தொப்பையை குறைக்க வேண்டுமா? வழிமுறைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:39 PM | Best Blogger Tips

ஐடியா - ஒன்று.

சமமான தரையில் கை கால்களை நீட்டி படுத்துக் கொண்டு இரு கைகளையும் எடுத்து தலியின் பின் கோர்த்து வைத்துக் கொள்ளவும்(படுத்துக் கொண்டே தான்) பின்னர் முட்டியை மடக்காமல் அப்படியே எழுந்து தலையால் முட்டியை தொட வேண்டும். கையை தலையில் கட்டிக் கொண்டு செய்ய முடியவில்லை என்றால் கையை தரையில் சமமாக வைத்துக் கொண்டே செய்யலாம். முதன்முதலில் செய்யும் போது 3 அல்லது 5 முறை செய்யவும். பின்னர் அப்படியே படிபடியாக அதிகரித்துக் கொள்ளலாம். ரொம்ப உடலை போட்டு வறுத்திக் கொள்ளாலாமல் செய்யவும்.
ஐடியா -இரண்டு.
இஞ்சியில் தேன் கலந்து முதல் நாள் இரவு வைத்து காலையில் வெறும் வயிற்றில் நாற்பது நாள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் .
ஐடியா -மூன்று .
முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொண்டு குனிந்து கைகளால் கால் கட்டை விரலை தொட முயற்சி செய்ங்க. ஆனால் முதலில் செய்யும் போது விரலை தொட வராது செய்ய செய்ய தான் வரும். மிக முக்கியம் கால்கள் மடங்க கூடாது. முதலில் 6 லிருந்து 10 வரை செய்ங்க அடுத்து அதையே அதிகப்படுத்திக்கோங்க.
அடுத்து கால்களை மடித்து தரையில் உட்கார்ந்துக் கொண்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு குனிந்து தலையால் தரையை தொடவும். இதுவும் முதலில் கஷ்டமாக இருக்கும் போகபோக பழகிவிடும்.
ஐடியா -நான்கு.
தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.
ஐடியா -ஐந்து.
உங்களுக்கு எப்பொழுது எல்லாம் தண்ணீர் தாகம் வருகிறதோ , கண்டிப்பாக சுடு தண்ணீர் மட்டும் குடித்தால் போதும், எண்ணெய் உணவுகள் உண்ணும் போதாவது கட்டாயம் சுடு தண்ணீர் பருக வேண்டும். கண்டிப்பாக பலன் உண்டு. நல்ல சூடாக குடிக்க வேண்டும், வெது வெதுப்பாக இருக்க கூடாது,நல்ல சூடாக இருக்க வேண்டும்.

சுடு தண்ணீர் வயிறு மற்றும் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது, சாப்பிட்டவுடன் நீங்களே உணர முடியும், சுடு தண்ணீர் பருகும் போதே உங்கள் வயிறு மந்தமாக இல்லாமல் இருப்பதை நீங்கள் உணர முடியும்.எளிமை ஆக இருக்கிறது என ஏளனமாக நினைக்க வேண்டாம் , கண்டிப்பாக நல்ல பலன் தரும், நீங்களே இன்னும் சில நாட்களில் சொல்வீர்கள் , இதன் நன்மை பற்றி.* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

நன்றி வேடந்தாங்கல் இணையம்.
 
கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:21 PM | Best Blogger Tips

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும். மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

* கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப் போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

* கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும்.

* சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

* கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

* பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 ஆவது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும். இவையே கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான காரணங்கள்.

வேறு ஏதாவது காரணங்கள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்.....

மணக்கால் அய்யம்பேட்டை | 4:20 PM | Best Blogger Tips

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..... 

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.

