பாபு ராஜேந்திர பிரசாத்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:07 PM | Best Blogger Tips
பாரதக் குடியரசு அமைந்ததில் பெறும் பங்கு வகித்தவர் பாபு ராஜேந்திர பிரசாத். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக வீற்றிருந்து அவர் ஆற்றிய பணிகளுக்காக, குடியரசு என்ற முறையில் நாடு அவருக்கு என்றும் நன்றி செலுத்தும்.

பீகார் மாநிலத்தில், ஷிவான் மாவட்டத்தில், ஜிரதே கிராமத்தில், 1884, டிச. 3 ம் தேதி பிறந்தவர் ராஜேந்திர பிரசாத். இவரது தந்தை மகாதேவ சஹாய், பெர்சிய மொழியிலும் சமஸ்கிருதத்திலும் நிபுணர். தாய் கமலேஸ்வரி தேவி.

தனது துவக்கக் கல்வியை சாப்ரா மாவட்ட பள்ளியில் பயின்ற ராஜேந்திர பிரசாத், பாட்னாவிலுள்ள டி.கே. கோஷ் அகாதெமியில் உயர் நிலைக் கல்வி பயின்றார். இதனிடையே அவரது 12 வது வயதில், ராஜவன்ஷி தேவி என்ற நங்கையை திருமணம் செய்துகொண்டார்.

கொல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் முதலிடத்தில் தேறிய பிரசாத், அதற்காக மாதம் ரூ. 30 உதவித்தொகை பெற்றார். 1902 ல் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லலூரியில் சேர்ந்தார். அங்கு ஜெகதீச சந்திர போஸ், பிரபுல்ல சந்திர ராய் ஆகியோரின் மாணாக்கராக இருந்தார். முதுகலை- பொருளாதாரம் பட்டம் பயின்ற அவர், 1908 ல் பீகார் மாணவர் மாநாடு என்ற அமைப்பு உருவாவதில் பெரும்பங்கு வகித்தார். அந்நாளில் மாணவர் சங்கம் அமைப்பதில் முன்னோடியான நடவடிக்கை என்று அது கருதப்படுகிறது. பின்னாளில் பீகார் முதல்வரான அனுக்ரக நாராயன் சின்ஹா, பீகார் கேசரி கிருஷ்ண சிங் உள்ளிட்ட பல தலைவர்களை அந்த அமைப்பே உருவாக்கியது.

1908 ல் முசாபர்பூரில் பூமிகர் பிராமின் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு முதல்வராகவும் அவர் உயர்ந்தார். எனினும், சட்டக் கல்வி பயில்வதற்காக ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். 1915 ல் சட்டக் கல்வியில் முதுகலை (எம்.எல்) பட்டம் பெற்றார். அதன்பிறகு, பகல்பூரில் (1916) வழக்கறிஞராக பணியைத் துவங்கினார். பீகார் மற்றும் ஒரிசா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக அவர் திறம்பட் பணிபுரிந்தார். குறுகிய காலத்தில் அத்தொழிலில் முத்திரை பதித்தார்.

அப்போதுதான் சம்பரன் சத்யாகிரகம் என்ற விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி பீகாரில் தீவிரம் அடைந்தது. விவசாய சாகுபடிக்கு விதிக்கப்பட்ட ஆங்கிலேய அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உழவர்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு ஆதரவாக மகாத்மா காந்தி சம்பரன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள நிலையை கண்டறிந்து வருமாறு ராஜேந்திர பிரசாத்தை காந்திஜி பணித்தார்.

அதனை ஏற்று, உண்மை அறியும் குழுவை வழிநடத்திய ராஜேந்திர பிரசாத், அரசுக்கு முக்கியமான பரிந்துரைகளை செய்தார். பின்னாளில் அவை சம்பரன் விவசாய சட்டத்தில் (1918) இடம் பெற்றன. இதன் மூலமாக, மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பாரதத்தில் முதல் வெற்றியைப் பெற்றது. இதுவே ராஜேந்திர பிரசாத் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அவர் விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவரானார்.

அக்காலத்தில் விடுதளை வீரரும் புரட்சியாளருமான ஞானி ராகுல் சாங்கிருத்தியாயனுடன் ராஜேந்திர பிரசாத்திற்கு தொடர்பு ஏற்பட்டது. பீகார் வெள்ளச் சேதத்திற்கு ஆளான போதும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போதும், ராஜேந்திர பிரசாத் மீட்டுப் பணிகளில் முன்னின்றார். தொடர் சுற்றுப்பயணம், விடுதலைப் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜேந்திர பிரசாத், 1934 ல் மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியபோதும், மீண்டும் தலைவாரானார் ராஜேந்திர பிரசாத். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் 'பாபுஜி' என்று அழைத்து மகிழ்ந்தனர்.

