விரதம் - நம் முன்னோர்கள் வகுத்து வைத்த....!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips

 சம்பாதிக்கிறதே சாப்பிடறத்துக்கு தான். இதிலே விரதம் எதுக்கு. நாம பட்டினியா  இருந்தா, நமக்கு உள்ளே இருக்குற கடவுள பட்டினி போட்டதா ஆகாதா ...

விரதம்

சம்பாதிக்கிறதே சாப்பிடறத்துக்கு தான்.  இதிலே விரதம் எதுக்கு.

நாம பட்டினியா இருந்தா, நமக்கு உள்ளே இருக்குற கடவுள பட்டினி போட்டதா ஆகாதா.
என்று இன்றைய மாடர்ன் தலைமுறை பல நேரங்களில் கிண்டலாகக் கேட்பதுண்டு.
விரதம் இருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்ல், கடவுள் பெயரால் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த இந்த ஏகாதசி விரதத்திற்குப்' பின்னால், சமீபத்தில் மருத்துவ உலகின் உயரிய விருதான நோபல் பரிசையே (Nobel Prize) தட்டிச் சென்ற ஒரு மாபெரும் அறிவியல் ரகசியம் மறைந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம்! 2016-ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த மாபெரும் மருத்துவ உண்மையின் பெயர் "ஆட்டோஃபேஜி" (Autophagy). இதன் அர்த்தம் 'தன்னைத் தானே உண்ணுதல்'.
Types Of VIratham Upavasam,விரதங்களின் வகைகளும், விரதம் இருப்பவர்கள்  கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் - types of fasting in hinduism and  its types : benefits of viratham in ...
அதாவது, ஒரு மனிதன் தொடர்ந்து 14 முதல் 16 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் உடலைப் பட்டினி போடும்போது, மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது. அப்போது, உயிர் வாழ்வதற்கான ஒரு போராட்டமாக, உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான செல்கள், அங்குள்ள கெட்டுப்போன, முதிர்ச்சியடைந்த மற்றும் கேன்சரை (Cancer) உருவாக்கக் கூடிய நச்சு செல்களை உணவாகத் தின்ன ஆரம்பிக்கின்றன! இதனால் மனித உடலுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த கழிவுகளும் எந்த ஒரு மருத்துவச் செலவும் இல்லாமல் தானாகவே சுத்தமாகி, உடல் முழுமையாகப் புத்துணர்ச்சி அடைகிறது. இது தான் அந்த நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு.

ஆனால், இதைத் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் 'ஏகாதசி விரதம்' என்ற பெயரில் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போனார்கள்!

சரி, எதற்காகச் சரியாக ஏகாதசி அன்று மட்டும் பட்டினி கிடக்க வேண்டும்? வேறு நாளில் இருக்கக் கூடாதா? அங்குதான் இந்து மதத்தின் பிரம்மாண்டமான வானியல் ( Astronomy) அறிவு வேலை செய்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து வரும் 11-வது நாளான ஏகாதசி அன்று, பூமியின் வளிமண்டல அழுத்தம் (Atmospheric Pressure) மிக மிகக் குறைவாக இருக்கும். அந்த நாளில் அதிக உணவு உட்கொண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதையும், மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்க அதுவே சரியான நாள் என்பதையும் துல்லியமாகக் கணித்தார்கள்.
விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாதவை... - சர்வமங்களம் | Sarvamangalam
சாதாரண மக்களிடம் போய் 'ஆட்டோஃபேஜி', 'செல் சுழற்சி' என்று விஞ்ஞானம் பேசினால் யாருக்கும் புரியாது என்பதால், அந்த மாபெரும் மருத்துவ அறிவியலை இறைவனோடு இணைத்து 'விரதம்' என்று வாழ்வியலாக மாற்றிக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள்.

இன்றைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, நாம் என்றைக்கோ பின்பற்றி விட்டுப் பழசு என்று தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். 

இனியாவது ஏகாதசி விரதம் இருந்தால் முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள்; அது நோபல் பரிசு பெற்ற ஒரு தலைசிறந்த மெடிக்கல் ட்ரீட்மென்ட்!