ஸ்படிகம்.!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:15 PM | Best Blogger Tips

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

மணக்கால் அய்யம்பேட்டை | 2:20 PM | Best Blogger Tips

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.உலக தமிழ் மக்கள் இயக்கம்

சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:16 PM | Best Blogger Tips

சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள்
சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம் சோளத்தை சுட்டு தருவார்கள் தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும் மற்றும் பொழுது போக்கு சார்ந்த இடங்களிலும் சாப்பிட்டு இருப்போம் . நவீன காலத்தில் பெரும்பான்மையான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் சோளம் சில கலவைகளை சேர்த்து விற்பனை செய்கிறார்கள் . சோளத்தில் இவளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது .சோளம் மிகவும் ஒரு சத்தான பொருளாகவே இருக்கிறது
இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்
ஆற்றல்-349 கி.கலோரி, புரம்-10.4 கிராம், கொழுப்பூ1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி
----------------------------------------------------------
நன்றி : இன்று ஒரு தகவல் பக்கம்

தர்பூசணியை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 PM | Best Blogger Tips
தர்பூசணியை ஃப்ரீஸரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.

நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.

கருப்பஞ்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.

வியர்வையைப் போக்கி ஃப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்துப் பாருங்கள்.

நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.

நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.

கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.

வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.

வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.

வெயில் காலத்தில் மிக அதிகாலையில் அல்லது மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகு செடிகளுக்கு நீர்விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.

செடித் தொட்டிகளில் நீர் விட்டபின் ஒரு பாலிதீன் பேப்பரை சற்று இடைவெளி விட்டுப் பரத்தி ஒரு கல்லை வெயிட்டாக வைத்து விட்டால் எளிதில் நீர் ஆவியாகாது.

கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ஃப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.

கோடை காலத்தில் வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருக்கும் மண், தூசி வடாமில் கலக்காது.

வெயில் காலத்தில் கார இனிப்புப் பண்டங்களை கேஸரோல், ஹாட்பாக்ஸ் இவற்றில் வைத்துவிடுங்கள். எறும்பு பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.
கோடை டிப்ஸ்
By -சி.ஆர்.ஹரிஹரன், சென்னை

தர்பூசணியை ஃப்ரீஸரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.கருப்பஞ்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.வியர்வையைப் போக்கி ஃப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்துப் பாருங்கள்.நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.வெயில் காலத்தில் மிக அதிகாலையில் அல்லது மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகு செடிகளுக்கு நீர்விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.செடித் தொட்டிகளில் நீர் விட்டபின் ஒரு பாலிதீன் பேப்பரை சற்று இடைவெளி விட்டுப் பரத்தி ஒரு கல்லை வெயிட்டாக வைத்து விட்டால் எளிதில் நீர் ஆவியாகாது.கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ஃப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.கோடை காலத்தில் வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருக்கும் மண், தூசி வடாமில் கலக்காது.வெயில் காலத்தில் கார இனிப்புப் பண்டங்களை கேஸரோல், ஹாட்பாக்ஸ் இவற்றில் வைத்துவிடுங்கள். எறும்பு பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.

ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சிறு தானியங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:51 PM | Best Blogger Tips

 • ''சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் மாவுச்சத்து குறைவாகவும், நுண்சத்துகள் அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்த ஓட்டம் சீராகவும், உடல் சோர்வு இல்லாமலும் இருக்கும்.

  சாமையில் இருக்கும் நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

  வரகுக்கு, கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் இருப்பதோடு, நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும் குணமும் உண்டு.

  கேழ்வரகுக்கு, குடல்புண்ணை குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு"

  -சித்த மருத்துவர் வேலாயுதம்
  ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சிறு தானியங்கள்
-------------------------------------------------------------------- 

''சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் மாவுச்சத்து குறைவாகவும், நுண்சத்துகள் அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்த ஓட்டம் சீராகவும், உடல் சோர்வு இல்லாமலும் இருக்கும். 

சாமையில் இருக்கும் நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. 

வரகுக்கு, கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் இருப்பதோடு, நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும் குணமும் உண்டு. 

