
திருவாரூரில் இருந்து தினமும் மன்னார்குடி வரை செல்லும் பாசஞ்சர் ரயில்
காரைக்குடி ரயிலுக்கு இணைப்பு சேவையாக உள்ளது
மன்னார்குடி >> திருவாரூர் >> மன்னார்குடி இடையே தினசரி பயணிகள் ரயில் இப்போது இயக்கப்பட்டு வருகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த சேவை நேரடியாக மன்னார்குடி முதல் மயிலாடுதுறை வரை சென்று வந்த நிலையில் // பிறகு இந்த ரயிலுக்கு இணைப்பு சேவை வழங்கி இதனை திருவாரூர் உடன் பகுதியாக நிறுத்திவிட்டனர்
இப்போதும் காரைக்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயிலுக்கு இந்த ரயில் இணைப்பு சேவையாக திருவாரூரில் செயல்பட்டு வருகிறது // காலை & மாலை நேரங்களில் ரயில் மாறி கொள்ளும்படி இதற்கான நேரம் மற்றும் கால அட்டவணை வடிவமைக்கப்பட்டு இதன் வழித்தடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது !!
வண்டி எண் || 56001 // 56002• மன்னார்குடி ⟨⟨≈⟩⟩ திருவாரூர் •
" தினசரி பயணிகள் வண்டி "
56002 || மன்னார்குடி திருவாரூர் பயணிகள் ரயில் தினமும் காலை 08:35 மணிக்கு மன்னார்குடி ரயில் நிலையத்தில் புறப்பட்டு காலை 09:40 மணிக்கு திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேருகிறது
56835 காரைக்குடி மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் தினமும் காலை 09:50 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்பட்டு காலை 10:45 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது

மறு மார்க்கத்தில் மயிலாடுதுறையில்
56836 மயிலாடுதுறை காரைக்குடி பாசஞ்சர் ரயில் தினமும் மாலை 05:10 மணிக்கு மயிலாடுதுறை சந்திப்பில் புறப்பட்டு மாலை 05:57 மணிக்கு திருவாரூர் வந்து சேருகிறது
திருவாரூரில் மன்னார்குடி செல்லும் ரயிலில் மாற வேண்டும்
திருவாரூரில் 

56001 || திருவாரூர் மன்னார்குடி பயணிகள் ரயில் தினமும் மாலை 06:15 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்பட்டு இரவு 07:20 மணிக்கு மன்னார்குடி சென்று சேருகிறது
நிறுத்தங்கள் ::- நீடாமங்கலம் சந்திப்பு கொரடாச்சேரி திருமதிக்குனம் குளிக்கரை ...
திருவாரூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள ரயில் நிறுத்தங்கள் ::- நன்னிலம் பூந்தோட்டம் பேரளம் சந்திப்பு .....
இந்த ரயிலில் மொத்தமாக 15 UNRESERVED பெட்டிகள் செயல்பாட்டில் உள்ளது // மன்னை எக்ஸ்பிரஸ் பெட்டிகளை பயன்படுத்தி இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது
சென்னை எழும்பூரில் பராமரிக்கப்படும் மன்னை மன்னார்குடி சென்னை விரைவு ரயில் பெட்டி திருவாரூர் வரை வந்து செல்கிறது :- இங்கு இந்த ரயிலுக்கு சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீர் நிரப்பதற்கு போன்று PFTR பணிகள் நடைமேடை ரீதியிலாக நடைபெறும் ......
திருவாரூரில் இறங்கி மற்றொரு ரயில் மாறி கொள்ளும் வகையில் இதற்கான அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது !! காலை 09:20 மணிக்கெல்லாம் காரைக்குடி ரயில் திருவாரூருக்கு வந்துவிடும்
இருப்பினும் மன்னார்குடி இணைப்புக்காக காலை 09:50 மணிக்கு தான் புறப்படும் வகையில் இதற்கான அட்டவணை திருவாரூரிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது !!
மன்னார்குடியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை வரை செல்வதற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு திருவாரூரில் ரயில் மாறிக்கொண்ட வேண்டும் .....
படம் || திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம்
• நடைமேடை 2ல் மன்னார்குடி பாசஞ்சர் மாலை 06:15 மணிக்கு புறப்பட தயாராக உள்ளது 
• நடைமேடை 4ல் காரைக்குடி பாசஞ்சர் மாலை 06:00 மணிக்கு புறப்பட தயாராக உள்ளது 
Thanks & Copy from