருச்சிக்கு பராமரிப்பு மேற்கொள்ள சனி மற்றும் ஞாயிறு சென்று விடுகிறது 📍 அதனால் வாரத்தில் ஐந்து நாள் மட்டுமே தற்போது இந்த வழித்தடத்தில் சேவை செய்து வருகிறது இந்த ரயில் ::- தினசரி இயங்கும் வகையில் இதனை மாற்ற வேண்டுமென்றால் தற்போது இந்த வழித்தடம் முழு அளவில் மின்சார வழிதடமாக மாறிவிட்டது
 
மேலும் இந்த ரயிலுடன் பெட்டி பகிர்மானம் செய்யும் திருவாரூர் பட்டுக்கோட்டை பயணிகள் ரயில் ஓடும் வழித்தடத்திலும் முழு அளவில் மின்சார வழித்தடமாக பட்டுக்கோட்டை வரை மாறிவிட்டது 🔀 இனி தாராளமாக இதனை மெமு வகை ரயிலாக மாற்ற முடியும் ::- தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கை உள்ளது
 
📷 படம் || திருத்துறைப்பூண்டி சந்திப்பு TTP
• நடைமேடை 1 || காரைக்குடியில் இருந்து 
 
திருவாரூர் செல்லும் பயணிகள் ரயில் CROSSING மேற்கொள்ள காத்திருக்கிறது ✅
 
• நடைமேடை 3 || திருவாரூர் அகஸ்தியம்பள்ளி டெமு ரயில் வந்து கொண்டிருக்கிறது ✅

 

Thanks & Copy form Sibi Kumar