கேழ்வரகுக்கு, குடல்புண்ணை குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு"

-சித்த மருத்துவர் வேலாயுதம்

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:49 PM | Best Blogger Tips

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

நன்றி
பெட்டகம்

To enjoy Relaxplzz in English step in and like this page
https://www.facebook.com/Relaxplzz1

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

மணக்கால் அய்யம்பேட்டை | 1:21 PM | Best Blogger Tips

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

ஆல்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:18 PM | Best Blogger Tips

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

விழுது, பட்டை, இலை, ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.

1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு தீரும்.

2. ஆலம் பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டுப் புளி, காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.

3. ஆலம் பாலை காலை மாலை தடவி வர வாய்ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.

4. ஆலம் பட்டை, ஆத்திப்பட்டை, அவுரிவேர்ப்பட்டை வகைக்கு 40 கிராம், 10 கிராம் மிளகுடன் சிதைத்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 250 மி.லி. வீதம் தினம் 3 வேளை குடித்து வர பாதரசபாசாணங்களின் வேகம் குறையும்.

5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். 4 நாள்களுக்கு ஒரு முறை தயாரித்துக் கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிட மதுமேகம் தீரும்.

6. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தியாகும்.

7. விழுது துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

8. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.

9. விழுதைக் கொண்டு பல் தேய்த்து வரப் பற்கள் உறுதிப்படும்.

ஆற்றுத்தும்மட்டி(கொம்மட்டி) கொடியின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:17 PM | Best Blogger Tips
ஆற்றுத்தும்மட்டி(கொம்மட்டி) கொடியின் மருத்துவ குணங்கள் :- 

ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத் தன்மை அதிகம் ...இருக்கும். விதைகள் மூலம்இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதற்கு கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி என்ற வேறுப் பெயர்களும் உண்டு.

மருத்துவக் குணங்கள்:

ஆற்றுத்தும்மட்டியின் சமூலம் நுண்புழு கொல்லும். நஞ்சு முறிக்கும்.
காய் சிறு நீர், மலம் பெருக்கும்.

புழுவெட்டினால் முடி கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.

பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக உலர்த்திப் பொடித்து சமனளவு கலந்து அரைத் தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் முறியும்.

தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய், வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம், திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம், சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சின்னலவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப் போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத் தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும் 2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு) 4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள், ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு, இடுப்புவலி, வாயு முதலியவை தீரும்

தமிழ் இலக்கணம் – 1 வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:16 PM | Best Blogger Tips

“வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா?” – இந்தக் கேள்வி இன்று பல தமிழ்வல்லுனர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. இதனால், இதைக் குறித்து நான் படித்து அறிந்தவற்றை நான் இந்தப் பதிவில் பகிர்கிறேன்.
தமிழில் ‘கள்’ தவிர வேறு எத்தனையோ விகுதிகள் இருந்தாலும், இந்த ‘கள்’ விகுதி தரும் குழப்பம் இருக்கிறதே….! ஐயய்யய்யய்யோ…
பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ்த்தேர்வில் ‘பகுபத உறுப்பிலக்கணம்’ என்று ஒரு கேள்வி வரும். அதுக்காக, ப.ச.வி.இ.சா.வி என்று நான் மனப்பாடம் செய்ததும் உண்டு!
ப.ச.வி.இ.சா.வி —> பகுதி,சந்தி,விகாரம்(அலங்கடை),இடைநிலை,சாரியை,விகுதி
பகுக்கக்கூடிய தமிழ்ச்சொற்களில்(பகுபதம்), பகுதி போக வேற ஏதாவது ஒரு உருபாவது இருக்கும்.
எ.கா: வந்தனன் = வா(வ) + ந் + த் + அன் + அன்
இந்த உறுப்புகள் ஒரு பதத்தின் காலத்தை உணர்த்துவதற்கும், ஒருமை/பன்மை, தன்மை/முன்னிலை/படர்க்கை போன்ற நிலைகளை உணர்த்துவதற்கும் பயன்படுகின்றன.
கள்ளில் வந்த குழப்பம்:
‘கள்’ என்பது பன்மையை குறிக்கும் ஒரு விகுதியாக மட்டும் இல்லாமல் ‘பனம்பூ வடிச்சாறு’ எனும் பொருள் தரும் தனிச்சொல்லாகவும் இருக்கிறது. எனவே, ‘கள்’ என்ற விகுதி ஒரு சொல்லோடு சேரும் போது அந்தச் சொல் என்னவாகும், ‘கள்’ என்ற சொல் அதேச் சொல்லோடு புணரும் போது அந்தச் சொல் என்னவாகும் என்பது தான் குழப்பமே.
வாழ்த்து+கள்(சொல்) – வாழ்த்துக்கள்
வாழ்த்து+கள்(விகுதி) – வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்
வேண்டுமென்றே தவறாகப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் ‘வாழ்த்துகள்’(‘க்’ இல்லாமல் சேர்ந்தது) என்ற சொல்லையும் தவறாகப் புரிந்துக்கொள்ளலாம்.
‘வாழ்த்துகள்’ என்ற சொல்லை ஒரு வினைத்தொகையாக பார்க்கலாம்! (‘ஊறுகாய்’ போல – ஊறுகின்ற காய், ஊறின காய், ஊறும் காய் என முக்கால வினைகளையும் குறிக்கும்)
வாழுகின்ற துகள், வாழ்ந்த துகள், வாழும் துகள் என்று உணர்த்தி வரும் இந்தச் சொல்லை ‘நுண்ணுயிரி’ என்று பொருள் கொள்ளலாமா? ;)
‘கள்’ என்பது விகுதி தான், அது சொல் போல் புணராது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி – “பூக்கள் சரியா? பூகள் சரியா?”

அப்படியென்றால் ‘வாழ்த்துக்கள்’ என்பதை எப்படி புரிந்துக்கொள்வது? பன்மை சேர்த்த ‘வாழ்த்து’ என்றா? வாழ்த்து சொல்லிவிட்டு அருந்தப்படும் ‘கள்’ என்றா?

‘பூக்கள்’ – பூவிலிருந்து எடுக்கப்படும் ‘கள்’, அதாவது ‘தேன்’ என்று புரிந்து குழம்பியிருக்கோமா? ஒரே சொல் பல பொருள்களில் வருவதுண்டு. எ.கா: ‘அரவம்’ என்னும் சொல் ‘ஒலி’ மற்றும் ‘பாம்பு’ என்று இரண்டு பொருள்களில் வரும்!
அரவம்(பாம்பு) தீண்டிய வலி தாங்காமல் அவன் எழுப்பிய அரவம்(ஒலி) என் காதுகளை பதம் பார்த்தது.
எனவே ஒரு சொல்லைச் சுற்றியிருக்கும் மற்றச் சொற்களைப் பொறுத்து தான் அந்தச் சொல் தரும் பொருளை தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடியும்.
“வாழ்த்துக்கள்” சரி என்பதற்கான சான்றுகள்:
“எழுத்துக்கள்”, “வாழ்த்துக்கள்” போன்ற சொற்களை பல தமிழறிஞர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
* தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
* இளம்பூரணர்
* மணக்குடவர்
* சேனாவரையர்
* பரிமேலழகர்
* ஈழத்துச் சைவத் தமிழறிஞர் – ஆறுமுக நாவலர்
‘கள்’ விகுதி சேரும் பொழுது எங்கே ‘க்’ மிகும்/மிகாது என்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.
‘கள்’ விகுதி சேரும் பொழுது ‘க்’ மிகும்/மிகா இடங்கள்:
‘உ’வில் முடியும் சொற்களைப் பற்றி மட்டும் தான் கீழே பார்க்கப் போகிறோம்.
1) “க்” மிகலாம்
* மூவெழுத்து, அதற்கும் அதிகமான எழுத்துள்ள உகரச் சொற்கள் ஒற்றோடு வந்தால் மிகலாம்(கவனிங்க: “மிகணும்” என்று சொல்லவில்லை, “மிகலாம்”)
முத்துக்கள், எழுத்துக்கள், வாழ்த்துக்கள், பழச் சத்துக்கள்
முத்துகள், எழுத்துகள், வாழ்த்துகள், பழச் சத்துகள்
2) “க்” மிகணும்
* ஈரெழுத்துச் சொற்கள் குறிலாக வந்தால் மிகணும்!
பசுக்கள், அணுக்கள், தெருக்கள்
* ஓரெழுத்துச் சொற்கள் வந்தால் மிகணும்!
பாக்கள், ஈக்கள், மாக்கள், பூக்கள்
அலங்கடைகள்: ஐ-யில் முடியும் ஓரெழுத்துச் சொற்கள் – பைகள், கைகள் (ஒரெழுத்து எனினும் ‘க்’ மிகவில்லை!)
3) “க்” மிகவே கூடாது
* ஈரெழுத்துச் சொற்களில் முதலெழுத்து நெடிலாக வந்தால் மிகாது!
வீடுகள், மாடுகள், ஓடுகள்
* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்களுக்கு மிகாது
கொலுசுகள், மிராசுகள், தினுசுகள்
* அது ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ, “வு” வரும் போது மட்டும், மிகவே கூடாது!
ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்