ஒவ்வொரு மாசமும் இரண்டு ஏகாதசி வரும். நாளை ஏகாதசி. பெருமாளை வணங்கி விட்டு விரதம் இருக்க தொடஙகுவோம். மதியம் பசித்தால் பழம் ஏதாவது சாப்பிடலாம். பால் டீ காபி குடிக்கலாம். இரவு சாப்பிடலாம் 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

"படுக்கையில் படுத்த 8 நொடியில் தூக்கம்!"

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips

 May be an image of yoga

 

"படுக்கையில் படுத்த 8 நொடியில் தூக்கம்!" - பிரதமர் மோடியின் ரகசியமும் 'மிலிட்டரி மெத்தடும்'!
 
படுக்கையில் படுத்த சில வினாடிகளிலேயே தனக்குத் தூக்கம் வந்துவிடும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறிய கருத்து, நாடு முழுவதும் பலரிடையே பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
பணிச்சுமையும் மன அழுத்தமும் நிறைந்த தற்கால சூழலில், படுக்கையில் படுத்து மணி கணக்கில் தூக்கமின்றித் தவிப்பவர்களுக்குப் பிரதமர் மோடியின் இந்த வார்த்தைகள் ஆச்சரியத்தை அளித்தன. இருப்பினும், 
 
அறிவியல்பூர்வமாகப் பயிற்சி செய்தால் 120 வினாடிகளுக்குள் (2 நிமிடங்கள்) யார் வேண்டுமானாலும் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல முடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 
இந்த அதிவேகத் தூக்க நுட்பத்திற்கு 'மிலிட்டரி மெத்தட்' (The Military Method) என்று பெயர். இரண்டாம் உலகப் போரின் போது, 
 
போர்க்களத்தில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்குக் குறைந்த நேரத்தில் போதிய ஓய்வு தேவைப்பட்டதால், 'லாயிட் பட் வின்டர்' (Lloyd Bud Winter) என்பவரால் 1981-இல் எழுதப்பட்ட புத்தகத்தில் இந்த முறை முதன்முதலில் விவரிக்கப்பட்டது. 
 
பின்னர் ஷாரன் அக்மேன் (Sharon Ackman) எனும் வலைப்பதிவர் "ஹவ் டு ஃபால் அஸ்லீப் இன் 120 செகண்ட்ஸ்" (How to Fall Asleep in 120 Seconds) என்ற கட்டுரையில் இதுகுறித்துப் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த முறை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது.
 
இந்த மிலிட்டரி மெத்தட் நுட்பத்தைப் பின்பற்ற சில எளிய வழிமுறைகள் உள்ளன. முதலில் படுக்கையில் நேராகப் படுத்து, முகத்தில் உள்ள தசைகள், தாடை மற்றும் கண்ணிமைகளை முழுமையாகத் தளர்த்த வேண்டும். அதன்பின் தோள்பட்டைகளைத் தளர்த்தி, கைகளை உடலின் இருபுறமும் தளர்வாக வைக்க வேண்டும். 
 
மூச்சை மெதுவாக வெளியேற்றி, மார்புப் பகுதி மற்றும் தொடைகள், கால்களின் தசைகளைத் தளர்த்த வேண்டும். இறுதியாக, மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளை அகற்ற, 
 
அமைதியான ஏரி அல்லது திறந்தவெளியைக் கற்பனை செய்ய வேண்டும். சிந்தனைகள் கட்டுப்படாவிட்டால் "எதையும் யோசிக்காதே" என்ற வார்த்தையை மனதில் 10 வினாடிகள் நினைத்துக் கொள்ள வேண்டும்.
 
தொடர்ந்து 6 வாரங்கள் வரை இந்த முறையைப் பயிற்சி செய்தால், 96 சதவீத மக்களுக்கு 2 நிமிடங்களுக்குள் தூக்கம் தழுவும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 
 
பிரதமர் மோடி குறிப்பிட்டது போல விரைவாகத் தூங்கும் கலை, முறையான மனக் கட்டுப்பாடு மற்றும் உடலைத் தளர்த்தும் பயிற்சிகளின் மூலமே சாத்தியமாகிறது.