1947 ல் பாரதம் விடுதலை பெற்றது. அதன் பிறகு, இந்தியாவுக்கான தனித்த அரசியல் சாசனத்தை வகுக்கும் பணி துவங்கியது. அதற்கான குழுவுக்கு பாபு ராஜேந்திர பிரசாத் தலைமை ஏற்றார். அப்போது ஹிந்து சிவில் சட்டம் தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டபோது, நடுநிலைமையுடனும் தேசநலம் குறித்த சிந்தையுடனும் பாபுஜி பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு சிக்கல்களை தீர்த்துவைத்தார்.

1950, ஜனவரி. 26 ல் இந்தியா குடியரசு நாடானது. அதனையடுத்து, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ஆனார், பாபு ராஜேந்திர பிரசாத். 1962, மே 13 வரை நாட்டின் முதல் குடிமகன் என்ற பதவியை வகித்த அவர், வயது காரணமாக தானாகவே ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலத்தில் குடியரசுத் தலைவர் என்ற அரசியல்சாசனப் பதவிகேற்ற பல முன்னுதாரணங்களை அவர் ஏற்படுத்தினார். 1962 ல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1963, பிப். 28 ல் பாபு ராஜேந்திர பிரசாத் மறைந்தார்.

ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவாரக இருந்த காலம், நேரு பிரதமராக இருந்த காலமாகும். நேருவின் பல தவறான முடிவுகளை மாற்றியமைத்ததில் பாபுஜிக்கு இன்றியமையாத பங்குண்டு. நேருவின் மக்கள் செல்வாக்கு நாட்டிற்கு தீங்கு விளைவிக்காமல் கட்டுப்படுத்தியவர் பாபுஜி. இந்தியக் குடியரசை நாகரிகத்துடனும் உறுதியாகவும் கட்டியமைத்தவர் என்று பாபு ராஜேந்திர பிரசாத் போற்றப்படுகிறார்.

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

மணக்கால் அய்யம்பேட்டை | 3:06 PM | Best Blogger Tips
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.

நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.

இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.

இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.

அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.

தெரிந்துக் கொள்வோம்.

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips
தெரிந்துக் கொள்வோம்.

மிகவும் வெப்பமான கிரகம் வீனஸ்.

சீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 214.

கால்சியம் ஆக்சைடின் வர்த்தக பெயர் சுட்ட சுண்ணாம்பு.

இரும்பு துருபிடிக்கும்போது அதன் எடை கூடுகிறது.

மிகப் பெரிய அணு உலை பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது.

உலகில் அதிக அளவில் காபி பயிரிடப்படும் நாடு பிரேசில்.

காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் விஸ்வாமித்திரர்.

தென்னக இரயில்வேயின் தலைமையிடம் சென்னை.

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் இடம் அகும்பி.

நபார்டு வங்கி 1982 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப
்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு

- Lakshmi Kothandaraman.

படம்: "மீனாட்சி அம்மன் திருக்கோவில்"
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

    மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
 
    கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 
    இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
 
    ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு

- Lakshmi Kothandaraman.

படம்: "மீனாட்சி அம்மன் திருக்கோவில்"

Joke

மணக்கால் அய்யம்பேட்டை | 11:58 AM | Best Blogger Tips

சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?

**
ரொம்ப தூரம்........,
* முட்டை போடாத பறவை எது..?

**
ஆண் பறவை.

*
ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?

**
எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

*
பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?

** Mrs.
பில் கேட்ஸ்

*
வருஷத்துல எந்த மாசத்துல
28
நாள் இருக்கு..?

**
எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-
நம்ம Prime Minister பெயர் என்ன.?

** Dr.
மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

*
இந்தியாவுக்கும்., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?

**
இந்தியா Map- இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map- இந்தியா இருக்காது..

*
ஒரு வேளை நீங்க Germany- - பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

**
ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,

ஆறிலும் சாவு , நூறிலும் சாவு --(பழமொழியின் பின்னணி)

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips
' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இதற்கு , சாவு ஆறிலும் வரும் , நூறிலும் வரும் என்றே நாம் எல்லோரும் பொருள் கொள்கிறோம் . வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் , அதன் உண்மையான பொருள் இதுவல்ல .

குருசேத்திர போரில் , போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி , அவனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள் .

அப்போது கர்ணன் கூறுகிறான் : ' தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் .

ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி செத்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் ' என்கிறான் .

இங்கே கர்ணன் கூறியது தான் , மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள்
ஆறிலும் சாவு , நூறிலும் சாவு --(பழமொழியின் பின்னணி).
======================