‘கள்’ தரும் இன்னொரு குழப்பம்:

சிலர் ‘நாட்கள்’ தவறு என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் ‘சொற்கள்’,'மரங்கள்’ சரி என்று ஒப்புக்கொள்கிறார்கள். கூர்ந்து நோக்கியபோது ஒன்று புலப்பட்டது. சரியா? அல்லது தவறா? என்று உறுதியாகத் தெரியவில்லை.
மெய்யெழுத்துக்கு முன் குறில் வந்தால் அந்த மெய்யெழுத்து ‘கள்’ விகுதியுடன் சேர்ந்து திரியும்(ல ~ ற,ள ~ ட,ம ~ ங).
(எ.கா) சொற்கள், பொருட்கள், மரங்கள்
மெய்யெழுத்துக்கு முன் நெடில் வந்தால் அந்த மெய்யெழுத்து ‘கள்’ளுடன் சேராது.
(எ.கா) கால்கள், நூல்கள், கடாம்கள், கோள்கள், நாள்கள் (ஆனால், நாட்கள் என்ற சொல்லையும் பலர் பயன்படுத்தியிருக்கின்றனர்!)
பிற மெய்யெழுத்துக்கள் குறில் வந்தாலும்/நெடில் வந்தாலும் திரியாது:
(எ.கா) பொய்கள், காய்கள், பெண்கள், சுவர்கள், தேர்கள், கடன்கள்
ஆனால், இந்த ‘ல்’ எல்லா இடங்களிலும் ‘ற்’ ஆக திரிவதில்லை. ஓரெழுத்துக் குறில் முன்னால் வந்தால் மட்டுமே திரியும் என்று தோன்றுகிறது.
(எ.கா) மயில்கள், கடல்கள், பதில்கள்
போலிகள்:
தமிழில் நிறைய போலிகள்(போலி-போலிருப்பவை) இருக்கின்றன.
கறுப்பு-கருப்பு இரண்டும் நிறத்தைக் குறிக்கும் சொற்களே என்று சிலர் சொல்கின்றனர்.
கருத்தல் = தானாகக் கருமை நிறம் பெறுதல்;
கறுத்தல் = பிறவினையால் கருமை நிறம் பெறுதல்;
என்று ‘வளவு’ இராம.கி ஐயா விளக்கம் கொடுத்திருகிறார்.
பூ+கதவு = பூங்கதவு(பூவைப் போன்ற கதவு – பண்புத்தொகை)/பூக்கதவு (பூவினால் ஆன கதவு – வேற்றுமைத்தொகை)
விரிவாக இங்கே காணலாம்!
இதுபோன்ற நுண்ணிய வேறுபாடுகள் ‘கள்’ விகுதியிலும் வரும் என்று எண்ணுகிறேன்.
(எ.கா) எழுத்துகள் – Writings, எழுத்துக்கள் – Letters
பொருள்கள் – Meanings, பொருட்கள் – Things
கள் வரலாறு:
‘கள்’ என்ற விகுதி முதலில் அஃறினை பன்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். பிற்காலத்தில் அது மெல்ல மெல்ல மற்றச் சொற்களின் பன்மையையும் குறிக்க தொடங்கிவிட்டது. அவ்வளவு ஏன்? ‘அர்’ என்பதே பன்மை விகுதியாகக் கருதப்படும்போது, ‘கள்’ விகுதி ‘அர்’-உடன் சேர்ந்து ‘அர்கள்’ என்று இரட்டைப் பன்மையாக(மிகைதிருத்தம்) வரத்தொடங்கிவிட்டது. (எ.கா: காதலர்கள்) இதுபோன்ற சொற்கள் இப்பொழுது நிறைய புழக்கத்தில் உள்ளது.
இந்தக் கட்டுரைக்கு தரவுகள் தந்து உதவிய @kryesக்கு நன்றிகள்.

