"புஷ்பிதா"- அருமையான வாழைப்பூ ரெசிபி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:44 AM | Best Blogger Tips

"புஷ்பிதா"- அருமையான வாழைப்பூ ரெசிபி

புஷ்பிதா என்னும் ரெசிபி ஒரு வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. ஏனெனில் இதில் வாழைப்பூ மற்றும் வாழை இலையை பயன்படுத்தி செய்வதால், இதன் சுவையானது அதிகம் இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் உள்ளது. மேலும்வாழைப்பூவில் நார்ச்சத்துடன், வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை அதிகம் நிறைந்திருப்பதால், இது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும்.

குறிப்பாக பைல்ஸ், மலச்சிக்கல் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புஷ்பிதா ரெசிபி மிகவும் நல்லது. இங்கு அந்த புஷ்பிதா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 2
இஞ்சி - 4-6 டேபிள் ஸ்பூன் (துருவியது அல்லது பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் + 2 சிவப்பு மிளகாய் - 4 (விதை நீக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 1 இன்ச்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை

முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை உடனே வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* 2-3 மணிநேரம் ஆனப் பின்னர், நீரை வடித்துவிட்டு, குளிர்ச்சியான நீரில் உடனே அலசி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, வெந்தயம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், சிவப்பு மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சிறிது தூவி, நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து 1/2 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, வாழைப்பூ வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி (அதிகப்படியான தண்ணீரை ஊற்றி விட வேண்டாம்), குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசிலானது போனதும், குக்கரை திறந்து குளிர வைத்து, 1/4 டீஸ்பூன் மசாலா பொடியை தூவி, 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி, சுவை பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் வாழை இலையை எடுத்து, அதில் சிறிது வாழைப்பூ கலவையை வைத்து மடித்து, நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு அடுப்பில் ஒரு நாண் ஸ்டிக் பேன் வைத்து நன்கு சூடானதும், அதில் சிறிது நெய்யை தடவி, அதன் மேல் வாழை இலை பார்சலை வைத்து, 5 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து இறக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து வாழை இலை பார்சலையும் செய்ய வேண்டும்.

இப்போது வாழை இலையை திறந்தால், சுவையான "புஷ்பிதா" ரெசிபி ரெடி!!!

குறிப்பு

* புஷ்பிதா ரெசிபியில் நெய்க்கு பதிலாக, விர்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்தும் செய்யலாம்.

* வாழைப்பூவை சுத்தம் செய்யும் போது, கையில் சிறிது தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிக் கொண்டு சுத்தம் செய்தால், கையில் கறை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* கர்ப்பிணிகள் இந்த ரெசிபியை சமைத்து சாப்பிடும் போது, பெருங்காயத் தூள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

* புஷ்பிதா ரெசிபியை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
 (10 photos)

Via Fb ஆரோக்கியமான வாழ்வு