ஆப்பிளும்... ஆரோக்கியமும்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:03 PM | Best Blogger Tips

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும்.

இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.

இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.

வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips
இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.

ஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.

சரி, இப்போது உணவில் வாசனைக்காகவும், காரத்திற்காகவும் சேர்க்கும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா!

பட்டை

இந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்த பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.

கிராம்பு

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பை நன்கு தெரியும். அதிலும் இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.

சீரகம்

பெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்.

கருப்பு ஏலக்காய்

கருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாணம் தரும்

குங்குமப்பூ

பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை. ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடலல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது

ஜாதிக்காய்

இதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.

மிளகு

அனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.

பெருங்காயம்

பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்கும் பழங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 PM | Best Blogger Tips
 இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.

அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.
இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.
...
இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.

“An apple a day, keeps the doctor away” இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும்.

இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை.

நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம்.

மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.
இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்.

அக்னிசாட்சியாக திருமணம்....... ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips

இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.

திருமண உறுதி (நிச்சயதார்த்தம்):

திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.

சடங்கு முறைகள் :

அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.
இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.
மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.

தமிழ்திருமுறை, திருமண தீபம்:

மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.

அம்மை அப்பர் கலச வழிபாடு:

மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.

நவகோள் வழிபாடு:

முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.

முளைப்பாலிகை வழிபாடு:

தமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.

மணமக்களை கன்னியர்களாக வரவழைத்தல்:

மணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.

மங்கள நான் வழிபாடு:

மங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.

முன்னோர்கள் வழிபாடு:

­வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.

பாத பூஜை:

பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.

மங்கல நான் ஆகுதி:

அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.

விளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்:

மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.

அக்னி வலம் நிகழ்ச்சி:

மணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.

அம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்:

அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.

ஆசீர்வாத நிகழ்ச்சி:

வேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tipsகீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…..

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

பொதுஅறிவு ! 2

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது

via சுபா ஆனந்தி

பற்களைப் பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய சிம்பிளான வழிகள் இதோ...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips

இன்றைய காலக்கட்டத்தில் நோய் வந்தபிறகு வேதனையோடு சிகிச்சை பெற்றுக்கொள்வதைவிட வருவதற்கு முன்பே பாதுகாத்துக் கொள்வதுதான் ஆரோக்கியத்தின் இரகசியம். அதுவும் நமது உடலில் ஏற்படும் மாறுதல்களையும், நோய்களையும் நாமே உணர முடியும். பலதடவை கண்ணாடியின் முன் நின்று நமது முகத்தை ரசித்து பார்க்கும் நாம், நம் பற்களையும் ரசித்துப் பார்க்க வேண்டும். பற்களை நாக்கின் உணர்வினாலும், பற்களை துலக்கும்போதும், கைவிரல்களின் உணர்வினாலும் பற்களில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தற்காப்பு முறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

பற்களைப் பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய சிம்பிளான வழிகள் இதோ...

பல் சொத்தை, பயோரியா போன்ற பல் நோய்கள் வராமல் தடுக்க வாயை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

காலையிலும், இரவு படுக்கப்போகும் முன்பும் ப்ரஷ்ஷின் மூலம் நன்றாக பல்லை துலக்க வேண்டும். பலர் பல் துலக்க வேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு, கடுமையான அமைப்புள்ள ப்ரஷ்களை வாங்கி தேய் தேய் என்று தேய்த்து பற்களை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள். இதனால் கிருமிகள் ஓடுகிறதோ இல்லையோ உங்கள் பற்களில் தேய்மானம் ஏற்பட்டு வலிமை இழந்து போய்விடும் ஜாக்கிரதை.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருமே ஃப்ளோரைடு பற்பசையைப் (பேஸ்ட்) பயன்படுத்துவது நல்லது.

பிறந்த குழந்தையின் பற்களுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். பாலுக்கும் பல்லுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? தாய்ப்பாலில்தான் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, அழகான முகத்தோடு குழந்தையின் முகம்-தாடை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு பற்களுக்குள் நோய் வராமலும் தடுக்க தாய்ப்பால் உதவுகிறது.

பற்களில் ஒட்டிக் கொள்ளக்கூடிய வெண்சர்க்கரை கொண்ட மிட்டாய், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். இல்லையெனில் குழந்தைகளின் பற்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும்.

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள் பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால், வளரும் குழந்தைகளுக்கு பற்களின் வளர்ச்சி முழுமையாகவும், நிறைவாகவும் இருக்கும்.

எந்தெந்த காய்கறிகளை அல்லது கீரைகளை சமைக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றையெல்லாம் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில், அவை பற்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஊட்டச்சத்தாகவும் இருக்கும்.

சாப்பிட்ட பின்பு வாய்நிறைய நல்ல தண்­ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்த தண்ணீ­ரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும். துப்பக்கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.

ஒவ்வொரு முறையும் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு தேங்காய் துண்டையோ அல்லது ஒரு கேரட்டையோ நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் பற்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள் நீங்கி பற்கள் இயற்கையாகவே சுத்தம் அடைந்துவிடுகின்றன.

பற்களின் இடுக்குகளில் உணவுப் பொருள் சிக்கிக் கொள்ளும்போது அவற்றை எடுக்க 'பல்குச்சி'யைப் பயன்படுத்துவதால், நம் பற்களுக்கும், ஈறுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்குச்சிக்குப் பதிலாக 'டென்டல் ஃப்லாஸ்' (Dental Floss) எனும் நூலை பயன்படுத்தலாம். இதனால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இன்றி பற்களுக்குள் சிக்கிக் கொள்ளும் உணவுத் துணுக்குகளை சுலபமாக அகற்றலாம். சாப்பிடும்போது வாயின் இருபுறமும் சமமாக மென்று சாப்பிடுவது நல்லது.

புகையிலை, பான்பராக், குட்கா போன்றவைகளை அறவே தவிர்க்க வேண்டும். இது பல்லை நாறடித்து பிரச்சினை ஏற்படுத்துவதோடு வாய்ப்புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.

அதிக சூடான உணவுகளையோ பானங்களையோ, அல்லது அதிக குளிர்ச்சியானவற்றையும் தவிர்ப்பது நல்லது.

அதையும் மீறி நம் கண்களுக்குப் புலப்படாமல் நம் பற்களின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கிருமிகளை பல் மருத்துவ நிபுணரின் உதவியோடுதான் விரட்ட முடியும். எனவே, ஆறு மாதங்களுக்கொரு முறையாவது பல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.